பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

ஆந்திரத்தில் 2 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 10,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா பாதித்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,06,960ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 89 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னையில் 1,000-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,896 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,880 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 119 பேர் பலி

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 5,880 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,469 பேர் சிகிச்சையில்..

சென்னையில் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,469 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

 

உலக அளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்வு

 உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,89,77,637 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 7,11,220 ஆக அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

நாட்டில் கரோனா பாதிப்பு 19.64 லட்சத்தை தாண்டியது: பலி எண்ணிக்கை 40,699 -ஆக உயர்வு

 கடந்த 24 மணிநேரத்தில் 56,282  பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,64,537 லட்சத்தை தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் புதிதாக 1,298 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,298 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஆந்திரத்தில் 24 மணி நேரத்தில் 10,328 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,328 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,593 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,593 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,658 பேருக்கு கரோனா

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,658 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,614 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 63 பேர் பலியாகினர். இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,918ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 43,654 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,684 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா சிகிச்சைக்கு திறன்பெற்ற ஃபேபிஃப்ளூவை அறிமுகம் செய்திருக்கும் கிளென்மார்க்

 கரோனா சிகிச்சைக்கு அதிக திறன்பெற்ற ஃபேபிஃப்ளூ மருந்தை மும்பையை சேர்ந்த  கிளென்மார்க் மருந்து நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. விரிவான செய்திக்கு..

தாராவியில் புதிதாக 8 பேருக்கு கரோனா

மும்பை தாராவிப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

வாசுதேவநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா தொற்று

வாசுதேவநல்லூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மனோகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் குறைந்த கரோனா: செப். 15 முதல் கல்வி நிறுவனங்கள் திறப்பு

 பாகிஸ்தானில் புதிதாக 727 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,81,863 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் தற்போது 19,770 மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் புதிதாக 5,267 பேருக்கு கரோனா; பாதிப்பு 8,71,894 ஆக அதிகரிப்பு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,267 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 8,71,894 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com