அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

கரோனா: இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்வு

 கடந்த 24 மணிநேரத்தில் 11502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,20,922லிருந்து 3,32,424ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 325 பலியாகியுள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 9,195ருந்து 9,520ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379லிருந்து 1,69,798ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் தொடர்ந்து 3ஆவது நாளாக 10 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

இந்தியாவில் தொடர்ந்து 3ஆவது நாளாக கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,993லிருந்து 3,20,922 ஆக உள்ளது. 

 

சென்னையில் மட்டும் புதிதாக 1,415 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,415 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 1,974 பேருக்கு கரோனா தொற்று: 38 பேர் பலி

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,974 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

புதுச்சேரியில் தீவிரமடையும் கரோனா: ஒரேநாளில் 18 பேருக்கு தொற்று உறுதி

புதுவையில் ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மேலும், பாதிப்பு எண்ணிக்கையும் 200ஐ நெருங்கியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சிங்கப்பூரில் புதிதாக 407 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 40,604 ஆக அதிகரிப்பு!

சிங்கப்பூரில் புதிதாக 407 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். விரிவான செய்திக்கு..

 

தில்லியில் இன்று மட்டும் 2,134 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,134 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,427 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 3,427 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 11,458 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,993-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 386 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 8,884-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,45,779 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,54,330 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 11,458 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,993-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 386 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 8,884-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,45,779 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,54,330 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மட்டும் 1,487 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் புதிதாக 1,487 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 1,989 பேருக்கு கரோனா: சென்னையில் மட்டும் 1,487

தமிழகத்தில் புதிதாக 1,989 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

10 நாள்களில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்வு

 இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டி வெறும் 10 நாள்களிலேயே சனிக்கிழமை காலை நிலவரப்படி மூன்று லட்சத்தை எட்டிவிட்டது. விரிவான செய்திக்கு..

கரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறியதை ஒப்புக்கொள்ள மத்திய அரசு பிடிவாதம்: நிபுணர்கள்

 இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறிவிட்டது, ஆனால் நாட்டின் உண்மை நிலவரத்தை தெரிவிக்கும் வகையில் ஐசிஎம்ஆரின் தரவுகள் இல்லை என்று நிபுணர்கள் கருத்துக் கூறியுள்ளனர். விரிவான செய்திக்கு..

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ கே. பழனிக்கு கரோனா பாதிப்பு

 கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  விரிவான செய்திக்கு..

கட்டுக்குள் அடங்காத கரோனா: நாள்தோறும் உயரும் பாதிப்பால் அச்சத்தில் சென்னைவாசிகள்

 சென்னையில், வெள்ளிக்கிழமை, 1479 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 28,924-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா நோயாளிகளுக்கு முத்த சிகிச்சை அளித்த பாபாவையே வீழ்த்திய கரோனா; அது மட்டுமா?

 உலகம் முழுவதும் சுமார் 77 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இதுவரை நான்கரை லட்சம் பேரின் உயிரை மாய்த்த கரோனாவுக்கு முத்த சிகிச்சை அளித்து குணப்படுத்துவதாகக் கூறிய பாபா கரோனாவுக்கு பலியாகியுள்ளார். விரிவான செய்திக்கு..

குணமடைவோர் விகிதம் 49.95 சதவீதம்: மத்திய அரசு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 49.95 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

குணமடைவோர் விகிதம் 49.95 சதவீதம்: மத்திய அரசு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 49.95 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா தொற்று.. முழு நிலவரம்

கரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்குகிறது

 உலகம் முழுவதும் கரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. சர்வதேச அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிகக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்குகிறது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கரோனா தொற்று

 இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது! இன்று மட்டும் 3,493 பேருக்கு தொற்று உறுதி

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

மும்பை தாராவியில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது!

தாராவியில் புதிதாக 29 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா இரட்டிப்பு விகிதம் 17.4 நாள்களாக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 17.4 நாள்களாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் புதிதாக 78 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 78 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் மட்டும் இன்று 1,477 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்

தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,477 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

நீரிழிவு நோயாளிகளாக இருப்பினும் வீண் பயம் வேண்டாம்

தனிமைப்படுத்தப்படுவோர் வெளியே சென்றால் வழக்குப் பதிவு: சென்னை மாநகராட்சி ஆணையர் 

 தனிமைப்படுத்தப்பட்டு வரும் நபர்கள்  வீடுகளை விட்டு வெளியே சென்றால், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனா ஆய்வு: 'ஓ' ரத்த வகை பாதுகாப்பு, 'ஏ' ரத்த வகைகள் எச்சரிக்கை

 தனிமைப்படுத்தப்பட்டு வரும் நபர்கள்  வீடுகளை விட்டு வெளியே சென்றால், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனா தீநுண்மி: இதே நிலை நீடித்தால் ஜூலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பிவிடும்

 கரோனா தொற்றுப் பரவல் தற்போதிருக்கும் நிலைலேயே நீடித்தால், கரோனா பாதித்து தீவிர சிகிச்சை தேவைப்படுவோரால், நாட்டில் உள்ள அனைத்து தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் நிரம்பி விடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 1,982 பேருக்கு தொற்று; சென்னையில் மட்டும் 1,479 பேர்!

தமிழகத்தில் புதிதாக 1,982 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் புதிதாக 8,987 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 5,11,423 ஆக அதிகரிப்பு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,987 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,11,423 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் கோரிக்கை

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சிங்கப்பூரில் புதிதாக 463 பேருக்கு கரோனா; பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது!

சிங்கப்பூரில் புதிதாக 463 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஜெர்மனியில் மேலும் 258 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 258 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 1,85,674 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா நோயாளிகளுக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 112 ஆம்புலன்ஸ்கள் வரவழைப்பு

கரோனா நோயாளிகளுக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 112 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா நிலவரம்

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,397 பேருக்கு தொற்று உறுதி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,397 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,25,933 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

 சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா பாதிப்பிலும், இறப்பிலும் ராயபுரமே முதலிடம்

 சென்னை தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல், கரோனா தொற்றுக்கும் தலைநகராக மாறி வரும் நிலையில், ராயபுரம் கரோனா தொற்று பாதிப்பில் மட்டும் அல்லாமல் இறப்பிலும் முதலிடத்தில் உள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்

சென்னை: தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி: முதல்வர் 

 ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி: முதல்வர்

ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். விரிவான செய்திக்கு...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com