அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

புதுச்சேரி அமைச்சருக்கு கரோனா தொற்று

புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் 5,175 பேருக்கு கரோனா; இதுவரை இல்லாத வகையில் 112 பேர் பலி

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் 112 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நலமாக உள்ளார்: மருத்துவமனை

 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் நலமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. விரிவான செய்திக்கு..

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,131 பேருக்கு கரோனா

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) புதிதாக 4,131 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா காலத்தில் கடவுள் பக்தி உயர்ந்திருக்குமா? குறைந்திருக்குமா? ஆய்வு

 ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 16க்கும் மேற்பட்ட மருத்துவ நிலையங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில், கரோனா பேரிடர் காலத்தில் சுமார் 21.2% பேருக்கு கடவுள் பக்தி அதிகரித்திருப்பதாகவும், 18.3% பேருக்கு சற்று கடவுள் பக்தி உயர்ந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..

தாராவியில் இன்று ஒருவருக்கு மட்டுமே கரோனா உறுதி

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (புதன்கிழமை) ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் புதிதாக 5,204 பேருக்கு தொற்று; பாதிப்பு 8,66,627 ஆக உயர்வு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,204 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 8,66,627 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் மேலும் இரு எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் இரு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ பவுன் ராஜ் மற்றும் கருணாஸ்-க்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு கரோனா

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது!

பாகிஸ்தானில் மேலும் 15 பேர் உயிரிழந்ததை அடுத்து கரோனா பலி எண்ணிக்கை 6,014 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,321 பேருக்கு கரோனா தொற்று

அமெரிக்காவில் புதிதாக 46,321 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 47,11,323 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கரோனா; 803 பேர் பலி

 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  விரிவான செய்திக்கு..

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனா தொற்று உறுதி 

 கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  விரிவான செய்திக்கு.. 

சென்னையில் கரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்

 சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து 11,983 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 88,826 பேர் குணமடைந்துள்ளனர். விரிவான செய்திக்கு.. 

மகாராஷ்டிரத்தில் மேலும் 300 பேர் கரோனாவுக்கு பலி

மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 7,760 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் புதிதாக 674 பேருக்கு மட்டுமே கரோனா

தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 674 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,040 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,040 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு தொற்று; ஒரேநாளில் 108 பேர் பலி

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 2,68,285 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் புதிதாக 5,159 பேருக்கு தொற்று; பாதிப்பு 8,61,423 ஆக உயர்வு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,159 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 8,61,423 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியது!

 பாகிஸ்தானில் புதிதாக 432 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,80,461 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com