அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்


கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.01,139-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 3163-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39174- ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 134 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.01,139-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 3163-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39174- ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 134 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனாவின் தோற்றுவாய்: விசாரணைக்கு சீனா ஒப்புதல்

கரோனா நோய்த்தொற்று உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணையை உலக சுகாதார அமைப்பு நடத்துவதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது.விரிவான செய்திக்கு...

கரோனா தடுப்பு மருந்து விரைவில் கிடைக்க வாய்ப்பில்லை: ஐரோப்பிய மருத்துவ அதிகாரி தகவல்

பிரஸல்ஸ்: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து பொது மக்களுக்கு விரைவில் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று ஐரோப்பிய மருத்துவ மைய அதிகாரி குவாய்டோ ராசி தெரிவித்தார்.  விரிவான செய்திக்கு...

கரோனா பாதிப்பு: ராஜஸ்தான், பிகார், ஒடிசா நிலவரம்

 கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 820 பேர் உயிரிழப்பு

 அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 820 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: மகாராஷ்டிரம், மும்பை, தாராவி நிலவரம்

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் மட்டும் 7 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,117 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று: பினராயி விஜயன்

கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனா: இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 96,169-ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 5242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927-லிருந்து 96,169-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 157 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 2,872-லிருந்து 3,029-ஆக உயர்ந்துள்ளது. 

 

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு; உள்ளூர் பேருந்துகளை இயக்கவும் முடிவு

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 536 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 536 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ரஷியாவில் தொடர்ந்து 3 ஆவது நாளாக 10 ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,926 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
 

ஜெர்மனியில் மேலும் 342 பேருக்கு கரோனா தொற்று; பலி 7,935 ஆக உயர்வு

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 342 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 1,74,697 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சிங்கப்பூரில் மேலும் 305 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சிங்கப்பூரில் மேலும் 305 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கர்நாடகத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதி; 4 மாநில மக்கள் நுழையத் தடை!

குஜராத், மகாராஷ்டிரம், கேரளம் மற்றும் தமிழகத்தில் இருந்து பொதுமக்கள் கர்நாடகம் வர மே 31 வரை அனுமதிக்கப்பட மாட்டாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.  விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,197 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை  42,125 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஓப்போ தொழிற்சாலையில் 6 ஊழியர்களுக்கு கரோனா; மேலும் 3,000 பேருக்கு பரிசோதனை

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 190 காவலர்களுக்கு கரோனா: காவல் ஆணையர் தகவல்

 சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

இறக்கும் தறுவாயில் உள்ள மகனைப் பார்க்க.. ஒரு புகைப்படத்தின் சோகக் கதை

 புது தில்லி: சமீப நாள்களில் செய்திகளைப் படித்தவர்களும், பார்த்தவர்களும் இந்த  புகைப்படத்தை நிச்சயம் பார்க்கத் தவறியிருக்க முடியாது. விரிவான செய்திக்கு..

குவைத்தில் இருந்து போபால் திரும்பிய 19 பேருக்கு கரோனா

 போபால்: குவைத்தில் இருந்து இந்தூர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 130 பயணிகளில் 19 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னை ராயபுரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,185 ஆக உயர்வு

 சென்னை ராயபுரத்தில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,185 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோடம்பாக்கம் உள்ளது. இங்கு 1,041 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் பாதிப்பு 85,940: பலி 2,752-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் புதிதாக 3,970 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 85,940-ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 103 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 2,752-ஆக அதிகரித்துள்ளது.
 
நாடு முழுவதும் 53,035 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 30,152 போ் குணமடைந்துள்ளனா். இது மொத்த பாதிப்பில் 35.08 சதவீதமாகும். விரிவான  செய்திக்கு...

தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் 939 போ் குணமடைந்தனா்

தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் ஒரே நாளில் 939 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மேலும் சென்னையில் 332 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 5,946 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 6,271- ஆக அதிகரித்துள்ளது. விரிவான  செய்திக்கு...

சென்னையில் கரோனா பாதிப்பு 6,271 ஆக அதிகரிப்பு

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 6,271-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனாவின் தாக்கம் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை (மே 16) 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,271-ஆக உயா்ந்துள்ளது. விரிவான  செய்திக்கு...

ரூ.228 லட்சம் கோடி கரோனா நிவாரணம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா

கரோனா நோய்த்தொற்று பரவல் நெருக்கடியை சமாளிப்பதற்காக 3 லட்சம் கோடி (சுமாா் ரூ.228 லட்சம் கோடி) டாலா் நிவாரண நிதி ஒதுக்குவதற்கான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் கீழவையான பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினா் நிறைவேற்றியுள்ளனா். விரிவான  செய்திக்கு...

சிங்கப்பூா் மேலும் 465 பேருக்கு கரோனா தொற்று

சிங்கப்பூரில் 465 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,356-ஆக உயா்ந்துள்ளது.
 
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூரில் பணியாற்றி வரும் தொழிலாளா்கள்தான் அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, வெளிநாட்டுப் பணியாளா்கள் தங்கியிருக்கும் இடங்களில் தொடா்ந்து கரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இதற்கிடையே தீநுண்மி பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து தளா்த்தப்படுவதால், கரோனா பாதிப்பு எண்ணிக்கை தீவிரமடையக் கூடும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கான் கிம் யாங் எச்சரித்துள்ளாா்.

பாகிஸ்தான் பாதிப்பு எண்ணிக்கை 38,799-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 38,799-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 834 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 38,799-ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 834-ஆக உள்ளது.
 
அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 14,201 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சிந்து மாகாணத்தில் 5,678 பேரும் கைபா்-பாக்துன்கவா மாகாணத்தில் 2,457 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யேமன் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு

யேமனில் கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு மிக மோசமாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சா்வதேச அங்கீகாரம் பெற்ற அதிபா் அல்-அபாதி தலைமையிலான அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்குப் பகுதி நகரமான ஏடனில், அதிகாரிகள் கூறியதாவது:
 
கடந்த வாரம் மட்டும் ஏடனில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். அவா்களனைவருக்கும் கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் காணப்பட்டன. எனவே, அந்த நோய்த்தொற்று காரணமாக அவா்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நாட்டில் சுகாதாரக் கட்டமைப்புகள் மிகவும் மோசமாக உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் கரோனா நோய்த்தொற்று பரவல் நிலைமை மிகவும் மோசமடையும் என்று அதிகாரிகள் கூறினா்.
 
யேமனின் தெற்குப் பகுதியில் 106 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று இருப்பது அதிகாரப்பூா்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா; பாதிப்பு 11 ஆயிரத்தைத் தாண்டியது!

 தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சிங்கப்பூரில் மேலும் 682 பேருக்கு கரோனா; பாதிப்பு 28 ஆயிரத்தைத் தாண்டியது!

 சிங்கப்பூரில் மேலும் 682 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு விலக்கு

 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. விரிவான செய்திக்கு..

ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வு அறிவிக்கப்படாத மாவட்டங்கள்

 தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். மே 17 ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

 மகாராஷ்டிரத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. விரிவான செய்திக்கு..

ராஜஸ்தானில் பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியது; ஒடிசாவில் மேலும் 91 பேருக்கு பாதிப்பு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
 

உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,720,077 -ஆக அதிகரித்துள்ளது, இறப்பு எண்ணிக்கை 3,13,216 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 18,11,658 பேர் குணமடைந்து வீடு திரு்பியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

சவுதி அரேபியாவில் தொற்று பாதிப்பு 52 ஆயிரத்தை கடந்தது

ரியாத்: சவூதி அரேபியாவில் புதிதாக 2,840 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 52,016 -ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். விரிவான செய்திக்கு...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com