பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

ஜெர்மனியில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு; மேலும் 407 பேருக்கு தொற்று

 ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 407 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

நாட்டில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்த 5-ஆவது மாநிலமானது ராஜஸ்தான்!

ராஜஸ்தானில் கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது. விரிவான செய்திக்கு..

 

தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில்60 பேருக்கு கரோனா தொற்று

 சென்னை: சென்னை தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில்60 பேருக்கு கரோனா தொற்று

 சென்னை: சென்னை தண்டையாா்பேட்டையில் ஒரே தெருவில் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 120 பேர் பலி

 மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் மட்டும் 2739 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82968ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 120 பேர் பலியான நிலையில் ஒட்டுமொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 2849-ஆக உயர்ந்துள்ளது.

 

காவல் உதவி ஆய்வாளா் உள்பட 3 பேருக்கு கரோனா

 திருவெண்காடு காவல்நிலைய உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையம் சனிக்கிழமை மூடப்பட்டது.

 

காவல் உதவி ஆய்வாளா் உள்பட 3 பேருக்கு கரோனா

 திருவெண்காடு காவல்நிலைய உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையம் சனிக்கிழமை மூடப்பட்டது.

 

மேற்கு வங்கத்தில் 2 நீதிபதிகளுக்கு கரோனா தொற்று

 மேற்கு வங்கத்தில் 2 மாவட்ட நீதிபதிகளுக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதிப்புக்குள்ளான 2 நீதிபதிகளும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் இன்று மட்டும் 1,146 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக பட்டியல்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு தொற்று; பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியது!

 தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,458 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் ஒரேநாளில் 197 பேர் பலி; மேலும் 8,855 பேருக்கு தொற்று

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,855 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,58,689 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஆயிரத்தை நெருங்கும் வளசரவாக்கம்

 சென்னையில், வெள்ளிக்கிழமை, 1116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 19,826-ஆக அதிகரித்துள்ளது.  விரிவான செய்திக்கு..

லேசான அறிகுறி, அறிகுறி இல்லாதவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டாம்: தில்லி அரசு

 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அவர்களுக்கு லேசான அறிகுறி இருந்தாலோ அல்லது அறிகுறியே இல்லாவிட்டாலோ அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டாம் என்று தில்லி நல்வாழ்வுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் நேற்று காவலர்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை

 கரோனா பாதிப்பில் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கும் மாநிலமாக உள்ள மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காவலர்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையையும் கரோனா பாதிப்பு விட்டுவைக்கவில்லை. விரிவான செய்திக்கு..

திருவள்ளூரில் ஒரே நாளில் 52 பேருக்கு கரோனா பாதிப்பு

 சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் கடுமையாக இருக்கும் நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. விரிவான செய்திக்கு..

சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிக்கு கரோனா தொற்று

 சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் உள்ள மின்சார பராமரிப்புப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  விரிவான செய்திக்கு..

வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகள்!

 மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது பிரசாதம், புனித தீர்த்தம் அளிக்கக் கூடாது என்பது உள்பட கடைபிடிக்க வேண்டிய பல புதிய வழிமுறைகள் மத்திய அரசு வெளியிடப்பட்டு உள்ளது. 

மதுரையில் கரோனாவிற்கு 72 வயது மூதாட்டி பலி 

 மதுரை மேல் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி. இவர் ரத்தழுத்தம் மற்றும் நீரழிவு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இதற்கிடையில் அவருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மூதாட்டி தனியார் மருத்துவமனையில் இருந்து மதுரை அரசு கரோனா மருத்துவமனைக்கு வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் மூதாட்டி சிகிச்சை பலனின்றி அன்றைய தினம் நள்ளிரவில் உயிரிழந்தார்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது

 நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,26,770-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 273 பேர் பலியாகியுள்ளனர். 

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 9,851 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகமாகும்.

கரோனாவால் மேலும் 273 போ் உயிரிழந்தையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 6,348-ஆக உயா்ந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் பலி, 4 பேருக்கு புதிதாக தொற்று

இதுகுறித்து மகாராஷ்டிர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது, மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரு காவலர் பலியானார். இத்துடன் ஒட்டுமொத்தமாக பாதிப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 2,561 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 31 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சென்னையில் மட்டும் இன்று 1,116 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக பட்டியல்

 சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 1,438 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 12 பேர் பலி

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 1,438 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் இருந்து 5,355 பேர் மீண்டனர்

 கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 5355 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,09,462 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 48.27 சதவீதம். தற்போது மொத்தம் 1,10,960 பேர் சிகிச்சையில் உள்ளனர். அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அவரது மனைவிக்கு கரோனா பாதிப்பு

 நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com