பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவிலும் ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவிலும் ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

கரோனா பற்றி உலகம் முதல் உள்ளூர் செய்திகள் வரை  - லைவ் அப்டேட்ஸ்
 

கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு

புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதிக்கும் அபாயம் இருக்கும், அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

புதிதாக கரோனா பாதித்த 7 பேர் யார்? யார்?

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது விரிவான செய்திக்கு...

லண்டனில் 4000 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனை

பிரிட்டனில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், லண்டன் டாக்லேண்ட் பகுதியில் உள்ள எக்ஸெல் சென்டர் தற்போது தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அவசர வெளியூர் பயணம்: அனுமதி பெறும் நேரம் அறிவிப்பு

அவசரப் பயணத்திற்காக வெளியூர் செல்லும் பயணிகள், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதிக் கடிதம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 74ஆக உயர்வு

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 67 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 7 உயர்ந்து 74 ஆக உயர்ந்துள்ளது இதன்படி விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கும், மதுரையை சேர்ந்த 2 பேருக்கும், திருவண்ணாமலை, சென்னையில் தலா ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.

தில்லியில் மேலும் 24 பேருக்கு கரோனா: நிஜாமுதீன் கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள்

புது தில்லி: தில்லியில் நிஜாமுதீன் கட்டடத்தில் தங்கியிருந்த 24 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தில்லி நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் தெரிவித்துள்ளார்.விரிவான செய்திக்கு,,,

கரோனா: தமிழகத்தில் சுமார் 4 லட்சம் பேரிடம் வீடு வீடாகச் சென்று ஆய்வு

சென்னை: தமிழகத்தில் இதுவரை 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 12 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று சுமார் 4 லட்சம் பேரிடம் மருத்துவ ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு,, 

மகாராஷ்டிரத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி புனே, புல்தானாவில் தலா இருவரும், மும்பையில் ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், 9 போ் பலியாகியுள்ளனர். 

கேரளத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

 கரோனா பாதிப்பு காரணமாக கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறு வந்த முதியவர் இன்று காலை பலியானார். பலியான முதியவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னை இருந்ததாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன் இந்தியாவில் கரோனாவுக்கு பலியானர்களின் எண்ணிக்கை 33ஆகவும், கேரளத்தில் 2ஆகவும் உயர்ந்துள்ளது.

40 ஆயிரத்தைத் தாண்டியது பலி; இத்தாலியில் மட்டும் 12,428

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டி 40,633 ஆக உள்ளது.

இந்தியாவில் 1397 பேருக்கு பாதிப்பு: மத்திய அரசு

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 1,397 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

இத்தாலியில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவைத் தொடர்ந்து இத்தாலியிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இத்தாலியில் 101,739 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11,591 போ் உயிரிழந்துவிட்டனா். 

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா உறுதி: எண்ணிக்கை 124 ஆனது

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனா: இந்தியாவில் சமூகப் பரவலாக மாறவில்லை: சுகாதார அமைச்சகம்

கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் சமூகப் பரவலாக உருவெடுக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

தமிழகத்தில் தீவிரமடைகிறது கரோனா: ஒரே நாளில் 17 போ் பாதிப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

மகாராஷ்டிரத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா உறுதி

மகாராஷ்டிரத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா உறுதி, ஒருவர் பலி: பினராயி விஜயன்

கேரளத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் பலியாகியுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்கிழமை தெரிவித்தார். விரிவான செய்திக்கு..

கடன்களுக்கான மாதத் தவணைகள் 3 மாதத்துக்கு நிறுத்திவைப்பு: டிவிட்டரில் அறிவித்த வங்கிகள்

புது தில்லி: கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கடன்களுக்கான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு நிறுத்திவைப்பது தொடர்பாக பொதுத் துறை வங்கிகள் சில தங்களது டிவிட்டர் பக்கத்தில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

24 மணி நேரத்தில் 227 பேருக்கு பாதிப்பு, 3 பேர் பலி: மத்திய அரசு

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய அரசு செவ்வாய்கிழமை தெரிவித்தது. விரிவான செய்திக்கு..

கரோனா: தமிழகத்தில் இருந்து சட்டீஸ்கர் திரும்பியவர் தற்கொலை

தமிழகத்தில் இருந்து சட்டீஸ்கர் திரும்பிய 35 வயது நபர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டதாக அந்த மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து நடந்தே வந்த மக்கள்: மனம் இறங்கிய பிகார் அரசு

வெளிமாநிலங்களில் இருந்து நடந்தே வந்து சேர்ந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்காக, 350 பேருந்துகளை இயக்கியது பிகார் அரசு

24 மணி நேரத்தில் 849 பேர் பலி: ஸ்பெயின் அரசு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 849 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு செவ்வாய்கிழமை தெரிவித்தது. விரிவான செய்திக்கு..

கரோனா வைரஸ்: உலகம், இந்தியா, மாநிலங்களில் தற்போதைய நிலை

உலக அளவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 87 ஆயிரத்து 430 ஆக உள்ளது. இதுவரை உலக அளவில் கரோனா பாதித்து 37,800 பேர் மரணம் அடைந்துள்ளனர். விரிவான செய்திக்கு...

ரூ.10-க்கு டாக் டைம்; ரீ-சார்ஜ் செய்யாவிட்டாலும் நீடிக்கும் சேவை: ஏர்டெல் சலுகை

கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஏழை, எளிய மக்களின் நலனுக்காக, ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், ரீ-சார்ஜ் செய்யாவிட்டாலும் அழைப்பு துண்டிக்கப்படாது என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.விரிவான செய்திக்கு...

ஏப்ரல் 1-ம் தேதி மக்களை முட்டாளாக்கினால்.. எச்சரிக்கும் மகாராஷ்டிர அரசு

ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம் என்ற பெயரில், பொய்யான தகவல்களை பரப்பி யாரேனும் மக்களை ஏமாற்ற முயன்றால் அவர்கள் மீது தகவல்தொழில்நுட்பச் சட்டம் பாயும் என்று மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் எச்சரித்துள்ளார்

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழகத்தில் இன்றுடன்(மார்ச் 31) ஓய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மத்தியப் பிரதேசத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 66 ஆக உயர்வு

மத்தியப் பிரதேசத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

குஜராத்தில் கரோனாவுக்கு 6வது நபர் பலி: இந்தியாவில் பலி எண்ணிக்கை 31 ஆனது

குஜராத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 45 வயது பெண் இன்று காலை மரணம் அடைந்ததை அடுத்து, அந்த மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அமைச்சரவை செயலாளர் விளக்கம்

புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இன்று காலை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா உறுதி, எண்ணிக்கை 67 ஆனது: முதல்வர்

 சென்னை: தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நேற்று வரை தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் இது 67 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

 கரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காததால், கரோனாவுக்கு தற்போது இருப்பது ஒரே தடுப்பு மருந்து, மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதுதான். வீட்டு வாடகைதாரர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

 ஈரோடு மாவட்டத்தில் 10  பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் மேலும் 8 பேர்!

மத்தியப் பிரதேசத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

முடங்கும் நிலையில் மளிகைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகள்

வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பெரும் நகரங்களுக்கு கொண்டுவரப்படும் அத்தியாவசியப் பொருள்கள் தடைபட்டுள்ளதால் மளிகைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகள் முடங்கும் நிலையில் உள்ளன. விரிவான செய்திக்கு.. 

கரோனா: ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனா: இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 756 பேர் பலி

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா தொற்று காரணமாக 756 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 1ம்  தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்த  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா தொற்றுள்ளோருக்காக தில்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம்!

 தில்லியிலுள்ள ஜவாஹர்லால் விளையாட்டரங்கத்தை கரோனா நோய்த் தொற்றுள்ளோருக்கான தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகப் பயன்படுத்துவதென தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளும், 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளும் இந்த அரங்கத்தில்தான் நடைபெற்றன என்பது குறிப்பிடத் தக்கது.

1 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு; 11 ஆயிரத்தைத் தாண்டிய பலி: திணறும் இத்தாலி

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டி 11,591 ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பணி மோசம்: நொய்டா மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்பதற்காக நொய்டா கௌதம் புத் நகர் மாவட்ட ஆட்சியர் பி.என். சிங்கை உத்தரப் பிரதேச அரசு இடமாற்றம் செய்துள்ளது.

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைச் சென்று பார்த்தபின், இந்த இடமாற்ற உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்தார்.

ரிலையன்ஸ் ரூ. 500 கோடி நன்கொடை

பிரதமர் நிதிக்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் 500 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

தினமும் ஒரு லட்சம் முகக் கவசங்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் இந்த நிறுவனம் செய்துவருகிறது.

மகாராஷ்டிரத்தில் 39 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றியவர்களில் 39 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர்.

இவர்களில் 14 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

புது தில்லியில் மேலும் 25 பேருக்குத் தொற்று

 புது தில்லியில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

கேரளத்தில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்வு

கேரளத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: கர்நாடகம் 88; ராஜஸ்தானில் 62; ஹரியாணாவில் 22 ஆனது

சண்டீகர்: இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,100ஐ எட்டிவரும் நிலையில், ஹரியாணாவில் 22 பேருக்கும், ராஜஸ்தானில் 62 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா இதுவரை உள்வட்டப் பரவலாகவே உள்ளது: மத்திய நல்வாழ்வுத் துறை

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,100ஐ எட்டிவிவிவாட்ட நிலையில், கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஸ்பெயினில் 7 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஸ்பெயின் நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டி 7,340 ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..

மருத்துவர்கள் 14 நாட்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: தில்லி அரசு

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் 14 நாட்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று  தில்லி சுகாதாரத்துறை கூறியுள்ளது. விரிவான செய்திக்கு..

தமக்கு கரோனா வந்துவிடுமோ என்ற அச்சம் இந்தியர்களுக்கு அதிகரித்துள்ளது

புது தில்லி: இந்தியாவில் இதுவரை சுமார் 1,100 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியர்கள்இந்தியாவில் இதுவரை சுமார் 1,100 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியர்கள் 46% பேருக்கு தங்களுக்கு கரோனா வராது என்று 46% பேருக்கு தங்களுக்கு கரோனா வராது என்று நம்புவதாகவும், 48% பேருக்கு கரோனா வரக்கூடிய ஆபத்து இருப்பதாக அச்சம் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

துபையில் கரோனா மருத்துவமனைக்காக மொத்த சொத்தை வழங்கிய இந்திய தொழிலதிபர்

துபை: துபையைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் அஜய் சோப்ராஜ், கரோனா மருத்துவமனை அமைத்துக் கொள்ள தனது மொத்த சொத்தை துபை நல்வாழ்வுத் துறைக்கு வழங்கியுள்ளார்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் யார்? யார்? விவரம்

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் தெலங்கானாவில் கரோனா இல்லாத நிலை உருவாகும்: சந்திரசேகர ராவ்

ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் தெலங்கானாவில் கரோனா வைரஸ் இல்லாத நிலை ஏற்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

தனிமை வார்டுகளாக மாற்றப்படும் தொடக்கப்பள்ளிகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகள் பல கரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் யார்? யார்? விவரம்

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ஆந்திராவில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி

ஆந்திராவில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
காக்கிநாடாவைச் சேர்ந்த 49 வயது ஆணுக்கும், ராஜமுந்திரியைச் சேர்ந்த 72 வயது ஆணுக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கரோனா தொற்று எப்படி பரவியது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அந்த மாநில நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி

ஆந்திராவில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
காக்கிநாடாவைச் சேர்ந்த 49 வயது ஆணுக்கும், ராஜமுந்திரியைச் சேர்ந்த 72 வயது ஆணுக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கரோனா தொற்று எப்படி பரவியது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அந்த மாநில நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com