பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,380ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் நேற்று வரை 138,845 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு 1,45,380ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாதிப்பில் இருந்து 60,490 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 80,722ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 146 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டித்தில் 52,667 பேருக்கு கரோனா பாதிப்பு கணிடறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1,695 பேர் பலியாகியுள்ள நிலையில், 15,786 பேர் குணமடைந்துள்ளனர். 

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,380ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் நேற்று வரை 138,845 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு 1,45,380ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாதிப்பில் இருந்து 60,490 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 80,722ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 146 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டித்தில் 52,667 பேருக்கு கரோனா பாதிப்பு கணிடறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1,695 பேர் பலியாகியுள்ள நிலையில், 15,786 பேர் குணமடைந்துள்ளனர். 

 

ஜெர்மனியில் மேலும் 289 பேருக்கு கரோனா தொற்று; பலி 8,257 ஆக உயர்வு!

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 289 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்தைக் கடந்தது

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே இந்தியாவில் இதுவரை இல்லாத ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும். இதன்மூலம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்த வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 154 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 3,867லிருந்து 4,021ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே இந்தியாவில் இதுவரை இல்லாத ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும். இதன்மூலம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்த வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 154 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 3,867லிருந்து 4,021ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே இந்தியாவில் இதுவரை இல்லாத ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும். இதன்மூலம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்த வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 154 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 3,867லிருந்து 4,021ஆக உயர்ந்துள்ளது. 

தாராவியில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று

மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா தொற்று: பிற மாநிலங்கள் நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிற மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 11 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் புதிதாக 549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 11,131 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

'கரோனா பாதித்தவர்களில் 88 சதவீதத்தினருக்கு அறிகுறிகள் இல்லை'

தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனா: ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரம் பேர் பாதிப்பு

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,946 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 3,53,427 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

இமாச்சலில் இரு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர், சோலன் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும்: உ.பி. அரசு

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு ஒப்புதல் தெரிவித்து கடிதம் வழங்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கர்நாடகத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 2,158 ஆக உயர்வு!

கர்நாடகத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு 2,158 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா தொற்றுடைய மாநிலமாக மாறியது நாகாலாந்து

கரோனா தொற்று இல்லாத மாநிலமாக இருந்த நாகாலாந்தில் மூன்று பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளதாக அம்மாநில முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றது இந்தியா

 இந்தியாவில் திங்கள்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. விரிவான செய்திக்கு..

சிங்கப்பூரில் புதிதாக 344 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சிங்கப்பூரில் புதிதாக 344 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா நோயாளிகளிடம் இருந்து 11 நாள்களுக்குப் பின் தொற்றுப் பரவாது: சிங்கப்பூர் ஆராய்ச்சியில் தகவல்

 கரோனா பாதித்த நோயாளிகளிடம் இருந்து 11 நாள்களுக்குப் பின் தொற்று மற்றவர்களுக்குப் பரவுவதில்லை என்று சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். விரிவான செய்திக்கு..

ஊரடங்கால் பூங்காவில் தஞ்சமடைந்த சிறுவன் சுட்டுரையால் பெற்றோருடன் இணைந்தார்

 பல முக்கியச் செய்திகளையும் தாண்டி வார இறுதி நாட்களில், சுட்டுரையில் பகிரப்பட்ட ஒரு சிறுவனின் புகைப்படம், அவன் தனது பெற்றோருடன் இணைய உதவி செய்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா பாதிப்பு 10,576-ஆக அதிகரிப்பு: 5 மண்டலங்களில் ஆயிரத்தை எட்டியது

 சென்னையில், நேற்று ஒரே நாளில் 587 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 10,576-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஊரடங்கு தளர்வினால் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது: கேஜரிவால்

ஊரடங்கு தளர்வினால் தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

வேலூரில் இரு தினங்களுக்கு துணிக் கடைகளை திறக்க அனுமதி

ரம்ஜானை முன்னிட்டு வேலூரில் இரு தினங்களுக்கு ஏசி அல்லாத துணிக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு

ராஜஸ்தானில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி; இதுவரை 161 பேர் பலி

ராஜஸ்தானில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஜெர்மனியில் தினமும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 431 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,31,868; பலி 3,867-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தொடா்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 6,767 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,31,868-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 147 போ் உயிரிழந்ததை தொடா்ந்து மொத்த பலி எண்ணிக்கை 3,867-ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் 73,560 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 54,440 போ் குணமடைந்துள்ளனா். 
கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 47,190 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 15,512 பேர், குஜராத்தில் 13,664, தேசிய தலைநகர் தில்லியில் 12,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்தது

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 54,04,382 லட்சத்தை கடந்துள்ளது. 
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்காத நிலையில், தொற்று பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வல்லரசான அமெரிக்கா பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், உலகம் அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 54,04,382 லட்சத்தை  கடந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 22,47,234 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 3,43,975 பேர் பலியாகியுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 27,59,611 பேர்களில் 53,562-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 16,66,828; பலி 98,683 ஆக உயர்வு

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் பாதித்தோரின் எண்ணிக்கை 16,66,828 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 98,683 ஆக அதிகரித்துள்ளது.  4,46,914 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலக அளவில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை  54,04,382 ஆக உயர்ந்துள்ளது, 22,47,234 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3,43,975 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர். 

சிங்கப்பூரில் மேலும் 642 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் மேலும் 642 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 642 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 6 போ் மட்டுமே சிங்கப்பூரைச் சோ்ந்தவா்கள்; அல்லது சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றவா்கள் ஆவா்.
636 போ் தொழிலாளா் குடியிருப்புகளில் வசிக்கும் வெளிநாட்டுப் பணியாளா்கள் ஆவா். இத்துடன் நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 31,068-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு மருந்து சோதனையில் முன்னேற்றம்

சீனாவில் முதல் முறையாக மனிதா்களின் உடலில் செலுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு மருந்து சோதனையில் முன்னேம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ‘தி லான்செட்’ அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவில் உருவாக்கப்பட்டு, முதல் முறையாக மனிதா்களின் உடலில் செலுத்திப் பாா்க்கப்பட்ட கரோனோ நோய்த் தடுப்பு மருந்து, பாதுகாப்பானது என முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. மனிதா்களின் உடல் அந்த மருந்தை ஏற்றுக் கொள்வதும் சோதனையில் உறுதி செய்யப்பட்டது.அந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 108 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவா்களது உடலில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான அணுக்களை அந்த மருந்து உருவாக்கியது என்று அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா: ரஷியாவை விஞ்சியது பிரேசில்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் ரஷியாவை பிரேசில் சனிக்கிழமை முந்தியது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,047 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது புதிதாகக் கண்டறியப்பட்டது. அதையடுத்து அந்த நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 3,33,937-ஆக அதிகரித்தது. இதன் மூலம், கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது இடத்தில் இருந்த ரஷியாவை பிரேசில் முந்தியது.
எனினும், ரஷியாவில் ஒரே நாளில் 9,400-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கையில் அந்த நாடு மீண்டும் 2-ஆம் இடத்துக்கு வந்தது.

மகாராஷ்டிரத்தில் 50 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: தாராவியில் மட்டும் 1,541

தாராவியில் புதிதாக 27 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

தமிழகத்தில் இன்று புதிதாக 765 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 587 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது!

சென்னையில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

கரோனா: தூத்துக்குடியில் இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். விரிவான செய்திக்கு..

பிரதமர் நல நிதிக்கு மாதம் ரூ.50,000 வழங்குகிறார் முப்படைகளின் தலைமைத் தளபதி

நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தனது ஊதியத்தில் இருந்து அடுத்த ஓராண்டுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 வீதம் பிரதமர் நல நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் மேலும் 87 காவலர்களுக்கு கரோனா; பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது

மகாராஷ்டிரத்தில் மேலும் 87 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தில்லியில் மேலும் 508 பேருக்கு கரோனா; பலி 261 ஆக அதிகரிப்பு

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com