அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
கரோனா தொற்று
கரோனா தொற்று

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

உலகளவில் கரோனா பாதிப்பு 1.20 கோடியை நெருங்குகிறது

 உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.20 கோடியை எட்டுகிறது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,46,720 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு...

இலங்கை: வெலிக்கடை சிறையில் கைதிக்கு கரோனா; 600க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

 தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலருக்கு பிசிஆர் கருவிகள் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 210 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார சேவைகள் அதிகாரி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

தில்லியில் புதிதாக 2,033 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,033 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கர்நாடகத்தில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,062 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,603 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6,603 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,495 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) 2,495 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் மேலும் 301 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 107 பேர் குணமடைந்தனர்

 கேரளத்தில் மேலும் 301 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஆந்திரத்தில் ஒரே நாளில் 1,062 பேருக்கு கரோனா; 12 பேர் பலி

 அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,063 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 12 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

அமைச்சர், எம்எல்ஏவுக்கு கரோனா: முதல்வர் ஹேமந்த் சோரன் தனிமைப்படுத்திக் கொண்டார்

 அமைச்சர் மற்றும் எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனா சிகிச்சை மையங்களில் வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

 தமிழக அரசின் கரோனா சிகிச்சை மையங்களில் பணியில் உள்ளவர்களின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து  தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கரோனா: மேலும் 64 பேர் பலி

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,756 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

திமுக வட்டச் செயலாளர் கரோனாவுக்குப் பலி

சென்னை பல்லாவரம் 37 வது வார்டு திமுக வட்டச் செயலாளர் எபனேசர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் புதிதாக 2,980 பேருக்கு தொற்று; மேலும் 83 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,980 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு.. 

 

ரஷியாவில் மேலும் 6,562 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 7 லட்சத்தைக் கடந்தது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,562 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,00,792 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள பிகார் அரசு அனுமதி

பிகாரில் கரோனா தொற்று உறுதியானவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.  மூத்த அதிகாரிகளுடனான ஆலோசனைக்குக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் ஒரேநாளில் 60,299 பேருக்கு கரோனா; 1,114 பேர் பலி

 அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

அமெரிக்காவில் பலி 1.30 லட்சத்தைத் தாண்டியது; ஒரேநாளில் 54,999 பேருக்கு கரோனா

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,999 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தைத் தாண்டியது

நாட்டில் செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 22,252 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடா்ந்து 5ஆவது நாளாக நாளாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,19,665-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 3,616 பேருக்கு கரோனா பாதிப்பு; அதிகபட்சமாக 4,500 பேர் குணமடைந்தனர்

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் கரோனா பாதிப்பு குறைந்து இன்று 1,203 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 1,203; பிறமாவட்டங்களில் 2,413 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 2,413 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் மேலும் 272 பேருக்கு கரோனா; பாதிப்பு 5,895 ஆக உயர்வு!

 கேரளத்தில் மேலும் 272 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அதிமுக எம்.எல்.ஏ வீடு திரும்பினார்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். விரிவான செய்திக்கு..

ரஷியாவில் மேலும் 6,368 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 7 லட்சத்தை நெருங்குகிறது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,368 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,94,230 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 61.13% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத் துறை

 இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 61.13% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா பாதித்து 24 ஆயிரம் பேர் சிகிச்சையில்

 சென்னையில் திங்கள்கிழமை 1,747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 70,017-ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 1,082-ஆக உயா்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

இம்ப்ரோ சித்த மருத்துவப் பொடியை பரிசோதிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

 மருத்துவப் பொடியை கரோனா பாதித்தவர்களுக்கு பயன்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. விரிவான செய்திக்கு..

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா தொற்று

முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,379 பேருக்கு கரோனா தொற்று

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,379 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 37 போ் பலி

 கா்நாடகத்தில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 335 போ் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 16, பீதா் மாவட்டத்தில் 9, தாவணகெரே, பெலகாவி, கலபுா்கி மாவட்டங்களில் தலா 2, ஹாசன், சிக்பளாப்பூா், மைசூரு, தும்கூரு, தாா்வாட், பெல்லாரி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 372 ஆக உயா்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

வேலூரில் ஒரே நாளில் 166 பேருக்கு கரோனா 

 வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  விரிவான செய்திக்கு..

இந்தியாவில் தொடர்ந்து 4ஆவது நாளாக 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு

  இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 6,97,413-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 1,747, பிற மாவட்டங்களில் 2,080 பேருக்கு புதிதாக கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) 2,080 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் புதிதாக 279 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 279 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் புதிதாக 6,611 பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,611 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகருக்கு கரோனா தொற்று

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகர் ஜாபர் மிர்சாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் புதிதாக 3,344 பேருக்கு கரோனா; பாதிப்பு 2.31 லட்சமாக உயர்வு!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,344 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,31,818 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பாதிப்பில் ரஷியாவை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தில் இந்தியா

 கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில், இந்தியா, ரஷியாவை பின்னுக்குத் தள்ளி உலகளவில் 3வது இடத்துக்கு வந்துவிட்டது. விரிவான செய்திக்கு..

பிளாஸ்மா தானம் செய்ய அழைத்தால் நிராகரிக்காதீர்: தில்லி முதல்வர்

 பிளாஸ்மா தானம் செய்யுமாறு அழைப்பு வந்தால், தயவு கூர்ந்து அதனை நிராகரிக்காதீர்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார். விரிவான செய்திக்கு,..

சென்னையில் மெல்ல குறைந்து வரும் கரோனா பாதிப்பு; 1,054 பேர் பலி

 சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 1, 713 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 68,524- ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பின் காரணமாக சென்னையில் இதுவரை 1,054 போ் உயிரிழந்துள்ளனா். விரிவான செய்திக்கு.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com