அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ் |

கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன.
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ் |

எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன.

கரோனா தொடர்பான உலகச் செய்திகளிலிருந்து உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் இங்கே - கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 492ஆக உயர்வு

 இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471லிருந்து 492ஆக உயர்ந்துள்ளது. இதன்படி இந்தியர்கள் 451, வெளிநாட்டினர் 41 பேர் என மொத்தம் 492 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக முதல்வர்

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு சாா்பில் மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு சார்பில் மேலும் 500 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.  விரிவான செய்திக்கு..

கரோனா எதிரொலி: திருப்பூர் பனியன் நிறுவனங்கள் மார்ச் 31 வரை மூடல்

கரோனா அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கையாக  திருப்பூர் பனியன் நிறுவனங்கள் மார்ச் 31 வரை மூடப்படுகிறது.

திருப்பூர் அருகில் உள்ள ஈரோடு மாவட்டம் கரோனா பாதிப்புகள் காரணமாக முடக்கப்பட்டு உள்ளது.  எனவே அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்துக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக, திருப்பூரில் பனியன் நிறுவனங்கள், அது சார்ந்த தொழில் நிறுவனங்கள் மார்ச் 31 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப். 8 வரை கேரள உயர் நீதிமன்றம் விடுமுறை

கேரள உயர் நீதிமன்றம், மார்ச் 24 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.

அவசரமான விசாரணைகள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விரேந்திர ஷேவாக் பகிர்ந்த ஒரு விடியோ

உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை இல்லை

 உச்ச நீதிமன்றத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நேரடி விசாரணைகள் நடைபெறாது என உச்ச நீதிமன்றம் அறிவி்த்துள்ளது.

நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்கறிஞர்கள் கூடங்களும் மூடப்படும் என்றும் மிகவும் அவசரமான விஷயங்களில் காணொலிவழி விசாரணை நடைபெறும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் இலவச உணவு, இருப்பிடம், மருந்துகள்

பஞ்சாபில் தேவைப்படுவோருக்கு இலவசமாக உணவு, இருப்பிடம் மற்றும் மருந்துகளை வழங்குமாறு  முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

இதற்காக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 20 கோடியையும் அவர் ஒதுக்கியுள்ளார்.

கரோனா குறித்த செய்திகளை அளவோடு பாருங்கள்: பினராயி விஜயன்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகளை அடைக்க உத்தரவு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விரிவான செய்திக்கு..

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை

தமிழகத்தில் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பொதுவெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

பிரிட்டனில் 18 வயது இளைஞர் பலி; எண்ணிக்கை 281 ஆக உயர்ந்தது

பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றால் 18 வயதுள்ள ஒருவர் உயிரிழந்தார். பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கரோனாவுக்குப் பலியானவர் இவர். பிரிட்டனில் கடந்த ஆறு நாள்களில்.. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை நகைக்கடைகள் மூடல்

கரோனா முன் எச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக்கடைகளை மூட நகை வணிகர் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி குறிப்பிட்டுள்ளார். 

கரோனாவை எதிர்கொள்ள ஸ்மார்ட் ஹெல்மெட்: சீன காவல்துறை கண்டுபிடிப்பு

ஸ்மார்ட் ஹெல்மெட்... கரோனா வைரஸ் தொற்று நோயாளா்களை அடையாளம் காண சீன காவல்துறையினர் "ஸ்மார்ட் ஹெல்மெட்"களை பயன்படுத்தி வருகின்றனா்.வீதியில் செல்லும் நபா்களின் உடல் வெப்பநிலையை அடையாளம் காணும் தொழில்நுட்பங்களுடன் இந்த 'ஸ்மார்ட் ஹெல்மெட்' வடிவமைக்கப்பட்டுள்ளது. கரோனா நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறான ஒரு கண்டுபிடிப்பை சீனா நிகழ்த்தியுள்ளது.

கை கழுவுங்கள்! விலகியிருங்கள்! காத்துக் கொள்ளுங்கள்!

கரோனா வைரஸைக் கண்டு உலகமே அதிர்ந்துகொண்டிருக்கிறது. அடுத்தது என்ன? என்பது அறியாமல் வல்லரசுகளிலிருந்து வழிப்போக்கர்கள் வரை விழித்துக்கொண்டிருக்கிறார்கள். விரிவான செய்திக்கு..

2019 இறுதியில் இத்தாலியில் கரோனா வைரஸ் இருந்திருக்க வாய்ப்பு: இத்தாலி நிபுணர்

கடந்த ஆண்டின்  நவம்பர் மற்றும் டிசம்பரில் இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்று இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று இத்தாலியின் புகழ்பெற்ற மருத்துவயியல் நிபுணர் கியுசெப்பே லெமுச்சி அண்மையில் அமெரிக்க தேசிய பொது வானொலிக்குப் பேட்டியளிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.விரிவான செய்திக்கு..

நாடு முழுவதும் 75 மாவட்ட எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவு

கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா்கள் இருக்கும் 75 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான அரசு பேருந்து சேவையை 31-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: ஆந்திர ஏழைகளுக்கு ரூ.1000 உதவித்தொகை

அமராவதி: கரோனா அச்சுறுத்தலைத் தொடா்ந்து ஆந்திர மாநிலத்தில் ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருள்களும், குடும்பத்துக்கு ரூ. 1000 உதவித்தொகை அளிக்கவும் ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

வங்கிகளின் பணி நேரம் மாற்றம்: சில சேவைகளும் ரத்தாகிறது

புது தில்லி: கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன. விரிவான செய்திக்கு..

மாா்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து: சரக்கு ரயில்கள் மட்டுமே இயங்கும்

புது தில்லி: நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) நள்ளிரவு தொடங்கி மாா்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

கரோனா தொடர்பான உலகச் செய்திகளிலிருந்து உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் இங்கே கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்.

சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவு

சென்னை: கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3  மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  விரிவான செய்திக்கு..

சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவு: ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவு: ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3  மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதை அடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திங்கள்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.விரிவான செய்திக்கு...

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

மதுரையில் வெளிநாட்டுத் தொடர்பற்ற ஒருவருக்கு கரோனா பாதிப்பு: எண்ணிக்கை 12 ஆனது

தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனா நிவாரணம்: பிகார் முதல்வர் அறிவிப்பு

  • ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள்.
  • ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும்.
  • முடக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.1000 நிதியுதவி.
  • 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை
  • புதுச்சேரியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பாலிதீன் கவரைப் பயன்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடு..

    மேற்கு வங்கத்தில் முதல் பலி: இத்தாலியில் இருந்து திரும்பிய 57 வயது முதியவர்

    கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த 57 வயது முதியவர் இன்று மதியம் உயிரிழந்தார். இத்தாலியில் இருந்து திரும்பி வந்த நிலையில், இவருக்கு கடந்த சனிக்கிழமை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். இது மேற்கு வங்கத்தில் முதல் உயிரிழப்பாகும். இவரையும் சேர்த்து இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

    கரோனா விழிப்புணர்வில் திருநங்கைகள்

    கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் அமைப்பினர் ஈடுபட்டனர்.

    ஈரோடு ரயில் நிலையம் முழுமையாகப் பூட்டி சீல் வைப்பு

    ஈரோடு தனிமைப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தை முழுமையாகப் பூட்டி சீல் வைத்தனர் அதிகாரிகள். 

    ஆந்திரம்: கன்னவரம் காய்கறி சந்தையில் மக்களுக்காக வளையம் வரைந்த காவல்துறை

    சந்தைக்கு வரும் மக்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க காவல்துறையினர் வளையம் வரைந்து அதில் மக்களை நிறுத்தி காய்கறிகளை வாங்கச் செய்து வருகின்றனர்.

    நெல்லை: அபுதாபியில் இருந்து வந்தவருக்கு கரோனா இருப்பது உறுதி

    அபுதாபியில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு வந்தவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதும் கூட்டம்

     தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கோயம்பேடு பேருந்துநிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

    தெலங்கானாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்வு

    தெலங்கானாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

    சித்தூரில் ஒருவருக்கு கரோனா அறிகுறி

    ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து அவரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    கரோனா சிகிச்சையில் மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்து: மத்திய அரசு பரிந்துரை

     கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோருக்கு மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்தினை அளிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. விரிவான செய்திக்கு..

    144 தடை, அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

    சென்னை: கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில்  உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

    தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கம்

    வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.விரிவான செய்திக்கு..

    கரோனாவை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை: பிரதமர் மோடி கவலை

    கரோனா வைரஸை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

    உலகம் முழுவதும் கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99,016

    உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99,016 ஆக உள்ளது. இது கரோனா அச்சத்தை குறைத்து ஒரு நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. விரிவான செய்திக்கு..

    தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

    தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

    உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

    Related Stories

    No stories found.
    Dinamani
    www.dinamani.com