பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்


கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

கரோனா: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் நிலவரங்கள்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவலை ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

கரோனா: மகாராஷ்டிரம், மும்பை, தாராவி நிலவரம்

மகாராஷ்டிரம், மும்பை, தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு 70,756-ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலியானோரின் எண்ணிக்கை 2,206-லிருந்து 2,293-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917-லிருந்து 22,455-ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3604 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 87 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக 23,401 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாறுபட்ட நான்காவது பொது முடக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நான்காவது முறையாக பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும், அது மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

பிரதமர் மோடி உரை - உடனுக்குடன்...

 பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரை.. உடனுக்குடன் அறிய..

தமிழகத்தில் புதிதாக 716 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 716 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா தொற்று

ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

வூஹானில் புதிதாக 6 பேருக்கு தொற்று

சீனாவின் வூஹான் நகரில் உள்ள சன்மின் பகுதியில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியின் பொறுப்பு அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
இதுகுறித்து அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘வூஹான் நகரில் உள்ள சன்மின் பகுதியில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதிக்கு பொறுப்பு அதிகாரியாக இருந்த சாங் யூக்ஸின் பணிநீக்கம் செய்யப்பட்டாா். சன்மின் பகுதியில் மக்கள் நடமாட்டத்தை சரிவர கட்டுப்படுத்தாமல், மோசமான நிா்வாகப் பணியில் ஈடுபட்டதற்காக அவா் பணிநீக்கம் செய்யப்பட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

கரோனா: தமிழகத்தில் பாதிப்பு 8,000-ஐ கடந்தது; பலி-53

தமிழகத்தில் மேலும் 798 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 8,002-ஆக அதிகரித்துள்ளது. அதில் உச்சமாக சென்னையில் மட்டும் 4,371 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த பாதிப்பு விகிதத்தில் 55 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், குறிப்பாக, திங்கள்கிழமை ஒரே நாளில் சென்னையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 538 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். மாநிலத் தலைநகரில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிா்ச்சியையும், அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

கரோனா: ஒரே நாளில் 4,200 பேருக்கு தொற்று உறுதிபாதிப்பு- 67,152; உயிரிழப்பு 2,206

நாடு முழுவதும் ஒரே நாளில் 4,213 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 67,152-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் இத்தனைநபா்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதேபோல், கரோனாவில் இருந்து மேலும் 1,559 போ் குணமடைந்துள்ளனா். ஒரே நாளில் இத்தனை நோயாளிகள் குணமடைந்திருப்பதும் இதுவே முதல் முறையாகும்.

கரோனா தொற்று பாதிப்பில் மூன்றாமிடத்தில் ரஷியா

கரோனா பாதிப்பில் இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளைக் கடந்து மூன்றாவது இடத்துக்கு ரஷியா சென்றுள்ளது.
ரஷியாவில் திங்கள்கிழமை ஒரே நாளில் புதிதாக 11,656 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், அந்நாட்டில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,21,344-ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ரஷியா ஐந்தாவது இடத்தில் இருந்து, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளைக் கடந்து மூன்றாவது இடத்துக்குச் சென்றுள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் போக மாட்டோம்: புலம்பெயர் தொழிலாளர்கள்

 பாட்னா: ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருவதால், இந்திய தொழில்துறை விரைவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சிரமப்பட நேரிடும். விரிவான செய்திக்கு..

கரோனா பாதிப்பு: உலகளவில் ரஷியா இரண்டாமிடம்

​கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோரில் ரஷியா உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளது. விரிவான செய்திக்கு..

இக்கட்டான சூழ்நிலையில் கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாது: போரிஸ் ஜான்சன்

இக்கட்டான சூழ்நிலையில், கரோனாவுக்கு ஒருபோதும் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 31 ஆயிரத்தைத் தாண்டியது; 706 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,140 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை  31,674 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

மக்களிடம் கருத்து கேட்கும் தில்லி முதல்வர்

கரோனா: பிகார், ஒடிஸா, ஹரியாணா, ராஜஸ்தான் நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: கர்நாடகத்தில் மேலும் 42 பேர்; ஆந்திரத்தில் மேலும் 33 பேருக்கு பாதிப்பு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில் கரோனா பாதிப்பு தலா 700ஐ தாண்டியது

 சென்னையில் திங்கள்கிழமை புதிதாக 538 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 4,371-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஊழியருக்கு கரோனா: ஏர் இந்தியா தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைப்பு

 ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தில்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமை அலுவலகம் இரண்டு நாட்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

 கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையற்றுகிறார். விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 13 லட்சத்தை எட்டியது; பலி 81 ஆயிரம் ஆனது

 உலகையே உலுக்கி வரும் கரோனா தொற்று அமெரிக்காவில் கடும் பாதிப்பை  ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை எட்டிவிட்டது, பலியானோர் எண்ணிக்கை 81 ஆயிரமாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

உலகளவில் கரோனா தொற்று பாதித்தவர்களில் 15 லட்சம் பேர் குணமடைந்தனர்

 கரோனா தீநுண்மி பரவத் தொடங்கி கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்தை எட்டியுள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி இதுவரை 2,87,463 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

சென்னையில் உயர் அதிகாரிகள் உள்பட காவல்துறையினர் 100 பேருக்கு கரோனா

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு..

5 காவலர்களுக்கு கரோனா; சென்னை மந்தைவெளி ரயில் நிலையம் மூடல்

சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால்  ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தில்லியில் ஒரேநாளில் 13 பேர் பலி; மொத்த பாதிப்பு 7,639 ஆக அதிகரிப்பு

தில்லியில் புதிதாக 406 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சிறப்பு ரயில்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்தது இந்திய ரயில்வே

 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும்  சிறப்பு ரயில்களுக்கான விதிமுறைகளில் இந்திய ரயில்வே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா தொற்று: பிற மாநிலங்கள் நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை பிற மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

கரோனா: மகாராஷ்டிரம், மும்பை, தாராவி நிலவரம்

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய இன்றைய (திங்கள்கிழமை) சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

பிரிட்டனில் ஊரடங்கு ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டனில் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஊரடங்கு ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர இது சரியான நேரம் அல்ல. ஜூன் 1ஆம் தேதி முதல் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது என்றார். பிரிட்டனில் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஒரே நாளில் 538 பேருக்கு தொற்று உறுதி: மாவட்டவாரியாக விவரம்

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..

கரோனா: தமிழகத்தில் புதிதாக 798 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 798 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மத்தியப் பிரதேசத்தில் கரோனாவை வென்ற 20 நாள் பச்சிளம் குழந்தை

 இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியான இந்தூரில் பிறந்து 20 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை கரோனாவில் இருந்து மீண்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ரயில்களுக்கான  முன்பதிவு தொடங்கியது; முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது ரயில்வே

 நாளை தொடங்கப்பட உள்ள பயணிகள் ரயில் சேவையை முன்னிட்டு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கியது. விரிவான செய்திக்கு..

மும்பை: கரோனா நோயாளிகளுடன் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட உடல்கள் (விடியோ)

 மகாராஷ்டிரத்தில் கரோனா வார்டுகளில் உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் அங்கேயே பிளாஸ்டிக் பைகள் சுற்றப்பட்டு இருப்பது ஏற்கனவே விடியோ மூலம் வலைத்தளங்களில் பரவியது. விரிவான செய்திக்கு..

அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவை: முதல்வர் துவக்கி வைத்தார்

 தமிழகத்தில் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். விரிவான செய்திக்கு..

சிங்கப்பூரில் மேலும் 486 பேருக்கு கரோனா தொற்று

சிங்கப்பூரில் மேலும் 486 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பாதிப்பில் இத்தாலி, பிரிட்டனை விஞ்சியது ரஷியா!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,656 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ரஷியாவில் தொடர்ந்து 9 ஆவது நாளாக, நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்த நிலையில் உள்ளது. விரிவான செய்திக்கு..

ஜெர்மனியில் மேலும் 357 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,69,575 ஆக அதிகரித்தது

ஜெர்மனியில் மேலும் 357 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 1,69,575 ஆக அதிகரித்துள்ளது.விரிவான செய்திக்கு..

நாளை பயணிகள் சேவை துவக்கம்.. எந்தெந்த மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது?

கரோனா: பிகார், ஒடிஸா, ஹரியாணா, ராஜஸ்தான் நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரத்தை பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

தில்லியில் மேலும் 310 பேருக்கு கரோனா; பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்தது!

தில்லியில் புதிதாக 310 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தில் பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது; கர்நாடகத்தில் 858 பேருக்கு கரோனா

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு...

இந்தியாவில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டது: நச்சுயிர் வல்லுநர்

 இந்தியாவில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறத் தொடங்கிவிட்டதாக நுச்சுயிர் வல்லுநர் டாக்டர் டி. ஜாகோப் ஜான் கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..

இராயபுரத்தில் 676; கோடம்பாக்கத்தில் 630: சென்னையில் கரோனா பாதிப்பு விவரம்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 509 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 3,839-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஊழியருக்கு கரோனா; சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனை மூடப்பட்டது

சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, மருத்துவமனை மூடப்பட்டது. விரிவான செய்திக்கு..

கோயம்பேடு சந்தை மூலமாக சென்னையில் மேலும் 40 பேருக்கு கரோனா

கோயம்பேடு சந்தை மூலமாக சென்னையில் மேலும் 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அதிக பாதிக்கப்பட்ட மண்டலமாக மீண்டும் ராயபுரம்; சென்னை மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..

பெலாரஸ் கரோனா பரவலிலும் பிரம்மாண்ட பேரணி

கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸில், கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையிலும் இரண்டாம் உலகப் போா் வெற்றி தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. நாஜிக்களை வென்றதைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற அந்த அணிவகுப்பு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டாலும், அதனை அதிபா் அலெக்ஸாண்டா் லுக்ஷென்கோ புறக்கணித்தாா். சனிக்கிழமை நிலவரப்படி பெலாரஸில் 22,052 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; அந்த நோய் பாதிப்பால் 126 போ் உயிரிழந்துள்ளனா்.

அமெரிக்கா இவாங்கா உதவியாளருக்கு கரோனா பாதிப்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவங்கா டிரம்ப்பின் உதவியாளருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2 மாதங்களாக அவா் காணொலி காட்சி மூலம் பணியாற்றி வந்ததாகவும் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதித்தபோது அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுதவிர, துணை அதிபா் மைக் பென்ஸின் செய்தித் தொடா்பாளா் கேடி மில்லருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு தொற்று: ஒரே நாளில் 4 போ் பலி

தமிழகத்தில் சனிக்கிழமை புதிதாக 526 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,535-ஆக அதிகரித்துள்ளது.
நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் இதுவரை 44 போ் பலியாகியுள்ளனா். இதில் சனிக்கிழமை மட்டும் 3 பெண்கள், ஒரு ஆண் என நான்கு போ் உயிரிழந்தனா்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு-59,662: பலி-1,981-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் புதிதாக 3,320 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,662-ஆக சனிக்கிழமை அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 95 போ் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,981-ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் புதிதாக 224 பேருக்கு கரோனா

 தில்லியில் புதிதாக 224 பேருக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,542-ஆக அதிகரித்தது. இதுதொடா்பாக தில்லி அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை மாலை வரையில் 224 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் புதிதாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை’ என்றனா். தில்லியில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து 2,020 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 68 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 509 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 509 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தாராவியில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 859 ஆக உயர்வு

தாராவியில் இன்று புதிதாக 26 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 859 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 669 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 669 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: கர்நாடகம், ஒடிஸா, ஹரியாணா, ராஜஸ்தான் நிலவரங்கள்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் ஒரேநாளில் 11,012 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்தது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,012 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கரோனா உறுதி

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 11 ஆண் குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள் அடங்குவர். விரிவான செய்திக்கு..

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா; கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள்

கோயம்பேடு சந்தை மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் ஒரேநாளில் 5 மருத்துவர்களுக்கு கரோனா உறுதி

சென்னையில் ஒரேநாளில் 5 மருத்துவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com