அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

கரோனா: இந்தியாவில் 50 ஆயிரத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை

 இந்தியாவில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஆந்திரத்தில் 8,012, கர்நாடகத்தில் 7,040 பேருக்கு கரோனா

ஆந்திரத்தில் புதிதாக 8,012 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,040 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் 20 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 11,111 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,754 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 4,754 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,950 பேருக்கு கரோனா: மேலும் 125 பேர் பலி

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,950 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் புதிதாக 4,969 பேருக்கு தொற்று; பாதிப்பு 9,22,853 ஆக அதிகரிப்பு

ரஷியாவில் புதிதாக 4,969 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 9,22,853 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு 25 லட்சத்தை கடந்தது: பலி 49,036 ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 65,002 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25 லட்சத்து 26 ஆயிரத்து 193 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 48,040 -ஆக அதிகரித்தது. 
 
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 65,002 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 996 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 49,036-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த நோய்த்தொற்றுக்காக 6,68,220 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18,08,937 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
கரோனா தொற்று நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிரத்தில் இதுவரை 1,51,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,01,442 தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு 19,427 பேர் பலியாகியுள்ளனர். 

அமெரிக்காவில் மேலும் 60,600 பேருக்கு தொற்று; பலி 1,71,535 ஆக உயர்வு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,600 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுகிறது. 
 
உலக நாடுகள் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முதலில் தொற்று பரவிய ஐரோப்பிய நாடுகளில்  கரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் வேகமாக உள்ளது. 
 
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேலும் புதிதாக 60,600 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 54,76,266 ஆக அதிகரித்துள்ளது. 
 
மேலும், அதே கால அளவில் 1,284 உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,71,535 கோடியைக் கடந்தது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 28,75,147 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

உலகம் முழுவதும் 2.13 கோடி பேர் பாதிப்பு; பலி 7,63,387 ஆக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,13,57,890 கோடியை கடந்தது.

 
உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, புதிதாக 12,619 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,13,57,890 கோடியைக் கடந்தது.  
 
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 723 உயிரிழந்தனர். இதையடுத்து கரோனா தொற்று உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7,63,387-ஆக இருந்தது. இதுவரை அமெரிக்காவில் 1,71,535பேரும், பிரேஸிலில் 1,06,571 பேரும், மெக்ஸிகோவில் 55,908 பேரும், இந்தியாவில் 49,148 பேரும் உயிரிழந்துள்ளனர்.
 
உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,41,51,766ஆகவும், 64,42,737பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 64,559 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.   

சென்னையில் 1,179, பிற மாவட்டங்களில் 4,681 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) 4,681 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

​தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு கரோனா: மேலும் 127 பேர் பலி

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,860 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

பிகாரில் 1 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

பிகாரில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

ஒடிசாவில் புதிதாக 1,977 பேருக்கு கரோனா: மேலும் 10 பேர் பலி

 புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,977 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.

 

பிரேசிலில் ஒரேநாளில் 60,091 பேருக்கு தொற்று; 1,261 பேர் பலி

பிரேசிலில் புதிதாக 60,091 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 32,24,876 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பது 10% பேர் மட்டுமே

 சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே இன்றைய நிலவரப்படி சிகிச்சையில் உள்ளனர். விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு 24 லட்சத்தை கடந்தது: பலி 48,040 ஆக அதிகரிப்பு

 நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 64,553 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24 லட்சத்து 61ஆயிரத்து 191 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 48,040 -ஆக அதிகரித்தது. 

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 64,553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 1007 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 48,040-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நோய்த்தொற்றுக்காக 6,61,595 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.17,51,556  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை 2,76,94,416 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று வியாழக்கிழமை மட்டும் 8,48,728 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பாதிப்பு:  24,61,191 
பலி:  48,040
குணமடைந்தோர்: 17,51,556 
சிகிச்சை பெற்று வருவோா்: 6,61,595 

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 12,608 பேருக்கு கரோனா; 364 பேர் பலி

இந்தியாவில் கரோனா வைரஸ் அண்மை தினங்களாக வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 12,608 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் மேலும் 147 காவலர்களுக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 147 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.  இத்துடன் மாநிலத்தில் கரோனாவல் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 11,920ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா தொற்று

கேரள மாநிலத்தில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,094ஆக உயர்ந்துள்ளது. 

 

சென்னையில் 1,187 பேர்; பிறமாவட்டங்களில் 4,703 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,703 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு தொற்று; ஒரேநாளில் 117 பேர் பலி

தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) புதிதாக 5,890 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

வெளிநாடு, வெளிமாநிலத்திலிருந்து வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும்: தமிழக அரசு

 வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. விரிவான செய்திக்கு..

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதல்வர் பழனிசாமி

 முக்கிய பணிகளுக்காக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கோழிக்கோடு விமான விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் உள்பட பலருக்கு கரோனா

 கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நேரிட்ட விமான விபத்தில், மீட்புப் பணியில் ஈடுபட்ட நிர்வாக அதிகாரிகள், காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

வீட்டில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு சிறப்பு பெட்டகம்: முதல்வர் வழங்கினார்

 லேசான அறிகுறியுடன் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் கரோனா நோயாளிகளுக்கு குறைந்த விலையில் சிறப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை  முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் புதிதாக 626 பேருக்கு தொற்று; 15,962 பேர் சிகிச்சையில் உள்ளனர்

பாகிஸ்தானில் புதிதாக 626 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,87,300 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com