பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,632 பேருக்கு தொற்று

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,641 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கர்நாடகத்தில் 4 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,169 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் புதிதாக 1,652 பேருக்கு கரோனா

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,652 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 1,157 பேர்; பிறமாவட்டங்களில் 3,392 பேருக்கு கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 3,392 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 4,549 பேருக்கு கரோனா; மேலும் 69 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 4,549 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் புதிதாக 6,428 பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,428 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 63.20% ஆக உயர்வு

 கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.20% உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் 7,975 பேருக்கு கரோனா: மேலும் 233 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 7,975 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

காஞ்சிபுரம் ஆட்சியருக்கு கரோனா உறுதி

காஞ்சிபுரம் ஆட்சியர் பா. பொன்னையாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கடந்த 24 மணி நேரத்தில் 20,572 பேர் குணமடைந்துள்ளனர்: மத்திய அரசு

கடந்த 24 மணி நேரத்தில் 20,572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் புதிதாக 623 பேருக்கு கரோனா: முதல்வர் பினராயி விஜயன்

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 623 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,422 பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,422 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,205 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 3,205 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 4,496 பேருக்கு கரோனா: மேலும் 68 பேர் பலி

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 4,496 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஊழியருக்கு கரோனா: ஸ்ரீநகரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் மூடல்

ஸ்ரீநகரில் உள்ள பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(பிஎஸ்என்எல்)இன் முக்கிய கட்டண வசூல் மையத்தில் ஊழியர் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டதால் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் அலுவலகம் மூடப்பட்டது. 

உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,81,317 ஆக உயர்வு

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.34 கோடியை தாண்டியது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5.81 லட்சமாக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி

 கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ நெருங்குகிறது

 சென்னையில் செவ்வாய்க்கிழமை 1,078 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 79,662- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 1,295 போ் உயிரிழந்துள்ளனா். விரிவான செய்திக்கு..

கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியது ரஷியா

 கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை மனிதா்களிடம் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் கரோனா தடுப்பு மருந்தை சா்வதேச அளவில் முதன் முதலில் வெற்றிகரமாக தயாரித்துள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: 9 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு

 இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், நாட்டில், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,06,752 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் அந்த நோய்த்தொற்றால் மேலும் 553 போ் உயிரிழந்தனா்.  விரிவான செய்திக்கு..

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கரோனா தொற்று இல்லை: தமிழக அரசு

 முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கொள்ளப்பட் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,448 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 3,448 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் 4,500-ஐத் தாண்டியது இன்றைய பாதிப்பு: மேலும் 67 பேர் பலி

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,526 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 ஆயிரமாகக் குறைந்தது

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,601 ஆகக் குறைந்துள்ளது. விரிவான செய்திக்கு..

பஞ்சாப்புக்கு வந்து 72 மணி நேரத்தில் சென்றுவிட்டால்..: தனிமைப்படுத்தல் இல்லை

 இதர மாநிலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு வந்து வெறும் 72 மணி நேரத்தில் சென்றுவிட்டால், 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று மாநில அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

பிகாரில் ஜூலை 16 முதல் மீண்டும் பொதுமுடக்கம்; பாஜக தலைவர்கள் 75 பேருக்கு கரோனா

 பிகார் மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்த மாநிலத்தில் ஜூலை 16 முதல் 31 வரை மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com