அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

கரோனா: 9 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், நாட்டில், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,06,752 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் அந்த நோய்த்தொற்றால் மேலும் 553 போ் உயிரிழந்தனா். 

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்தது

 சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17,469 ஆகக் குறைந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாள்கள் இந்தியாவை விட மும்பையில் அதிகம்: சுமாராக 50 நாள்கள்

 இந்தியாவை விட, பிரிஹன்மும்பை மாநகராட்சியில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 50 நாள்களாக உள்ளதாக மும்பையின் மூத்த அரசு நிர்வாகி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

இந்தியாவில் ஒரே நாளில் 28,701 பேருக்கு கரோனா பாதிப்பு; 500 பேர் பலி

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 28,701 பேருக்கு கரோனா உறுதியானது. கரோனா தொற்றில் இருந்து இதுவரை 5,53,471 போ் குணமடைந்தனா். 3,01,609 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனாவுக்கு மேலும் 500 போ் உயிரிழந்தனா். மொத்தத்தில், கரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் இதுவரை 23,174 போ் உயிரிழந்தனா். 

 

கேரளத்தில் 449, கர்நாடகத்தில் 2,738 பேருக்கு புதிதாக கரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 449 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 2,738 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,497 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 6,497 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 1,140; பிறமாவட்டங்களில் 3,188 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு நிலவரம்

சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,140 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு 78,573 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கரோனா; மேலும் 66 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 4,328 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் மேலும் 6,537 பேருக்கு தொற்று; பாதிப்பு 7,33,699 ஆக அதிகரிப்பு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,537 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,33,699 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

தெலங்கானா ராஜ் பவன் ஊழியர்கள் 48 பேருக்கு தொற்று; தமிழிசைக்கு கரோனா இல்லை

 தெலங்கானா ராஜ்பவனில் பணியாற்றும் 48 ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயம், ஆளுநர் தமிழிசைக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது: ஆர்.பி. உதயகுமார்

 தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் கரோனா தொற்று சென்னையில் படிப்படியாக குறைந்து வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் ஒரேநாளில் 59,747 பேருக்கு தொற்று; பாதிப்பு 33 லட்சத்தைக் கடந்தது!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,747 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' கருவியை அதிகளவில் பயன்படுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு

கரோனா நோயாளிகளின் இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட 'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' என்ற கருவியை அதிகளவில் பயன்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் ஒரேநாளில் 66,528 பேருக்கு தொற்று; மேலும் 760 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 28,637 பேருக்கு கரோனா பாதிப்பு

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுகிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 28,637 பேருக்கு கரோனா உறுதியானது. இதன் மூலமாக தொடா்ந்து 9-ஆவது நாளாக 22,000-க்கும் அதிகமானோா் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 5,34,621 போ் குணமடைந்தனா்.  2,92,258 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனாவுக்கு மேலும் 551 போ் உயிரிழந்தனா். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையில் 1,168; பிறமாவட்டங்களில் 3,076 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு நிலவரம்

 சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,168 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு 77,338 ஆக அதிகரித்துள்ளது.விரிவான செய்திக்கு..

சென்னையில் 1,168; பிறமாவட்டங்களில் 3,076 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு நிலவரம்

சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,168 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு 77,338 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 4,244 பேருக்கு கரோனா; மேலும் 68 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

மதுரையில் மேலும் இரு நாள்களுக்கு முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு

மதுரையில் முழு பொது முடக்கம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் இரு நாள்களுக்கு பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் புதிதாக 2,521 பேருக்கு கரோனா; மேலும் 74 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,521 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,48,872 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

மதுரையில் மேலும் சில நாள்கள் முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு? - அமைச்சர் பரிந்துரை

மதுரையில் முழு பொது முடக்கம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் சில நாட்கள் பொது முடக்கத்தை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கோடம்பாக்கம், அண்ணா நகரில் கரோனா சிகிச்சை பெறுவோர் அதிகம்: மண்டலவாரியாக பாதிப்பு நிலவரம்

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

முதல் முறை: கரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா

 தில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் கரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மும்பை தாராவியில் கட்டுப்படுத்தப்பட்ட கரோனா: உலக சுகாதார அமைப்பு பாராட்டு

 ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திய நடவடிக்கைக்கு உலக சுகாதார அமைப்பு தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ராயபுரத்தில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1500க்கும் கீழ் குறைந்தது

 வடசென்னைக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் தொடக்கத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது, தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. விரிவான செய்திக்கு..

கரோனாவிலிருந்து காக்கும் 12 ஆசனங்கள்!

 கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் நாள்தோறும் 12 விதமான யோகாசனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைந்தது

 இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழப்பவா்களின் விகிதம் குறைந்துள்ளதாகவும், கரோனாவில் இருந்து குணமடைந்து வருவோரின் விகிதம் அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

'செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'

 செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் 8 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு: 10 ஆயிரத்தைத் தாண்டியது மொத்த பலி

மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 8,139 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தில்லியில் புதிதாக 1,781 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,781 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,780 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்

தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) 2,780 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 3,965 பேருக்கு கரோனா: மேலும் 69 பேர் பலி

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 3,965 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தொடர்ந்து உச்சம் தொடும் அமெரிக்கா; ஒரே நாளில் 70,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா

 அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தைத் தொட்டுவருகிறது. அந்த நாட்டில் வெள்ளிக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத வகையில் 70 ஆயிரம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  விரிவான செய்திக்கு..

உலகளவில் கரோனா பாதிப்பு 1.26 கோடி; பலி எண்ணிக்கை 5.62 லட்சம்

 உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5.62 லட்சமாக உயர்ந்துள்ளது.  விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com