பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

உலகளவில் கரோனா பாதிப்பு 1.23 கோடி

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,705 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,23,89,559 -ஆக உயர்ந்துள்ளது. அதே கால அளவில் 804 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5,57,405 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 71,87,447 போ் குணமடைந்துவிட்டதாகவும் 46,44,707 போ் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இவர்களில் 58,456 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,067 பேருக்கு தொற்று

அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் வியாழக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத வகையில் 61,067 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
 
கடந்த 24 மணி நேரத்தில் 61,067 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 32,19,999 ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 960 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,35,822 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை 14,26,428 பேர் குணமடைந்துள்ளனர்.
 
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரு தினங்களாக பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு தொற்று உறுதி: பலி எண்ணிக்கை 21,604 -ஆக உயர்வு

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,93,802-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 21,604-ஆக அதிகரித்தது.
 
வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 26,506  பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 475 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 21,604  -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த நோய்த்தொற்றுக்காக 2,76,685 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,95,513 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 2,30,599

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,30,599 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 1,27,259 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,667ஆக உயர்ந்துள்ளது. 

தில்லியில் புதிதாக 2,089 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் புதிதாக 2,089 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,140 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு இன்று கரோனாவால் 42 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னையில் 1,205 பேர்; பிறமாவட்டங்களில் 2,475 பேர் பாதிப்பு: மாவட்டவாரியாக நிலவரம்

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் இன்று 1,205 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு தொற்று; பாதிப்பு 1.30 லட்சத்தைத் தாண்டியது!

தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) புதிதாக 3,680 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பிளாஸ்மா தெரபி மூலமாக கரோனாவுக்கு சிகிச்சை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலமாக கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்டார் முதல்வர் எடியூரப்பா

வீட்டு ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். விரிவான செய்திக்கு..

 

கரோனா தடுப்பு நடவடிக்கை: தலைமைச் செயலகம் 2 நாள்களுக்கு மூடல்

 கரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலகம் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு மூடப்படுகிறது.

சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நாளை முதல் இரண்டு நாள்களுக்கு மூடப்படுகிறது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரமாகக் குறைந்தது

 சென்னையில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களில் இதுவரை 52 ஆயிரத்து 287 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 20 ஆயிரத்து 271 போ் மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனா். விரிவான செய்திக்கு..

அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கரோனா தொற்று

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

 

சென்னையின் கரோனா தாக்கம் மெல்ல குறைகிறது; 21 ஆயிரம் பேர் சிகிச்சையில்

 சென்னையில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் மெல்ல குறைந்து வருகிறது. 72 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 49 ஆயிரம் பேர் குணமடைந்து, 21 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,060 பேருக்கு தொற்று

 அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,060 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் கரோனா: காவல்துறையில் 1360 பேருக்கு பாதிப்பு

 கரோனா தடுப்புப் பணியில் காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதனால் கரோனாவுக்கு காவல்துறையினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு விடுதியில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கரோனாவால் பாதிக்கப்படும் அனைத்துக் காவலா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரிவான செய்திக்கு..

‘காற்றின் மூலம் கரோனா பரவலாம்’: நிலைப்பாட்டை மாற்றியது உலக சுகாதார அமைப்பு

 கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காற்றில் மிதந்து மனிதா்களிடையே பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு: 7,42,417; பலி-20,642

 இந்தியாவில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 20,642 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 482 போ் உயிரிழந்தனா். விரிவான செய்திக்கு..

கர்நாடகத்தில் புதிதாக 2,228 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,228 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,875 பேருக்கு கரோனா: மேலும் 219 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் 2-வது நாளாக 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 339 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் பிறந்து 25 நாட்களே ஆன குழந்தை கரோனாவுக்குப் பலி

தமிழகத்தில் பிறந்து 25 நாட்களே ஆன குழந்தை ஒன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,015 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) 3,015 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 4,231 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 3,994 பேர் குணமடைந்தனர்

 தமிழகத்தில் இன்று புதிதாக 4,231 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பரிசோதனைக்காக வரிசையில் காத்திருந்த கர்ப்பிணிக்கு பிரசவம்

 பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிக்கு கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டதால், பரிசோதனைக்காக வரிசையில் காத்திருந்த போதே குழந்தை பிறந்த சம்பவம் லக்னௌவில் நடந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: மத்திய அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தும் சிறிய மாநிலங்கள்

 பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பாதிப்பு வேகம் உயர்ந்து வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. விரிவான செய்திக்கு..

கரோனாவுக்கு எதிராக வலுவான போரை இந்தியா நடத்துகிறது: பிரதமர் மோடி 

 கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றும், கரோனாவுக்கு எதிராக வலுவான போரை இந்தியா நடத்துகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தை அச்சுறுத்தும் கரோனா: ஒரே நாளில் 1,555 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி

 ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 1,555 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 13 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,359 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,40,848 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன்? உயர் நீதிமன்றம்

 கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,509 பேருக்கு கரோனா; மேலும் 176 பேர் உயிரிழப்பு

 ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,509 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,07,301 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கரோனா தொற்று இல்லை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை: அமைச்சர் ஹர்ஷவர்தன்

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com