அச்சுறுத்தும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் சுமார் 900 பேரை பாதித்துள்ளது.
அச்சுறுத்தும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்


உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் சுமார் 900 பேரை பாதித்துள்ளது.

கரோனா பற்றி உலகம் முதல் உள்ளூர் செய்திகள் வரை  - லைவ் அப்டேட்ஸ்
 

கரோனா: இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 756 பேர் பலி

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா தொற்று காரணமாக 756 பேர் பலியாகியுள்ளனர்.இத்துடன் அங்கு பலியானர்களின் எண்ணிக்கை 10,779ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,689ஆக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கு கரோனா தொற்று இல்லை

கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா வைரஸ் தொற்று: ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். விரிவான செய்திக்கு...

கரோனா: இந்தியாவில் உயிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 979-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனா: பிரிட்டனில் தற்போதைய நிலை என்ன?

உலகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கியுள்ள கரோனா வைரஸ் பிரிட்டனிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவால் பிரிட்டனில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: பிரிட்டனில் தற்போதைய நிலை என்ன?

 உலகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கியுள்ள கரோனா வைரஸ் பிரிட்டனிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவால் பிரிட்டனில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு...

33 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை உலகளவில் 33 ஆயிரத்தைத் தாண்டி 33,214 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,03,876. 1,49,219 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனாவிலிருந்து காக்கும் ‘செயற்கை சுவாசக் கருவி’

கரோனா நோய்த்தொற்று முக்கியமாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. பாதிக்கப்பட்டவா்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். எனவே, சிகிச்சையின்போது அவா்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், நாட்டில் தற்போதுவரை மருத்துவமனைகளில் குறைவான செயற்கை சுவாசக் கருவிகளே (வென்டிலேடா்) உள்ளன. விரிவான செய்திக்கு...

முகக் கவசம் அணிவது அவசியமா?

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், அப்படியே வெளியே வர நோ்ந்தாலும் பொதுவெளியில் ஒருவரிடமிருந்து ஒருவா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று எல்லா நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. விரிவான செய்திக்கு...

உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கை 31 ஆயிரத்தை நெருங்குகிறது

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு  (கொவைட்-19) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை நெருங்குகிறது. உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6,63,748 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனா பலி 24-ஆக அதிகரிப்பு: 1029 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 1029-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனா​: உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள்

உங்களுக்கு அடிக்கடி இருமல், தும்மல் ஏற்பட்டாலோ, கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவா்களை நீங்கள் பராமரித்தாலோ முகக் கவசம் அணிய வேண்டும். விரிவான செய்திக்கு...

கரோனா அறிகுறி: சவுதியிலிருந்து வந்த இளைஞர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதி

சிதம்பரத்தில் கரோனாஅறிகுறியுடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சவுதியிலிருந்து வந்த வாலிபர் சிகிச்சைக்காக  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  விரிவான செய்திக்கு...

நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேலும் ஒருவர் பலி

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். கரோனா வார்டில் அனுமதிக்கப்படிருந்தவர்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளார்.  விரிவான செய்திக்கு...

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் பெண் அனுமதி

கரோனா வைரஸ் நோய்த் தொற்று அறிகுறியுடன் பெண் ஒருவா் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா். விரிவான செய்திக்கு...

32 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை உலகளவில் 32 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

பிகாரில் கரோனா பாதிப்பு 11ஆக உயர்வு

பிகாரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதில் பாட்னாவில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி: 50-ஐ எட்டியது எண்ணிக்கை

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ஃபரூக் அப்துல்லா ரூ. 1.5 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ரூ.1.5 கோடி நிதி வழங்கியுள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனா: கனடா பிரதமர் மனைவி குணமடைந்தார்

கரோனா பாதிப்புக்குள்ளான கனடா நாட்டுப் பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபி குணமடைந்தார். இதனிடையே தான் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி என சோஃபி தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பிரிவில் ரோபோ

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் மருந்து வழங்க பரிசோதனை முறையில் ஞாயிற்றுக்கிழமை செயல் படுத்த பட்டது. நான்கு ரோபோக்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டது.

எம்.பி.க்கள் ரூ.1 கோடி வழங்க வேண்டும்: வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

கரோனா பாதிப்பு நிவாரணத்திற்காக எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு..

கோடக் ரூ. 50 கோடி உதவி

 கரோனாவுக்கான பிரதமர்  உதவி நிதிக்காக ரூ. 50 கோடி வழங்குவதாக கோடக் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோடக் மஹீந்திரா வங்கியின் சார்பில் ரூ. 25 கோடியும் வங்கியின் மேலாண் இயக்குநர் உதய் சார்பில் ரூ. 25 கோடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கரோனாவுக்கு 2ஆவது நபர் பலி

ஸ்ரீநகரில் இன்று காலை கரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் பலியானார் என்று காஷ்மீர் அரசின் செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார். இத்துடன் ஜம்மு காஷ்மீரில் கரோனாவுக்கு பலியானர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 40 ஆக உயா்வு

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு சனிக்கிழமை கரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் அந்த கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

வேலூர் மாவட்டத்தில் முதன்முதலாக ஒருவருக்கு கரோனா உறுதி

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வேலூரில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரிவான செய்திக்கு...

கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் உறுதி

 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா நோய் இருப்பது உறுதியாகியுள்ளது.   விரிவான செய்திக்கு...

கன்னியாகுமரி: கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.  விரிவான செய்திக்கு...

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 40 ஆக உயா்வு

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு சனிக்கிழமை கரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் அந்த கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனா பாதிப்பில் அமெரிக்காவைத் தொடர்ந்து சீனாவை விஞ்சிய இத்தாலி

கரோனாவின் பிறப்பிடமான சீனாவை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அமெரிக்கா பின்னுக்குத் தள்ளிய நிலையில், இத்தாலியும் அதனை விஞ்சி விட்டது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கரோனாவின் பாதிப்பு கடுமையாக இருந்தது. உயிரிழப்பிலும் சீனாவை விட இத்தாலியே அதிகம் பாதிக்கப்பட்டது. விரிவான செய்திக்கு..

கமல்ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டாரா?

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அவரது வீட்டு வாசலில் சென்னை மாநகராட்சி அறிவித்தாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனாவுக்கு தமிழகத்தில் ஒருவர் குணமடைந்துள்ளார்

சென்னை: தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் கரோனாநோய்த்தொற்றுபாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தேனி: தனிமைப்படுத்தப்பட்டவர் மனஉளைச்சலால் கடித்ததில் மூதாட்டி பலி

தேனி: தேனி ஜக்கமநாயக்கன்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்டவர் மனஉளைச்சலால் கடித்ததில் 90 வயதான மூதாட்டி உயிரிழந்தார். இலங்கைக்கு ஜவுளி வியாபாரத்துக்கு சென்று திரும்பிய 34 வயதான இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். விரிவான செய்திக்கு..

கன்னியாகுமரி: கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது ரத்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் படம் வெளியீடு

கரோனா வைரஸின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல்முறையாக வெளியிடப்படப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலம், புணேயில் செயல்படும் தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களால் இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு.. 

கேளரத்தில் கரோனா பாதிப்பு 165ஆக உயர்வு

கேளரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. 

தெலங்கானாவில் கரோனாவுக்கு முதல் பலி

தெலங்கானாவில் கரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் மொத்தம் 65 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் கரானாவுக்கு பலி 6ஆக உயர்வு

 மகாராஷ்டிரத்தில் கரானாவுக்கு பலியானாவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. 80 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் கரானாவுக்கு பலியானாவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இங்கு இன்று மட்டும் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தீவிரப்படுத்தப்படும் ஊரடங்கு: தமிழகத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் புதிய உத்தரவுகள்

சென்னை: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் தீவிரமாக செயல்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனா பாதித்த இந்தியர்களில் பெரும்பாலானோர் துபையில் இருந்து வந்தவர்கள்

இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், முதல் முறையாக, கரோனா வைரஸ் பரவல் தொடர்பான முதல் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் 41-வது நபருக்கு கரோனா உறுதி: சுகாதாரத் துறை செயலர்

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 40-இல் இருந்து 41 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஜன. 18-க்குப் பிறகு 15 லட்சம் பேர் வந்திறங்கினர்

வெளிநாடுகளில் வந்திறங்கியவர்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையைக் கடைப்பிடிக்கும்படி மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 ஜன. 18 ஆம் தேதிக்குப் பிறகு மட்டும் நாடு முழுவதும் 15 லட்சம் பன்னாட்டுப் பயணிகள் இந்தியாவுக்குள் வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

6 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

 உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது.

இதுவரை 27,674 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு சீனா உதவி

 கரோனா வைரஸ் தடுப்பில் உதவுவதற்காக பாகிஸ்தானுக்கு மருத்துவர் குழுவொன்றை சீனா அனுப்பியுள்ளது.

மருத்துவ வல்லுநர்கள் எட்டு பேருடன் நிவாரணப் பொருள்களும் சிறப்பு விமானமொன்றில் பாகிஸ்தானில் வந்திறங்கியது.

பாகிஸ்தானில் இதுவரை 1400 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று வந்தது எப்படி ?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதியாகி இருப்பது இதுவே முதல் முறை. விரிவான செய்திக்கு...

புதுவையில் கரோனா தொற்று இல்லை: சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று இல்லை என்று இல்லை என்று சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு...

ஆசாரிப்பள்ளம் கரோனா வார்டில் இறந்தவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருந்தன: மருத்துவக்கல்லூரி முதல்வர் பேட்டி

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் கரோனா வார்டில் சனிக்கிழமை உயிரிழந்த 3 பேருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் இருந்தன. பொதுமக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்றார் மருத்துவக்கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி. விரிவான செய்திக்கு...

கரோனாவைக் கட்டுப்படுத்த புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு: இந்திய மருத்துவர் தகவல்

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளதாக இந்திய மருத்துவர்  ஒருவர் தெரிவித்துள்ளார்.  விரிவான செய்திக்கு...

உலக அளவில் கரோனா பாதிப்பு 6 லட்சத்தை எட்டியது; ஒரே வாரத்தில் இருமடங்கு

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.a பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்தை எட்டியுள்ளது. பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டிவிட்டது. விரிவான செய்திக்கு.. 

செப்புப் பாத்திரத்திலும்கூட ஆண்டுக்கணக்கில் கரோனா வைரஸ் வாழும்

இதுவரையில் கூறப்பட்டுவந்த தகவல்களுக்கு மாறாக செப்புப் பாத்திரத்திலும்கூட ஆண்டுக்கணக்கில் கரோனா வைரஸ் வாழும் என்று தெரிவிக்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். தினகரன்.

கரோனா பாதித்த இந்தியர்களில் பெரும்பாலானோர் துபையில் இருந்து வந்தவர்கள்

இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், முதல் முறையாக, கரோனா வைரஸ் பரவல் தொடர்பான முதல் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு.. 

திருச்சி அரசு மருத்துவருக்கு கரோனோ தொற்று இல்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

திருச்சி: காய்ச்சல் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவருக்கு கரோனோ தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனா தொற்றுக்கு கேரளத்தில் முதல் பலி

 உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு கேரளத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். கேரளத்தில் இதுவே கரோனா தொற்றுக்கு முதல் பலியாகும். விரிவான செய்திக்கு...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com