பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

கரோனாவில் இருந்து பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி இரண்டுக்கும் முக்கியத்துவம்: பிரதமர் மோடி உரை

 ஒரு பக்கம் கரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் கவனம் செலுத்தினாலும், அதே சமயம், மற்றொரு பக்கம் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

விமானிக்கு கரோனா உறுதி: உணவு, குடிநீர் இல்லாமல் அலைக்கழிக்கப்பட்ட ஏர் இந்திய ஊழியர்கள்

 வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு வரும் பணியில் ஈடுபட்டிருந்த ஏர் இந்தியா விமானிக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட போது, ஏர் இந்திய ஊழியர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமானிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

3 ஆயிரத்தை நெருங்கும் ராயபுரம்; சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம்

 சென்னையில் உள்ள ராயபுரம் மண்டலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,935 ஆக உள்ளது. துவக்கம் முதலே இந்த மண்டலத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 18 லட்சத்தைத் தாண்டியது

அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் மூன்றாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று

 தமிழகத்தில் இன்று புதிதாக 1,091 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

உலக நாடுகளில் இந்தியாவில்தான் இறப்பு விகிதம் (2.82%) குறைவு: மத்திய சுகாதாரத் துறை

 இந்தியாவில் கரோனா இறப்பு விகிதம் 2.82 சதவிகிதமாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

'தில்லி கரோனா': காலியாக இருக்கும் வென்டிலேட்டர், படுக்கை வசதியை அறிய உதவும் செயலி

 மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 'தில்லி கரோனா' என்ற செயலியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிமுகப்படுத்தியுள்ளார். விரிவான செய்திக்கு..

சென்னையில் நாள்தோறும் 4,000 பேருக்கு கரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி

 சென்னையில் மட்டும் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்க பரிசீலனை: முதல்வர் பழனிசாமி

 கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8-ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8-ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி அளிக்க திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் ஒரேநாளில் 3,938 பேருக்கு தொற்று; மேலும் 78 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,938 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 76,398 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஜெர்மனியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்வு!

 ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 213 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 598 பேர் பலி

 அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 598 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

விஞ்ஞானிக்கு கரோனா; ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடல்

விஞ்ஞானி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தில்லியில் உள்ள ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடப்பட்டது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்குகிறது

 சென்னையில், ஒரே நாளில் 804 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 14,802-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 129-ஆக உயா்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பாதிப்பில் 7 ஆம் இடத்தில் இந்தியா! பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளை விஞ்சியது

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் இடத்தை அடைந்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

இந்தியாவை அச்சுறுத்தும் கரோனா: புதிதாக 8,392 பேருக்கு பாதிப்பு; 230 பேர் பலி

 இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு கடந்த ஒரு சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் புதிதாக 8,392 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஜிப்மா் மருத்துவா் உள்பட 9 பேருக்கு கரோனா பாதிப்பு

 புதுச்சேரி ஜிப்மா் மருத்துவா் உள்பட மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புதுவையில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70-ஆக உயா்ந்தது.

கரோனா: நெல்லையில் 28 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

 திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 384 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் இருந்து சனிக்கிழமை 16 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை 28 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கா்நாடகத்தில் கரோனாவுக்கு மேலும் இருவா் உயிரிழப்பு

 கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுத் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 49 போ் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், பீதா், ராய்ச்சூரு மாவட்டங்களைச் சோ்ந்த இருவா் இறந்துள்ளனா். பீதா் மாவட்டத்தைச் சோ்ந்த 75 வயது ஆண் காய்ச்சல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, மே 18ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு ரத்த அழுத்தமும் இருந்துள்ளது. இந்நிலையில், இவா், மே 29ஆம் தேதி இறந்தாா். இவரைப் சோதித்துப் பாா்த்ததில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை உறுதியாகியுள்ளது.

கரோனா: மகாராஷ்டிரம், மும்பை, தாராவி நிலவரம்

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவி ஆகிய பகுதிகளில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

தில்லி: 20 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு, 500-ஐத் தாண்டியது பலி

தில்லியில் இன்று ஒரேநாளில் 990 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் ஒரேநாளில் 967 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் இன்று (திங்கள்கிழமை) ஒரேநாளில் 967 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டவாரியான விவரங்களுக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 1162 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,162 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: கேரளத்தில் 57, கர்நாடகத்தில் புதிதாக 187 பேருக்கு தொற்று

கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 57 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 187 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,964 பேருக்கு கரோனா பாதிப்பு

 பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,964 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை  72,460 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனாவில் இருந்து மீண்டு பணியில் இணைந்த காவல்துறையினருக்கு ஏ.கே. விஸ்வநாதன் வாழ்த்து

 கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, கூடுதல் ஆணையாளர் மற்றும் 49 காவல்துறையினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் வாழ்த்து தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். விரிவான செய்திக்கு..

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,035 பேருக்கு தொற்று; பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,035 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,14,878 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

கரோனா பாதிப்பு அதிகரித்து பின் கட்டுக்குள் வரும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

 சென்னையில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து பின் கட்டுக்குள் வரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ஒரு வாரத்துக்கு தில்லியின் அனைத்து எல்லைகளும் மூடல்: அரவிந்த் கேஜரிவால்

 கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு வாரத்துக்கு தில்லியின் அனைத்து எல்லைகளும் மூடி சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கடந்த 24 மணி நேரத்தில் ஜெர்மனியில் 333 பேர்; துருக்கியில் 839 பேருக்கு தொற்று

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 333 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com