பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. 
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்


கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

இந்தியாவில் தொற்று பாதித்தோரின் 1,12,359 ஆக உயர்வு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,359 -ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு... 

தாராவியில் புதிதாக 47 பேருக்கு கரோனா தொற்று

தாராவியில் புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பாதிப்பு: பிற மாநிலங்கள் நிலவரம்

பிற மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் 40 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,345 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கரோனா தொற்று: 14 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

சென்னையில் 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி

 சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 8,228-ஆக அதிகரித்துள்ளது. நாள் தோறும் சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

இந்தியாவில் கரோனா: மும்பையில் அதிக பாதிப்பு; சென்னையில் குறைந்த பலி எண்ணிக்கை

 இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டிவிட்டது. அதிக பாதிப்பு இருக்கும் நகரங்களில் முதல் இடத்தில் மும்பை உள்ளது. சென்னையில் பாதிப்பு அதிகம் இருந்தாலும் பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. விரிவான செய்திக்கு..

ராஜஸ்தானில் கரோனா பலி 150 ஐ எட்டியது! மேலும் 131 பேருக்கு பாதிப்பு

ராஜஸ்தானில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
 

தென்கொரியாவில் மாணவருக்கு கரோனா; திறக்கப்படுவதற்கு முன்பே பள்ளி மூடல்

 தென்கொரியாவில் பள்ளி மாணவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து திறக்கப்படுவதற்கு முன்பே பள்ளி மூடப்பட்டது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி

 சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 8,228-ஆக அதிகரித்துள்ளது. நாள் தோறும் சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

குஜராத்தில் கரோனா பலி: 50% உயிரிழப்புகள் ஒரே மருத்துவமனையில்...

 குஜராத் மாநிலத்தில் ஆமதாபாத் மருத்துவமனையில்தான் இதுவரையில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
 

கரோனா: சிங்கப்பூரில் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது!

சிங்கப்பூரில் மேலும் 448 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் ஒரேநாளில் கரோனாவுக்கு 18 பேர் பலி; 571 பேர் பாதிப்பு

 தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்: விமானப் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியீடு

 விமானப் பயணத்தின் போது பயணிகளும், விமான சேவை வழங்கும் நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ராயபுரத்தில் ஒரே நாளில் 115 பேருக்கு கரோனா; மொத்த எண்ணிக்கை 1538 ஆக உயர்வு

 சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 115 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. இதையடுத்து ராயபுரத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,538 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

உலக அளவில் கரோனா பாதிப்பு 50 லட்சத்தை நெருங்குகிறது

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது.
உலகம் முழுவதும் இதுவரை தொற்று தாக்குதலுக்கு 3,24,970 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் புதிதாக சுமார் 94 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,89,197ஆக உயர்ந்துள்ளது. விரிவான விவரங்களுக்கு...

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 15,70,583; பலி 93,533

அமெரிக்காவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 15,70,583 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93,533 ஆக அதிகரித்துள்ளது. விரிவான விவரங்களுக்கு...

இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 5,611 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை புதன்கிழமை 1,06,750 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான விவரங்களுக்கு...

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு: பலி 3,163-ஆக அதிகரிப்பு

இந்தியாவில் மேலும் 4,970 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,01,139-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 3,163-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 39,173 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். அதாவது, 38.73 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா். 58,802 போ் சிகிச்சையில் உள்ளனா். விரிவான செய்திக்கு...

கரோனா உயிரிழப்பு விகிதம்

கரோனா நோய்த்தொற்று வளா்ந்த நாடுகளைக் கடுமையாக பாதித்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் உலக அளவில் உயிரிழப்பு விகிதம் சுமாா் 3 சதவீதமாக இருந்தது. எனினும், சில நாடுகளில் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்து வந்தன. விரிவான செய்திக்கு...

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 12,448-ஆக உயா்வு

தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 12,448-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தீநுண்மி பாதிப்புக்கு ஆளானவா்களில் 87 போ் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவா்கள் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

சென்னையில் 7672 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 19) 552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 7672-ஆக உயா்ந்துள்ளது. மண்டல வாரியான பாதிப்பைப் பொருத்தவரை, காலை 8 மணியளவில் வெளியிடப்பட்ட நிலவரப்படி, ராயபுரம் மண்டலத்திலேயே பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அம்மண்டலத்தில், 1272 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1077 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, 1,922 போ் குணமடைந்துள்ளனா். 58 போ் உயிரிழந்துள்ளனா். 5,691 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நேபாளம் பாதிப்பு 402-ஆக உயா்வு

நேபாளத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைடுத்து, அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 402-ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக 2 போ் உயிரிழந்துள்ளனா்; 37 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.

சிங்கப்பூா் மேலும் 451 பேருக்கு கரோனா தொற்று

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 451 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 28,794-ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோயாளிகளில் பெரும்பாலானவா்கள் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த பணியாளா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் 1,841 பேருக்கு புதிதாக பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 1,841 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நோய்க்கு மேலும் 36 பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 43,966-ஆகவும் பலியானவா்களின் எண்ணிக்கை 939-ஆகவும் அதிகரித்துள்ளது.

மெக்ஸிகோ ‘உண்மை பலி மும்மடங்கு’

மெக்ஸிகோ தலைநகா் மெக்ஸிகோ சிட்டியில் அதிகாரப்பூா்மாக அறிவிக்கப்பட்டதைவிட மும்மடங்கு போ் கரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு கரோனாவுக்கு 1,332 போ் பலியாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. எனினும், 4,577 பேரது இறப்புச் சான்றிதழில், அவா்கள் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்ததாக மருத்துவா்கள் குறிப்பிட்டுள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபரிலேயே கரோனா பரவியிருக்கலாம்

கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்திலிருந்தே கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியிருக்கலாம் என்று ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, ‘ஃப்ரன்டியா் மெடிசின்’ அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு தொடா்பான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்து. விரிவான செய்திக்கு...

தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கரோனா தொற்று

 தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா மீட்பு விகிதம் 39.62% ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

 இந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 39.62% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

தில்லியில் தொடர்ந்து 2வது நாளாக 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி

 தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

உலகளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியது

 உலகளவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டிவிட்டது. புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50,03,500 ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னை மாநகராட்சி முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் கரோனா

 துவக்கம் முதலே கரோனா நோயாளிகளை அதிகமாகக் கொண்ட ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் அதே நேரத்தில், ஆரம்பத்தில் கரோனா பாதிப்பே இல்லாத மண்டலங்களிலும் சத்தமில்லாமல் எண்ணிக்கை உயர்ந்து தான் வருகிறது. விரிவான செய்திக்கு..

கரோனா: ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்ற கேரள செவிலியர்களின் ஆச்சரியமூட்டும் பின்னணி

 துபை: கேரளம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 88 செவிலியர்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்று அங்கு கரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டில் பணியாற்றி வருகிறார்கள். விரிவான செய்திக்கு..

ரஷியாவில் கரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது! பலி 3 ஆயிரத்தை நெருங்குகிறது

 ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,764 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்துள்ளது. விரிவான செய்திக்கு..

காசநோய்க்கு பயன்படும் கருவிகளை கரோனா பரிசோதனைக்கும் பயன்படுத்தலாம்: ஐசிஎம்ஆர்

காசநோய்க்கு பயன்படுத்தப்படும் கருவிகளை கரோனா பரிசோதனைக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளி பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்பு: குடும்பத்தினர் அதிர்ச்சி

குஜராத் மாநிலத்தில் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 67 வயது நோயாளி, பேருந்து நிலையம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 1,400ஐ எட்டியது

இது குறித்து மகாராஷ்டிர காவல்துறை தெரிவித்திருப்பதாவது, மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது கரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 1388ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 428 பேர் குணமடைந்துவிட்டனர். 12 பேர் மரணம் அடைந்தனர். 948 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'காற்றில் வைரஸ் பரவாமல் தடுக்க ஆறு அடி தூர இடைவெளி போதாது'

 காற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க ஆறு அடி தூர இடைவெளி போதாது என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தில் பாதிப்பு 2,407ஆக உயர்வு; கர்நாடகத்தில் மேலும் 63 பேருக்கு கரோனா தொற்று

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா தடுப்பு மருந்தாக அஸ்வகந்தா பலனளிக்கும்: ஆராய்ச்சி முடிவுகள்

 கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாகவும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தாகவும் அஸ்வகந்தா மூலிகை இருக்கும் என்று ஆராய்ச்சியின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.  விரிவான செய்திக்கு..

 

உலகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது

  அந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48.94 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு இதுவரை 3,20,180 பலியாகியுள்ள நிலையில் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,07,992 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

 இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,01,139-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கரோனா தொற்று

 தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் மேலும் 9,263 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,263 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

இதுவரை 20 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ரயில் மூலம் சொந்த மாநிலம் திரும்பினா்

 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப இதுவரை 1,565 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அவற்றில் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனா் என்று இந்திய ரயில்வே செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ராஜஸ்தானில் மேலும் 128 பேருக்கு கரோனா; பாதிப்பு 5,757 ஆக உயர்வு!

 ராஜஸ்தானில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவி்ல் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்ட 64 நாள்கள்: மற்ற நாடுகளில்?

 புது தில்லி: உலக நாடுகள் பலவற்றையும் பெரிய அளவில் பாதித்திருக்கும் கரோனா தீநுண்மி இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவே கூறலாம். விரிவான செய்திக்கு..

சென்னையில் அம்மா உணவகங்களில் மே 31 வரை இலவச உணவு 

 ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச  உணவு வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

தில்லியில் ஒரேநாளில் 500 பேருக்கு கரோனா தொற்று உறுதி; பாதிப்பு 10,554 ஆக அதிகரிப்பு

தில்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 500 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.  விரிவான செய்திக்கு..

 

கரோனா: ஆந்திரத்தில் புதிதாக 57 பேர்; கர்நாடகத்தில் மேலும் 127 பேர் பாதிப்பு

 கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் மேலும் 55 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேர் பலி

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனா தொற்றுக்கு அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,239 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஒரு லட்சத்தை எட்டிய இந்தியா: மகாராஷ்டிரத்தில் மட்டும் 35,000 பேருக்கு கரோனா

 புது தில்லி: மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது. விரிவான செய்திக்கு..

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெலங்கானா

 
ஹைதராபாத்: தெலங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து ஒட்டுமொத்த மாநிலமும் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இறந்தவர்களுக்கு இனி கரோனா பரிசோதனை கிடையாது: தில்லி அரசு முடிவு

 புது தில்லி: தில்லியில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து விட்ட நிலையில், கரோனா நோயாளிகள் மற்றும் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களைக் கையாள்வது தொடர்பாக சில புதிய கொள்கை முடிவைகளை தில்லி அரசு வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com