ஊரடங்கு - இன்று 7-வது நாள்: லைவ் அப்டேட்ஸ்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு - இன்று 7-வது நாள்: லைவ் அப்டேட்ஸ்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கைக் கடைப்பிடிக்கும் மக்கள், கண்காணிக்கும் அரசு... முக்கிய நடவடிக்கைகள்... செய்திகள்.. உடனுக்குடன் - லைவ் அப்டேட்ஸ்.

ஊரடங்கு: அவசியமின்றி சுற்றும் வாகனங்களில் குறியீடு

 தஞ்சாவூரில் அவசியமின்றி அடிக்கடி சுற்றி வரும் வாகனங்களில் காவல்துறையினர் குறியீடு வைத்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், தஞ்சாவூரில் ஊரடங்கை  மீறி பலர் வெளியில் சுற்றுகின்றனர். 

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

ஊரடங்கின்போது பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களில், விற்பனையாளர்களுக்கு தலா ரூ.2,500  மற்றும் உதவியாளருக்கு தலா ரூ.2,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

திருப்பூரில் 41,273 வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 41,273 வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'திருவாரூரில் 6,000 கட்டுமானத் தொழிலாளர்கள் குடும்பம் தவிப்பு'

திருவாரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் 6 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறியதாக 380 பேர் மீது வழக்குப்பதிவு: காவல்துறையினர் நடவடிக்கை

 ஈரோடு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது அத்தியாவசிய பொருட்கள் என்று தேவையில்லாமல் சுற்றி தெரிந்த நபர்களை  பிடித்து வழக்கு பதிவு செய்தனர். இவ்வாறாக கடந்த 5 நாட்களில் மட்டும் தேவையில்லாமல் சுற்றி தெரிந்ததாகவும் அத்தியாவசிய பொருட்கள் தவிர தேவையில்லாத கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ததாக 380 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அமைச்சரவை செயலாளர் விளக்கம்

 புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இன்று காலை தெரிவித்துள்ளது.  விரிவான செய்திக்கு.. 

மூன்று காரணங்களுக்கு மட்டுமே அவசர பாஸ்: காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்

 சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் இறப்பு, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே அவசரப் பாஸ் வழங்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியுள்ளார். விரிவான செய்திக்கு.. 

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 1ம்  தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்த  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தற்போது தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பெரியகுளம் வங்கியில் உதவித்தொகை பெற குவிந்த மூதாட்டிகள்

 பெரியகுளம் மதுரை மத்திய கூட்டுறவு வங்கி தெற்கு அக்ரஹாரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று முதியோர் உதவித் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து 100 க்கு மேற்பட்ட முதியோர்கள் வங்கியின் முன் குவிந்தனர். இதனால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது.

பவானியில் 10 உறவினர்களுடன் நடைபெற்ற திருமணம்!

 கரோனா வைரஸ் தொற்று பரவல் தடை காரணமாக  பவானியில் மணமகன், மணமகள் உள்பட 10 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம் இன்று நடைபெற்றது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அவசரப் பயணம்.. யாருக்கெல்லாம் அனுமதி: முதல்வர் பழனிசாமி விளக்கம்

 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவசரப் பயணம் மேற்கொள்ள யாருக்கெல்லாம் அனுமதி வழங்கப்படும் என்பது பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு ஏப்ரல் 14 வரை விடுமுறை

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் உணவின்றி தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்

 திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 95 பேர் உணவு இல்லாமல், செலவுக்கு பணம் இல்லாமலும் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர்.

வைத்தீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் இல்லாத கிருத்திகை வழிபாடு

வைத்தீஸ்வரன் கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிருத்திகை வழிபாட்டில் பக்தர்கள் யாரும் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. பக்தர்கள் இல்லாமல் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய போலீஸார்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவரை ஆந்திர போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விரிவான செய்திக்கு..

சமூக விலகலை கடைபிடிக்காததால் புதுச்சேரி சூப்பர் மார்க்கெட்டை மூட உத்தரவு

சமூக விலகலை மக்கள் கடைபிடிக்காததால் புதுச்சேரி பெரிய சூப்பர் மார்க்கெட்டை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

 

ஊரடங்கை மீறினால் 14 நாள்கள் தனிமை முகாம்!

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரடங்கை மீறினால் 14 நாள்கள் தனிமை முகாம்!

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரடங்கை மீறினால் 14 நாள்கள் தனிமை முகாம்!

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் நாய்களுக்கு உணவு கொடுத்த மாநகராட்சி ஊழியர்

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பேருந்து நிலையம், ஈரோடு ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக தடை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தநிலையில் ஈரோடு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த நாய்களுக்கு மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவர் பிஸ்கெட்டுகளை உணவாக கொடுத்தார்.

புதுவாயலில் ஊராட்சிக்கு உள்ளேயே ஊரடங்கு

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் ஊராட்சியில் ஊராட்சிக்கு உள்ளேயே தெருக்கள் தோறும் தடுப்புகள் அமைக்கப்பட்டு யாரும் நுழையக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவுக்கு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: பிரதமர் மோடி

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துதற்காக, நான் எடுத்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று மனதின் குரல் என்ற வானொலி உரையின் போது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

5ஆவது நாளாக வெறிச்சோடியது கோவை

இன்று ஞாயிற்றுக்கிழமையினால் உக்கடம் மீன் மார்க்கெட் மற்றும் கோவை சுற்றுலா இறைச்சிக் கடைகளில் மக்கள் அதிக அளவில் கூடினர். ஒரு சில இடத்தில் சமூக இடைவெளி பின்பற்றியும் சமூக இடைவெளி பின்பற்றுவதில் காவல்துறை உதவியாக சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

ஒரு மாத வாடகை வேண்டாம்: குடியிருப்புவாசிகளுக்கு இரக்கம் காட்டிய வீட்டின் உரிமையாளா்

கரோனா நோய்த்தொற்று காரணமாகப் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், கோவையைச் சோ்ந்த வீட்டின் உரிமையாளா் தனது வாடகை வீடுகளில் குடியிருப்பவா்கள் ஒரு மாத வாடகை அளிக்க வேண்டாம் என அறிவித்துள்ளாா். விரிவான செய்திக்கு..

ஈரோடு பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை

ஈரோடு ஆர்கேவி சாலையில் நேதாஜி காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு மொத்த வியாபாரமும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வந்தது. ஈரோடு மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திர மாநிலங்களிலிருந்து வரும் காய்கறிகள் விற்பனைக்கு வரும்.

ரேஷன் பொருட்களை வீடுகளில் சேர்க்க குழுக்கள் அமைப்பு

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளில் சேர்க்க ஒவ்வொரு கடைக்கும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ள தனி கட்டுப்பாட்டு அறை: காவல் துறை

குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.

4ஆவது நாளாக வெறிச்சோடியது ஈரோடு

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையொட்டி நான்காவது நாளாக ஈரோட்டில் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

தாராபுரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட உழவர் சந்தையில் விதிமுறைகளைக் கடைபிடிக்காத பொதுமக்கள்

தாராபுரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட உழவர் சந்தையில் சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘நடந்தே ஊா்திரும்பும் தொழிலாளா்களை விமானங்களில் அழைத்து செல்ல தயாா்’

தில்லியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு நடைபயணமாக ஊா் திரும்பும் தொழிலாளா்களை விமானங்களில் அழைத்து செல்ல தனியாா் விமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

வடமாநிலங்களிலிருந்து சிகிச்சைக்கு வந்தவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவிப்பு

ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்பட பல்வேறு வடமாநிலங்களிலிருந்து வேலூருக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர். 

அனைத்து கடைகளுக்கும் நேரக் கட்டுப்பாடு: முதல்வர்

கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் 29.3.2020 (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

கடையநல்லூரில் முழுவீச்சில் ஊரடங்கு

கடையநல்லூரில் வருவாய்த்துறை, நகராட்சி நிா்வாகம், காவல்துறை ஆகிய மூன்று துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளும் இணைந்து முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஊரடங்கில் உருப்படியான வேலை: பனையோலை விசிறி தயாரிக்கும் பி.இ. பட்டதாரி!

சேலம் மாவட்டம், சங்ககிரியில்  சுய தொழில் செய்து வரும் பி.இ.பட்டதாரி இளைஞர் ஊரடங்கு உத்தரவையடுத்து வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பனை ஓலைகளில் விசிறிகள் மற்றும் பொருள்களை தயாரித்து வருகின்றார். விரிவான செய்திக்கு..

கல்யாண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை உட்பட எட்டு பேர் மீது வழக்கு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் போது, கல்யாண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை உட்பட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்

தமிழக அரசின் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வரும் செப்டம்பர் இறுதி வரையிலும் தங்களுடைய இருப்புச் (வாழ்வுச்) சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா ஊரடங்கு: கல்யாண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை உட்பட எட்டு பேர் மீது வழக்கு

உத்தம் சிங் நகர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் போது, கல்யாண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை உட்பட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சூர்: கரோனா ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால்  கேரளாவில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஊரடங்கு எதிரொலி : வேதாரண்யம் பகுதியில் பறிக்காமல் பூத்து அழுகும் மல்லிகை

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிரொலியாக மல்லிகைப் பூக்களைப் பறிக்காததால் தோட்டத்திலேயே அழுகி அழித்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com