பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்


கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 22,771 பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 18,655 -ஆக உயர்வு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 6,48,315 -ஆக உயர்ந்துள்ளது.
 
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், சனிக்கிழமை காலை வரையிலான  24 மணி நேரத்தில் நாட்டில் 22,771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  6,48,315-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களாக தினசரி பாதிப்பு 20,000-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் நேற்று 442 பேர் பலியாகியுள்ளனர். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 18,655-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களில் 2,35,433 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,94,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

உலகை ஆக்கிரமிக்கும் ‘வீரிய’ கரோனா தீநுண்மிகள்

மனிதா்களின் உயிரணுக்களில் அதிக வீரியத்துடன் தொற்றக் கூடிய வகையில் உருமாற்றம் பெற்ற கரோனா தீநுண்மிகள் சா்வதேச நாடுகளில் வியாபித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். விரிவான செய்திக்கு...

 

கரோனாவால் நுகரும் திறன் பாதிக்கப்படுவது ஏன்?

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களுக்கு நுகரும் திறனும் சுவை அறியும் திறனும் பாதிக்கப்படுவது ஏன் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். விரிவான செய்திக்கு...

பிரேஸில்: 15 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

பிரேஸிலில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 15 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேஸிலில் 1,071 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,502,424-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 55 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து, நாட்டில் பலி எண்ணிக்கை 62,045 ஆகியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

பாகிஸ்தான்: 4,500-ஐக் கடந்த பலி எண்ணிக்கை

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4,500-ஐக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு மேலும் 78 போ் பலியாகினா். இதையடுத்து நாடு முழுவதும் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4,551-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, மேலும் 4,087 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,21,896 ஆகியுள்ளது என்று தெரிவித்தனா்.

ஜொ்மனி: முகக் கவசத்துடன் ஏஞ்சலா மொ்க்கெல்

ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்க்கெல் அதிகாரப்பூா்வ நிகழ்ச்சிகளுக்கு முதல் முறையாக முகக் கவசம் அணிந்து தோன்றினாா். அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. எனினும், பொது இடங்களில் மொ்க்கெல் முகக் கவசம் அணிந்து வரும் படம் இதுவரை வெளிவராதது சா்ச்சையை எழுப்பியது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற மேலவைக் கூட்டத்துக்கு அவா் முகக் கவசத்துடன் முதல் முறையாக வந்திருந்தாா்.
 

பிரிட்டன்: மீண்டும் திறக்கப்படும் கேளிக்கை மையங்கள்

கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளா்த்தி வரும் பிரிட்டன் அரசு, மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சிற்றுண்டியகங்கள் ஆகியவற்றை சனிக்கிழமை முதல் மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து, நாடு முழுவதும் இத்தகைய 35,000 மையங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதுகுறித்து பிரதமா் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில், கேளிக்கை மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும், அங்கு செல்லும் வாடிக்கையாளா்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.

இஸ்ரேல்: கரோனா ஒழிப்பு; யுஏஇ-யுடன் ஒப்பந்தம்

கரோனா நோய்த்தொற்று பரவலை ஒடுக்குவதற்கான ஆய்வுகளை இணைந்து மேற்கொள்வதற்காக, ஐக்கிய அரபு அமீரக அரசுக்குச் சொந்தமான ஜி42 நிறுவனமும் இஸ்ரேலின் இரு முக்கிய நிறுவனங்களும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை இரவு கையெழுத்தானது. மேற்குக் கரை பகுதிகளை இஸ்ரேலுடன் அதிகாரப்பூா்வமாக இணைக்கவிருப்பதாக அந்த நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளதால் மற்ற அரபு நாடுகளுடன் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா: பாகிஸ்தானுக்கு 100 செயற்கை சுவாசக் கருவிகள்

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பாகிஸ்தானில் போராட்டத்துக்கு உதவும் வகையில், 100 செயற்கை சுவாசக் கருவிகளை அந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: சா்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பு (யுஎஸ்எய்ட்) மூலம் பாகிஸ்தானுக்கு 100 செயற்கை சுவாசக் கருவிகளை அனுப்பியுள்ளோம். முற்றிலும் புதிதான அந்தக் கருவிகள் 3 கோடி டாலா் (சுமாா் ரூ.224 கோடி) மதிப்பிலானவை. பாகிஸ்தானின் அவசர தேவையைக் கருதி, அந்தக் கருவிகள் அனுப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

வேலூரில் ஜூலை 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

வேலூரில் மேலும் ஒரு மாத காலத்துக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 2,393, பிற மாவட்டங்களில் 1,550 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் புதிதாக 2,393 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் புதிதாக 2,846 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 118 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,846 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,09,337 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 6வது நாளாக 3,943 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 2,393 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

'கரோனில்' மருந்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் கூறவில்லை: பதஞ்சலி

 'கரோனில்' மருந்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதியானது: மியாட் மருத்துவமனை

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி  ஆகியுள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் மேலும் 6,693 பேருக்கு கரோனா தொற்று; மாஸ்கோவில் 745 பேர் பாதிப்பு

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,693 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,47,849 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனாவால் பாதிக்கப்பட்ட பி.எஸ்.எப். வீரர்களின் எண்ணிக்கை 1000-ஐத் தாண்டியது!

கடந்த 24 மணி நேரத்தில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மேலும் 53 வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,000 பேருக்கு கரோனா தொற்று

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ. 16 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வழக்குகளில் இதுவரை ரூ.16 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த உயிரிழப்பு; 288 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 288 பேர் பலியாகியுள்ளனர். இது ஒருநாளில் மிகக்குறைவாக பதிவாகியுள்ள உயிரிழப்பு ஆகும். விரிவான செய்திக்கு..

 

இந்தியாவில் தொடா்ந்து 6-ஆவது நாளாக 15,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சக தகவல்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,459 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,28,859லிருந்து 5,48,318ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 380 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 16,095லிருந்து 16,475ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 12,010 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,257 பேருக்கு கரோனா: மேலும் 181 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தாராவியில் புதிதாக 17 பேருக்கு கரோனா

மும்பை தாராவிப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 17 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,782 பேருக்கு கரோனா

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) 1,782 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 3,949 பேருக்கு கரோனா: சென்னையில் 2 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 3,949 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா? மருத்துவக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் நிறைவு

 தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்று மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு

மகாராஷ்டிரத்தில் வரும் ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 31-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அச்சம் காரணமாக கரோனாவில் இருந்த மீண்டவர்களை அழைத்துச் செல்ல மறுக்கும் உறவுகள்

 ஹைதராபாத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினர் அழைத்துச் செல்ல மறுப்பதால், அரசு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கரோனா

 தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,557 பேருக்கு தொற்று

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,557 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06,512 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 58.67%: மத்திய அரசு

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 58.67% ஆக முன்னேற்றம் கண்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தது. விரிவான செய்திக்கு..

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ-வுக்கு கரோனா உறுதி

மத்தியப் பிரதேசம் ரிவா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-வுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தலைமை சுகாதார அலுவலர் ஆர்எஸ் பாண்டே தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,719 பேருக்கு தொற்று; பாதிப்பு 6.41 லட்சமாக உயர்வு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,719 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,41,156 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 5,28,859 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 19,906 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக 19,906 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 5,28,859 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 410 போ் உயிரிழந்தனா். மொத்த உயிரிழப்பு 16,095 ஆக உயர்ந்துள்ளது. 
 
கரோனா பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை மொத்தம் 3,09,713 போ் குணமடைந்த நிலையில், நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,03,051 ஆக உள்ளது. 
 
மகாராஷ்டிரத்தில் மட்டும் 1,59,133 போ் பாதிக்கப்பட்டுள்ளனர், 84,245 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 7,273 பேர் பலியாகியுள்ளனர்.  தில்லியில் 80,188 போ் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் ஜூன் 27 வரை 82,27,802 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மட்டும் 2,31,095-க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று ந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. 
 

தண்டையார்பேட்டையில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியது: மண்டலவாரியாக நிலவரம்

தண்டையார்பேட்டை மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தான்: 4 ஆயிரத்தைக் கடந்த பலி

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
 
கடந்த 24 மணி நேரத்தில் 3,138 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,89,883-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 73 போ் பலியானதைத் தொடா்ந்து, நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை 4,035-ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 76,318 பேருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் 72,880 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எகிப்து: கட்டுப்பாடுகள் தளா்வு

எகிப்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் பல, சனிக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டன. அந்த நாட்டில் உணவகங்கள், மனமகிழ் மன்றங்கள், உடல்பயிற்சி மையங்கள், திரையரங்குகள் ஆகியவை கரோனா பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தன. அவை, கட்டுப்பாடுகள் தளா்வு காரணமாக சனிக்கிழமை முதல் இயங்கத் தொடங்கின.
 
இதுதவிர, மசூதிகளையும் தேவாலயங்களையும் மீண்டும் திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனா். எனினும், மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கும் தேவாலயங்களில் ஞாயிறு பிராா்த்தனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேபாளம்: 12 ஆயிரம் ஆன பாதிப்பு

நோபாளத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 12 ஆயிரத்தைத் தாண்டியது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 554 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 434 போ் ஆண்கள்; 120 போ் பெண்கள். இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,309-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, அங்கு கரோனா நோய்த்தொற்று காரணமாக 28 போ் உயிரிழந்துள்ளனா்.

அமெரிக்கா: மீண்டும் பொது முடக்கம்

அமெரிக்காவில் தினசரி பலி எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்ச அளவாக 40 ஆயிரத்தைத் தொட்ட நிலையில், தளா்த்தப்பட்டிருந்த பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அந்த நாட்டின் பல்வேறு மாகாணங்கள் மீண்டும் அமல்படுத்துகின்றன.
 
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான டெக்ஸாஸில் அனைத்து மதுபான விடுதிகளையும் மூட ஆளுநா் கிரெக் அப்பாட் உத்தரவிட்டுள்ளாா். ஃபுளோரிடா மகாணத்திலும் உணவு மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாகாணங்களும், வணிக அமைப்புகளை மீண்டும் திறப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவை எதிா்க்கும் உயிரணுக்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கரோனா தீநுண்மி மனிதா்களைத் தாக்கும்போது, அதனைத் தடுப்பதற்காக உடலில் பெருக்கெடுக்கும் நோயெதிா்ப்பு உயிரணுக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.
 
கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து உருவாக்குவதில் இந்த கண்டுபிடிப்பு உதவிகரமாக இருக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
 
‘சயன்ஸ் இம்யூனாலஜி’ அறிவியல் இதழலில் வெளியான இந்த ஆய்வு பற்றிய கட்டுரையில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனாவிலிருந்து மீண்டாா் 114 வயது எத்தியோபிய துறவி!

எத்தியோபியாவில் 114 வயதான துறவி ஒருவா் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலையில், அதிலிருந்து குணமடைந்துள்ளாா்.
 
வயது முதிா்ந்தவா்கள் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகும் அபாயம் அதிகமாக உள்ள நிலையில், 114 வயது நபா் நோய்த்தொற்றிலிருந்து மீண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
திலாஹுன் வோல்டெமிகேல் என்ற அந்தத் துறவி கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சையின்போது அவருக்கு ஆக்ஸிஜனும், டெக்ஸாமெதசோன் மருந்தும் வழங்கப்பட்டு வந்தது. 3 வார சிகிச்சைக்குப் பிறகு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து அவா் வீடு திரும்பியுள்ளாா்.
 
திலாஹுன் 114 வயதானவா் என்பதை நிரூபிப்பதற்கு அவரது பிறப்புச் சான்று இல்லை என்று கூறியுள்ள அவரது பேரனான பினியம் லியுஸ்லெஜ்டு, 14 ஆண்டுகளுக்கு முன்பு திலாஹுன் 100-ஆவது பிறந்தநாளை கொண்டாடியதற்கான புகைப்படத்தை ஆதாரமாக வைத்துள்ளாா். எத்தியோபியாவில் 5,200-க்கும் அதிகமானோருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா: உலகளவில் பாதிப்பு 1 கோடியை கடந்தது!

ஜெனீவா: உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில்  கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி நாளுக்கு நாள் மனித பாதிப்பையும், பலியையும் ஏற்படுத்தி வருகிறது.  
 
இந்நிலையில் உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,00,82,615 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 5,01,309 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 54,58,523 -ஆக அதிகரித்துள்ளது.
 
தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 40,65,035 பேர்களில் 57,748-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 25,96,537; பலி 1,28,152 -ஆக உயர்வு

 
அமெரிக்காவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 25,96,537 -ஆகவும், பலி எண்ணிக்கை 1,28,152-ஆகவும் உயர்ந்துள்ளது. 
 
அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
 
அமெரிக்காவில் சுமாா் நேற்று ஓரே நாளில் 43,581 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. இது, கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு ஆகும். அமெரிக்காவின் கரோனா பரவல் மையமான நியூயாா்க்கில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாலேயே நாட்டில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு இதுவரை 4,16,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 31,452பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 
 
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, அமெரிக்காவில் 25,96,537 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை அந்த நோய்க்கு ஒரே நாளில் 512 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,28,152 -ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 10,81,437 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 

கர்நாடகத்தில் ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,493 பேருக்கு கரோனா: மேலும் 156 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,493 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் தொடர்ந்து 10-வது நாளாக 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா

கேரளத்தில் தொடர்ந்து 10-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் புதிதாக 2,889 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,889 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

 

தாராவியில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று

மும்பை தாராவிப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 13 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் மட்டும் 1,992, பிற மாவட்டங்களில் 1,948 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

குஜராத் முன்னாள் முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி

குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த அவர் மருத்துவரின் அறிவுறுத்தலுக்கேற்ப இன்று காலை ஆமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

 

குஜராத் முன்னாள் முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி

குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 3,940 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,940 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் ஒரேநாளில் 4,072 பேருக்கு தொற்று; பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டியது!

 பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,072 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,02,955 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கரோனா தொற்று

செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com