பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்


கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

கரோனாவால் சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் குறைந்தன

 
கரோனா தொற்று பாதிப்பால் பொருளாதாரம், தொழில் மட்டுமல்ல, சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் குறைந்துள்ளன. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது; இராயபுரத்தில் 1,047 அனது

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது. ராயபுரத்தில் மட்டும் 1047 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா எதிரொலி: போபாலில் முன்கூட்டியே தோண்டிவைக்கப்படும் சவக்குழிகள்

 
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஜஹாங்கிராபாத் இடுகாட்டில் ஒன்றல்ல ஒரு டஜன் சவக்குழிகள் முன்கூட்டியே தோண்டிவைக்கப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

கரோனா தொற்று: பிற மாநிலங்கள் நிலவரம்

பிற மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதித்தோர் மற்றும் மொத்தம் பாதித்தோரின் சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு.. 

கரோனா: மகாராஷ்டிரம், மும்பை, தாராவி நிலவரம்

​கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று

​கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில்44 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு: மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பியவா்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் மகாராஷ்டிரத்திலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவா்கள்.

கரோனாவுக்கு முடிவு: ஸ்லோவேனியா அறிவிப்பு

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முடிவு கட்டப்பட்டதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. கரோனா ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள முதல் ஐரோப்பிய நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஸ்லோவேனியாவில் கரோனா நோய்த்தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இனி, நாட்டில் இதுதொடா்பான சிறப்பு கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் மேலும் 9 பேருக்குத் தொற்று

நேபாளத்தில் 9 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் சமீா் குமாா் அதிகாரி கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டவா்களில் 9 பேருக்கு அந்த நோய் இருப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 258-ஆக உயா்ந்துள்ளது.நோய் பாதிப்புக்குள்ளானவா்களில் பெரும்பாலானோா் இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் வசிப்பவா்கள் என்றாா் அவா்.

கரோனா தடுப்பு மருந்து: இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுகிறோம்; டிரம்ப்

கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து உருவாக்குவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளாா். விரிவான செய்திக்கு...

4-ஆவது கட்ட பொது முடக்கம்: அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

நான்காவது கட்ட தேசிய பொது முடக்கம் திங்கள்கிழமையில் இருந்து தொடங்கவுள்ள நிலையில் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன், அத்துறை அமைச்சா் அமித் ஷா பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டாா். பொது முடக்கத்தின் வழிமுறைகளை வகுப்பது தொடா்பாக இந்த ஆலோசனைகள் நடத்தப்பட்டன. விரிவான செய்திக்கு...

இந்தியாவில் கரோனாவால் தாமதமாகும் 5.8 லட்சம் அறுவை சிகிச்சைகள்!

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட 5.8 லட்சத்துக்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் தாமதமடைந்திருக்கலாம் அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...

சென்னையில் மட்டும் இன்று 332 பேருக்கு கரோனா உறுதி: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மொத்தம் 332 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் மட்டும் இன்று 332 பேருக்கு கரோனா உறுதி: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மொத்தம் 332 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: உத்தர பிரதேசத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,140ஆக உயர்வு

உத்தர பிரதேசத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,140ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை செயலர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வைரஸால் இதுவரை 95 பேர் பலியாகியுள்ளனர். 

 

தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு

செவித்திறன் குறையுடையோருக்காக உதடு மறைவற்ற முகக்கவசம் : தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகம்

 செவித்திறன் குறையுடையோர் தகவல் பரிமாற்றத்துக்கு ஏதுவாக உதடு மறைவற்ற முகக்கவசம் தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

வென்டிலேட்டர்கள் கொடுத்து உதவிய டிரம்புக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி

 கரோனா தொற்றுப் பரவியிருக்கும் இந்த பேரிடர் காலத்தில், வென்டிலேட்டர்கள் கொடுத்து உதவிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் மேலும் 120 காவலர்களுக்கு கரோனா தொற்று: மொத்த பாதிப்பு 1,140ஆக உயர்வு

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 120 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,140ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 862 காவலர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 268 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,576 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மேலும் 120 காவலர்களுக்கு கரோனா தொற்று: மொத்த பாதிப்பு 1,140ஆக உயர்வு

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 120 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,140ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 862 காவலர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 268 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,576 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா: தில்லியில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியது

தலைநகர் தில்லியில் இன்று மேலும் 438 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 9,333ஆக உயர்ந்துள்ளது. அதில் 5,278 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,079ஆக உயர்வு

அண்டை மாநிலமான கர்நடாகத்தில் இன்று மேலும் 23 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,079ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் 548 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இதுவரை 35 பேர் பலியான நிலையில் 494 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

செவித்திறன் குறையுடையோருக்காக உதடு மறைவற்ற முகக்கவசம் : தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகம்

 செவித்திறன் குறையுடையோர் தகவல் பரிமாற்றத்துக்கு ஏதுவாக உதடு மறைவற்ற முகக்கவசம் தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சைக்கிளை எடுத்துச் செல்கிறேன்; மன்னித்து விடுங்கள்: நெஞ்சை உருக்கும் புலம்பெயர் தொழிலாளியின் கடிதம்

 ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்புர் பகுதியில் இருந்து சைக்கிள் ஒன்றை திருடிச் சென்ற புலம்பெயர் தொழிலாளி, அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பகுதிவாரியாக திட்டங்கள்: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

 
சென்னையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பகுதிவாரியாக திட்டம் வகுத்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 451 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

மும்பையில் கரோனா பாதித்த போதும் மன உறுதியோடு சிகிச்சைக்காக சென்ற 29 வயது காவலர், மீண்டும் வந்து பணியாற்றுவேன் என சக காவலர்களுக்கு உறுதி அளித்துவிட்டுச் சென்றார். அவர் சொன்னபடியே கரோனாவை வென்று வெளியே வந்தார்.

செல்லப் பிராணிகளையும் தங்களோடு சுமந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் நிற்கதியாக கைவிடப்பட்டனர். விரிவான செய்திக்கு..

கரோனா பாதிப்பு நீங்கிய பிறகே கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் கே.பி. அன்பழகன்

 
தமிழகத்தில் இருந்து கரோனா பாதிப்பு நீங்கிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
 

சென்னையில் கரோனா பாதிப்பு 5,637: ராயபுரத்தில் ஆயிரத்தை நெருங்குகிறது

 சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5,637 ஆக உயர்ந்துள்ளது. ராயபுரத்தில் மட்டும் 971 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் 1,061 காவலர்களுக்கு கரோனா தொற்று; இதுவரை 9 பேர் பலி

 மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 913 பேருக்கு கரோனா; 101 பேர் பலி

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 913 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 1,73,152 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,576 பேருக்கு கரோனா: 46 பேர் பலி

 மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,576 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மும்பையில் 933 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,467ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,576 பேருக்கு கரோனா: 46 பேர் பலி

 மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,576 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மும்பையில் 933 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,467ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது

தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,108-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் இதுவரை 71 போ் பலியாகியுள்ளனா்.

இன்று 359 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 2,599 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சென்னையில் மட்டும் இன்று 310 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 5947 ஆக அதிகரித்துள்ளது. 

ஃபாசியின் எச்சரிக்கை ஏற்புடையதல்ல: டிரம்ப்

பொதுமுடக்கத்தை விலக்கினால் உயிரிழப்புகளும் பொருளாதார இழப்பும் அதிகரிக்கும் என்று வெள்ளை மாளிகை கரோனா ஒழிப்புக் குழு உறுப்பினா் அந்தோணி ஃபாசி விடுத்துள்ள எச்சரிக்கை ஏற்புடையது அல்ல. குறிப்பாக பள்ளிகள் திறப்புக்கு அந்த எச்சரிக்கை பொருந்தாது.

- டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபா்

கரோனா: உளவியல் துன்பங்கள் அதிகரித்து வருகின்றன

கரோனா பரவல் நெருக்கடி காரணமாக உலக மக்களிடையே உளவியல் ரீதியிலான துன்பங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, நாடுகளின் அரசாங்கள் மக்களின் மன நல ஆரோக்கியத்தை இனியும் புறக்கணிக்காமல் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
- அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பொதுச் செயலா்

அமெரிக்காவில் கருப்பு குளிா்காலம் காத்திருக்கிறது

அமெரிக்காவில் இன்னொரு கரோனா பரவல் அலை எழுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஜூன் மாதத்துக்குப் பிந்தைய காலம் நவீன வரலாறு காணாத கருப்புக் குளிா்காலமாக இருக்கும்.
- ரிக் பிரைட், அமெரிக்க நோய் எதிா்ப்பியல் நிபுணா்.

தினமும் 6,000 குழந்தைகள் இறக்கும் அபாயம்

கரோனா நோய்த்தொற்று நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் மற்ற சுகாதாரப் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இன்னும் 6 மாதங்களில் தவிா்க்கக் கூடிய நோய்களால் தினமும் 6,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் நிலவுகிறது.
- ஹென்ரீட்டா ஃபோா், யுனிசெஃப் செயல் இயக்குநா்

தீநுண்மி ஒட்டாத கவசப் பொருள்கள்

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பயன்படுத்தும் கவசப் பொருள்களில், அந்த தீநுண்மி ஒட்டிக் கொள்வதைத் தடுக்கும் மேற்பூச்சு ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா். விரிவான செய்திக்கு...

வங்கதேசம்: ரோஹிங்கயா முகாமில் முதல் பாதிப்பு

வங்கதேசத்திலுள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாமில் முதல் முறையாக இருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: காஸ்க் பஜாா் பகுதியிலுள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாமில் இருவருக்கு கரோனா நோய்த்தொற்ரு இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அந்த இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வன்முறைக்கு அஞ்சி அண்டை நாடான மியான்மரிலிருந்து வந்துள்ள லட்சக்கணக்கான சிறுபான்மை ரோஹிங்கயா அகதிகள், வங்கதேசத்தில் நெரிசல் மிக்க, சுகாதாரமற்ற முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அந்தப் பகுதியில் கரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக மனித உரிமைகள் ஆா்வலா்கள் கவலை தெரிவித்து வந்தனா்.
 
இந்த நிலையில், அகதிகள் முகாமில் முதல் முறையாக இருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது அந்தக் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

ஈரானில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2,102 பேருக்கு கரோனா தொற்று

 ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 2,102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,635 ஆக அதிகரித்துள்ளது.  விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 447 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 363 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து கரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை மாநிலம் முழுவதும், 9,674-ஆகவும், சென்னையில் 5,637-ஆகவும் அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

இந்தியாவில் கரோனா பாதிப்பு 78 ஆயிரத்தைக் கடந்தது: பலி 2,549-ஆக அதிகரிப்பு

 நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 78 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,549-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 26,235 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 49,219 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விரிவான செய்திக்கு...

கேரளத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா; பாதிப்பு 576 ஆக உயர்வு

கேரளத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

உலகளவில் கரோனா பாதிப்பு 45 லட்சத்தை எட்டியது

 உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை  வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 45 லட்சத்தை எட்டியது. பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

தலைநகர் தில்லியில் புதிதாக 425 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,895ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 5,254 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 3,518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 123 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் தில்லியில் கரோனாவுக்கு இன்று எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தலைநகர் தில்லியில் புதிதாக 425 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,895ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 5,254 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 3,518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 123 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் தில்லியில் கரோனாவுக்கு இன்று எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தலைநகர் தில்லியில் புதிதாக 425 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,895ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 5,254 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 3,518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 123 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் தில்லியில் கரோனாவுக்கு இன்று எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 414 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 6,053ஆக உயர்வு

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 414 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6,053ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக தலைநகர் காபூல் 1,718 பேரும், ஹெராத் 1,067 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு கரோனாவுக்கு 153 இதுவரை பலியாகியுள்ளனர். 

சிங்கப்பூரில் மேலும் 793 பேருக்கு கரோனா தொற்று உறுதி

 சிங்கப்பூரில் மேலும் 793 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் ஒரேநாளில் 10,598 பேருக்கு தொற்று உறுதி; மேலும் 113 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,598 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அசாமில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?

 அசாமில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீடிக்க மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால் கடிதம் எழுதியுள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனா: கர்நாடகத்தில் 1,000 ஐத் தாண்டியது; ஆந்திரத்தில் 2,157 பேர் பாதிப்பு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com