பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்


கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

இந்தியாவில் கரோனா பாதிப்பு 24 லட்சத்தை கடந்தது: பலி 48,040 ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 64,553 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24 லட்சத்து 61ஆயிரத்து 191 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 48,040 -ஆக அதிகரித்தது. 

 
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 64,553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 1007 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 48,040-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த நோய்த்தொற்றுக்காக 6,61,595 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.17,51,556  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை 2,76,94,416 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று வியாழக்கிழமை மட்டும் 8,48,728 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 11,813 பேருக்கு கரோனா: ஒரேநாளில் 413 பேர் பலி

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,846 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,846 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,835 பேருக்கு தொற்று; மேலும் 119 பேர் பலி

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,835 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் மேலும் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி

 மகாராஷ்டிரத்தில் மேலும் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக பிளாஸ்மா வங்கிகள்: விஜயபாஸ்கர்

 நாட்டிலேயே அதிக பிளாஸ்மா வங்கிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

சென்னையில் பிளாஸ்மா தானம் அளித்த 40 காவலர்கள்

 கரோனா தொற்றுக்குள்ளாகி, அதில் இருந்த மீண்ட 40 காவலர்கள் இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் அளித்தனர். விரிவான செய்திக்கு..

 

விநாயகர் சிலைகளை வைக்கவும் ஊர்வலத்துக்கும் அனுமதி இல்லை: தமிழக அரசு

 தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுவிடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அதனை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 23,29,639 ; பலி 46,091 ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 61,537 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 23 லட்சத்து 29 ஆயிரத்து 639 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 46,091-ஆக அதிகரித்தது. 
 
அதில், புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 834 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 46,091 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த நோய்த்தொற்றுக்காக  6,43,948 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 16,39,600 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஆகஸ்ட் 11- ஆம் தேதி வரை 2.60 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டும் முதல் முறையாக 7,33,439 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 

அமெரிக்காவில் மேலும் 54519 பேருக்கு தொற்று; பலி 1,67,749 ஆக உயர்வு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54519 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுகிறது. 
 
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 54519 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 53,05,957 ஆக அதிகரித்துள்ளது. 
 
மேலும், அதே கால அளவில் 1,504  உயிரிழந்தனர். இது மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,67,749 கோடியைக் கடந்தது.  அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து  27,55,348 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 

உலகம் முழுவதும் 2.05 கோடியை தாண்டியது கரோனா பாதிப்பு

 
ஜெனீவா: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 2,05,21,660 கோடியை கடந்தது.
 
உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி, புதிதாக 10,500 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,05,21,660 கோடியைக் கடந்தது.  
 
அமெரிக்காவில் 53,05,957 பேரும், பிரேஸிலில் 31,12,393 பேரும், ரஷியாவில் 8,97,599 பேரும், தென்னாப்பிரிக்காவில் 5,66,109 பேரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
 
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 1,002 உயிரிழந்தனர். இதையடுத்து கரோனா தொற்று உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7,45,918-ஆக இருந்தது. அமெரிக்காவில் 1,67,749 பேரும், பிரேஸிலில் 1,03,099 பேரும், மெக்ஸிகோவில் 53,929 பேரும், இந்தியாவில் 46,188 பேரும் உயிரிழந்தனா்.
 
உலகம் முழுவதும் நோய்த் தொற்றுக்கு 63,34,351 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 64,618 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
இதனிடையே, கரோனா நோய்த்தொற்று பரவல் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டிருந்த நியூஸிலாந்தில், 102 நாள்களுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் அந்த நோய்த்தொற்று புதிதாக 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான்: 2,85,191-ஆக அதிகரித்த பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,85,191-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 
கடந்த 24 மணி நேரத்தில் 531 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,85,191-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 15 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,112-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,61,246 போ் குணமடைந்துள்ளனா். 17,833 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 780 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிங்கப்பூா்: மேலும் 61 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் மேலும் 61 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

 
கடந்த 24 மணி நேரத்தில் 61 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானவா்கள் பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளா்கள் ஆவா்.இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55,353-ஆக உயா்ந்துள்ளது.செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 50,128 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 5,198 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதல் முறையாக கரோனா தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம்: ரஷியாஅதிரடி அறிவிப்பு

தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை பரவலாகப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக முதல் முறையாக ரஷியா அறிவித்துள்ளது.அந்த மருந்து சிறப்பான முறையில் செயல்படுவதாகவும், தனது மகளுக்கு அந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா். விரிவான செய்திக்கு...

நியூஸிலாந்து: 102 நாள்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா

கரோனா நோய்த்தொற்று பரவல் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டிருந்த நியூஸிலாந்தில், 102 நாள்களுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் அந்த நோய்த்தொற்று புதிதாக 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டுப் பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்ன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

 
ஆக்லண்ட் நகரில் 4 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். அதையடுத்து, அந்த நகரம் 3-ஆம் நிலை கரோனா அபாயப் பகுதியாக அறிவிக்கப்படுகிறது. புதன்கிழமை முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது.ஆக்லண்டில் கரோனா பரவியுள்ளதையடுத்து, நாட்டின் பிற பகுதிகளிலும் 2-ஆம் நிலை கரோனா அபாயம் அறிவிக்கப்படுகிறது என்றாா் அவா்.புதிய அறிவிப்பைத் தொடா்ந்து, ஆக்லண்ட் நகரில் மக்கள் வீடுகளில் தங்கியிருக்க வலியுறுத்தப்படுவாா்கள். உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள் மற்றும் ஏராளமான வணிக மையங்கள் மூடப்படும்.செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நியூஸிலாந்தில் 1,570 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 22 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 1,526 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 22 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சென்னையில் 993 பேர்; பிறமாவட்டங்களில் 4,878 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,878 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு தொற்று; மேலும் 119 பேர் பலி

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,871 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

அமெரிக்காவில் மேலும் 49,536 பேருக்கு தொற்று; பாதிப்பு 51 லட்சத்தை எட்டியது!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 49,536 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

இந்தியாவில் ஒரேநாளில் 53,601 பேருக்கு கரோனா; 871 போ் பலி

 இந்தியாவில் ஒரேநாளில் 53,601 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  விரிவான செய்திக்கு..

 

கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாருக்கு கரோனா

 காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி வசந்தகுமார். இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. அதோடு அவரது மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  விரிவான செய்திக்கு..

பிரணாப் முகர்ஜி உடல்நிலை சற்று கவலைக்கிடம்: பிடிஐ தகவல்

 குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகா்ஜிக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து அவருக்கு திங்கள்கிழமை வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மூளையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. எனினும் அவா் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் இருக்கிறாா்.  விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் புதிதாக 11,088 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 11,088 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கர்நாடகத்தில் புதிதாக 6,257 பேருக்கு கரோனா: மேலும் 86 பேர் பலி

கர்நாடகத்தில் புதிதாக 6,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் புதிதாக 1,257 பேருக்கு கரோனா உறுதி

தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,848 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,848 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,834 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனாவை வென்ற முதியவர் மனைவியை இழந்த சோகம்

 ஒடிசா மாநிலத்தில் 80 வயது முதியவர் கரோனா தொற்று பாதித்து குணமடைந்த நிலையில், கரோனா தொற்றுக்கு அவரது மனைவி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்துக்கு ரூ.9,000 கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்

 தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.9 ஆயிரம் கோடி தேவைப்படுவதாகவும், அதில் 3 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். விரிவான செய்திக்கு..

டிசம்பர் வரை பள்ளிகள் திறப்பில்லை: மத்திய உயர்கல்வித் துறை செயலாளர்

 கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com