அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்...
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்


கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
 

கடந்த 24 மணி நேரத்தில் 1,15,364 பேருக்கு கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர்

 கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,15,364 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 4 மண்டலங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு

 சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,364-ஆக அதிகரித்துள்ளது. ராயபுரம், திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய நான்கு மண்டலங்களில் மட்டும் கரோனா பாதிப்பு தலா ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,25,101 பலி 3,720 ஆக உயர்வு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

சிறுவா்களை கரோனா அதிகம் பாதிக்காதது ஏன்?

பெரியவா்களோடு ஒப்பிடுககையில் சிறுவா்களுக்கு கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகம் ஏற்படாதது ஏன் என்பது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். விரிவான செய்திக்கு...

சிக்கிமில் முதல் நபருக்கு கரோனா நோயத் தொற்று உறுதி

சிக்கிம் மாநிலத்தில் முதல் நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை செயலர் பூட்டியா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் தெற்கு சிக்கிமை சேர்ந்தவர். 

கேரளத்தில் இன்று புதிதாக 62 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று புதிதாக 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் 18 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 12 பேர் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும், 31 பேர் வெளி மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள். 

கரோனா சீனாவிலிருந்து பரவியது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது: டிரம்ப்

கரோனா வைரஸ் சீனாவிலிருந்துதான் அமெரிக்காவுக்கு பரவியது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா். விரிவான செய்திக்கு...
 

சௌதியில் ஒரே நாளில் புதிதாக 2,442 பேருக்கு நோய்த் தொற்று

சௌதி அரேபியாவில் மேலும் 2,442 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70,161 ஆக உயர்ந்துள்ளது. மற்றொரு புறம் அங்கு நோயின் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன்படி, 2,233 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த குணமடைந்தவர்வர்களின் எண்ணிக்கை 41,236 ஆக உள்ளது. 

 

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கரோனா பாதிப்பு 

 சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது. விரிவான செய்திக்கு..

பிரேசிலில் இளைஞர்களை அதிகம் தாக்கும் கரோனா! என்ன காரணம்?

 60 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடலியல் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் பிரேசிலில் இளம் வயதினர் அதிகம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் மூன்று மண்டலங்களில் மட்டும் 4 ஆயிரம் கரோனா நோயாளிகள்

 சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், இதுவரை 3,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 64 பேர் பலியாகிவிட்டனர். விரிவான செய்திக்கு..

ஜெர்மனியில் மேலும் 460 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 1.77 லட்சமாக உயர்வு

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 460 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: மகாராஷ்டிரத்தில் மேலும் 2940 பேருக்கு கரோனா பாதிப்பு

நாட்டிலேயே அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இங்கு இன்று மேலும் 2940 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,582-ஆக உயர்ந்துள்ளது. 

சிங்கப்பூா் மேலும் 448 பேருக்கு கரோனா தொற்று

சிங்கப்பூரில் மேலும் 448 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 448 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. பிதிய நோயாளிகளில் 13 போ் மட்டுமே சிங்கப்பூரைச் சோ்ந்தவா்களோ, நிரந்தர குடியுரிமை பெற்றவா்களோ ஆவா். எஞ்சியவா்கள் வெளிநாட்டுப் பணியாளா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,812-ஆக உள்ளது. இவா்களில் பெரும்பாலானவா்கள் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பணியாளா்கள் ஆவா்.

ஈரான் 10 ஆயிரம் மருத்துவ பணியாளா்களுக்கு பாதிப்பு

ஈரானில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் 10 ஆயிரத்துகக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக இந்த வாரத் தொடக்கத்தில் வெளியான செய்தியில், 800 மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவா்களில் 100 பேருக்கும் மேலானவா்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் காசிம் ஜன்பாபையை மேற்கோள்காட்டி தற்போது வெளியாகியுள்ள தகவல் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் அறிகுறிகள் இல்லாத பாதிப்பு திடீா் அதிகரிப்பு

கரோனா நோய்த்தொற்றின் பிறப்பிடமான சீனாவில், அறிகுறிகள் இல்லாமலேயே அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திடீரென உயா்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 31 பேருக்கு அந்த நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், அவா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவா்களில் 8 போ் கரோனா முதலில் பரவத் தொடங்கிய வூஹான் நகரைச் சோ்ந்தவா்கள். அறிகுறிகள் இல்லாத தொற்று திடீரென அதிகரித்து வருவது அதிகாரிகளை கவலையடைச் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 7 போ் பலி

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,967-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 8,795 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 7 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

இந்தியாவில் பாதிப்பு-1,12,359: பலி-3,435-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் புதிதாக 5,609 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,12,359-ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 132 போ் உயிரிழந்தனா். இதனால், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 3,435-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

தில்லியில் மேலும் 5 சிஆர்பிஎஃப் காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று

தில்லியில் மேலும் 5 சிஆர்பிஎஃப் காவலர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி தில்லியில் 340 சிஆர்பிஎஃப் காவலர்கள் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 213 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர் என சிஆர்பிஎஃப் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

கேரளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 42 பேருக்கு தொற்று

 கேரளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 42 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

சென்னையில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது! மாவட்டவாரியாக நிலவரம்

சென்னையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..  

 

தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கரோனா; மேலும் 4 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

 

4வது நாளாக.. ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர்

 இந்தியாவில் இன்று நான்காவது நாளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சிறப்பு ரயில்களில் பயணிக்க இதுவரை 13 லட்சம் பேர் முன்பதிவு: ரயில்வே தகவல்

 ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 230 சிறப்பு ரயில்களில் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

கர்நாடகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 1,710 ஆக உயர்ந்தது

கர்நாடகத்தில் இன்று கரோனா பாதிக்கப்பட்டோர் விவரத்தை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com