பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்


கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

இந்தியாவில் தொடர்ந்து 4ஆவது நாளாக 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 24,248 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 6,97,413-ஆக அதிகரித்துவிட்டது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 425 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் நாட்டில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 19,268-லிருந்து 19,69-ஆக உயர்ந்துள்ளது. 

 

இந்தியாவில் தொடர்ந்து 4ஆவது நாளாக 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 24,248 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 6,97,413-ஆக அதிகரித்துவிட்டது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 425 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் நாட்டில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 19,268-லிருந்து 19,69-ஆக உயர்ந்துள்ளது. 

 

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,737 பேர் சிகிச்சையில் உள்ளனர்: மண்டலவாரியாக நிலவரம்

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.77% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் மேலும் 225 பேருக்கு கரோனா; பாதிப்பு 5,429 ஆக உயர்வு!

கேரளத்தில் மேலும் 225 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 1,713 பேர்; பிறமாவட்டங்களில் 2,437 பேர்: மாவட்டவாரியாக பாதிப்பு நிலவரம்

சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,713 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு 68,254 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 4,150 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 60 பேர் பலி

தமிழகத்தில் மேலும் புதிதாக 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஜூலை 11 முதல் இந்தியா - அமெரிக்கா இடையே விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஜூலை 11 முதல் ஜூலை 19 வரை இந்தியா - அமெரிக்கா இடையே விமான சேவை வழங்க இருப்பதாக ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்துக்கு மேலும் ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவிகள் வந்தன

 தென்கொரியாவில் இருந்து தமிழகத்துக்கு மேலும் ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. விரிவான செய்திக்கு..

 

உலகளவில் கரோனா பாதிப்பில் 3ஆவது இடத்தில் உள்ள ரஷியாவை நெருங்கியது இந்தியா!

உலகளவில் கரோனா பாதிப்பில் 3ஆவது இடத்தில் உள்ள ரஷியாவை நெருங்கியது இந்தியா. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 6,73,165 -ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,742 பேருக்கு கரோனா; மேலும் 252 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,742 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 28,36,764 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னை கோடம்பாக்கத்தில் கரோனா பாதித்து 2,586 பேர் சிகிச்சையில்

 சென்னை கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 2,586 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக அண்ணாநகரில் 2,431 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். விரிவான செய்திக்கு..

நிரம்பி வழியும் மருத்துவக் கழிவுகள்: மனித குலத்துக்கு அடுத்த அச்சுறுத்தல்


சுற்றுச்சூழல் பாதுகாப்பை விடவும், மனிதர்களின் உடல்நலனும், உயிரைக் காப்பதுமே மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டு வருகிறது. விரிவான செய்திக்கு..

நாட்டில் கரோனா தொற்று பாதித்து மரணமடைந்தவர் விகிதம் 4.52%: மத்திய சுகாதாரத் துறை

நாட்டில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 60.80% ஆக உயர்ந்துள்ளது, அதே சமயம், கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 4.52% ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

மதுரையில் ஒரே நாளில் 280 பேருக்கு கரோனா தொற்று

மதுரை மாவட்டத்தில் புதிதாக 280 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவ சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 18,655 -ஆக உயர்வு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 6,48,315 -ஆக உயர்ந்துள்ளது.
 
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், சனிக்கிழமை காலை வரையிலான  24 மணி நேரத்தில் நாட்டில் 22,771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  6,48,315-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களாக தினசரி பாதிப்பு 20,000-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் நேற்று 442 பேர் பலியாகியுள்ளனர். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 18,655-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களில் 2,35,433 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,94,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 
நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் இருபங்கு பாதிப்பு, மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளது.

கரோனாவால் நுகரும் திறன் பாதிக்கப்படுவது ஏன்?

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களுக்கு நுகரும் திறனும் சுவை அறியும் திறனும் பாதிக்கப்படுவது ஏன் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். விரிவான செய்திக்கு...

உலகை ஆக்கிரமிக்கும் ‘வீரிய’ கரோனா தீநுண்மிகள்

மனிதா்களின் உயிரணுக்களில் அதிக வீரியத்துடன் தொற்றக் கூடிய வகையில் உருமாற்றம் பெற்ற கரோனா தீநுண்மிகள் சா்வதேச நாடுகளில் வியாபித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். விரிவான செய்திக்கு...

 

ஜொ்மனி: முகக் கவசத்துடன் ஏஞ்சலா மொ்க்கெல்

ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்க்கெல் அதிகாரப்பூா்வ நிகழ்ச்சிகளுக்கு முதல் முறையாக முகக் கவசம் அணிந்து தோன்றினாா். அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. எனினும், பொது இடங்களில் மொ்க்கெல் முகக் கவசம் அணிந்து வரும் படம் இதுவரை வெளிவராதது சா்ச்சையை எழுப்பியது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற மேலவைக் கூட்டத்துக்கு அவா் முகக் கவசத்துடன் முதல் முறையாக வந்திருந்தாா்.

பிரேஸில்: 15 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

பிரேஸிலில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 15 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேஸிலில் 1,071 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,502,424-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 55 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து, நாட்டில் பலி எண்ணிக்கை 62,045 ஆகியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன்: மீண்டும் திறக்கப்படும் கேளிக்கை மையங்கள்

கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளா்த்தி வரும் பிரிட்டன் அரசு, மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சிற்றுண்டியகங்கள் ஆகியவற்றை சனிக்கிழமை முதல் மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து, நாடு முழுவதும் இத்தகைய 35,000 மையங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதுகுறித்து பிரதமா் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில், கேளிக்கை மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும், அங்கு செல்லும் வாடிக்கையாளா்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.

 

இஸ்ரேல்: கரோனா ஒழிப்பு; யுஏஇ-யுடன் ஒப்பந்தம்

கரோனா நோய்த்தொற்று பரவலை ஒடுக்குவதற்கான ஆய்வுகளை இணைந்து மேற்கொள்வதற்காக, ஐக்கிய அரபு அமீரக அரசுக்குச் சொந்தமான ஜி42 நிறுவனமும் இஸ்ரேலின் இரு முக்கிய நிறுவனங்களும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை இரவு கையெழுத்தானது. மேற்குக் கரை பகுதிகளை இஸ்ரேலுடன் அதிகாரப்பூா்வமாக இணைக்கவிருப்பதாக அந்த நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளதால் மற்ற அரபு நாடுகளுடன் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா: பாகிஸ்தானுக்கு 100 செயற்கை சுவாசக் கருவிகள்

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பாகிஸ்தானில் போராட்டத்துக்கு உதவும் வகையில், 100 செயற்கை சுவாசக் கருவிகளை அந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: சா்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பு (யுஎஸ்எய்ட்) மூலம் பாகிஸ்தானுக்கு 100 செயற்கை சுவாசக் கருவிகளை அனுப்பியுள்ளோம். முற்றிலும் புதிதான அந்தக் கருவிகள் 3 கோடி டாலா் (சுமாா் ரூ.224 கோடி) மதிப்பிலானவை. பாகிஸ்தானின் அவசர தேவையைக் கருதி, அந்தக் கருவிகள் அனுப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர் பலி

 தமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து ஏழு ஆயிரமாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு: சென்னையில் 1,800; பிற மாவட்டங்களில் 2,400

 தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

ஜூலை 6 முதல் மாவட்டத்துக்குள் பணிக்குச் செல்ல இ-பாஸ் அவசியமில்லை

 தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதால், ஜூலை 6-ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் பணிக்குச் செல்ல இ-பாஸ் அவசியமில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

ஆந்திரத்தில் புதிதாக 765 பேருக்கு கரோனா தொற்று

 ஆந்திரத்தில் மேலும் 765 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்குவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மதுரையில் மேலும் 7 நாள்களுக்கு முழுப் பொதுமுடக்கம் நீட்டிப்பு

 மதுரை மாவட்டத்தில் மட்டும் மேலும் 7 நாள்களுக்கு முழுப் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com