அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

மிஸோரம்: தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள 168 தேவாலயங்கள் தயார்

மிஸோரத்தில் தனிமைப்படுத்தும் மையங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், 168 தேவாலயங்கள் தங்கள் வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளன. விரிவான செய்திக்கு.. 

கரோனா பாதித்த எய்ட்ஸ் நோயாளி 6 நாள்களில் குணமடைந்தார்: மருத்துவர்கள் ஆச்சரியம்

 எய்ட்ஸ் பாதித்து சிகிச்சையில் இருந்து வரும் நபர், கரோனா தொற்றுக்கு உள்ளாகி வெறும் 6 நாள்களில் குணமடைந்துள்ளார். விரிவான செய்திக்கு..

சென்னையில் தொடர்ந்து உயரும் கரோனா பாதிப்பு; 5 மண்டலங்களில் 7 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

 சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 11,640-ஆக அதிகரித்துள்ளது. இதில், ராயபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2,145-ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. விரிவான செய்திக்கு..

மே 31-க்குப் பிறகு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்கப்படும்: எடியூரப்பா தகவல்

 மே 31 ஆம்  தேதிக்குப் பிறகு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

அமெரிக்காவை விட பிரேசிலில் இருமடங்கு பலி எண்ணிக்கை; நேற்று மட்டும் 1,039 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில்  நேற்று ஒரேநாளில் கரோனாவுக்கு 1,039 பேர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

எய்ட்ஸ் பாதித்த கரோனா நோயாளி 6 நாள்களில் குணமடைந்தார்


எய்ட்ஸ் பாதித்து சிகிச்சையில் இருந்து வரும் நபர், கரோனா தொற்றுக்கு உள்ளாகி வெறும் 6 நாள்களில் குணமடைந்துள்ளார். விரிவான செய்திக்கு..

மிஸோரம்: தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள 168 தேவாலயங்கள் தயார்

 மிஸோரத்தில் தனிமைப்படுத்தும் மையங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், 168 தேவாலயங்கள் தங்கள் வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளன. விரிவான செய்திக்கு..

உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.84 லட்சத்தை கடந்தது

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 56,84,795 -ஆக உயர்ந்துள்ளது.  உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 56,84,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 24,30,593 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,52,225 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் 28,48,877 பேர்களில் 53,100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 1,00,572 -ஆக உயர்வு

அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 1,00,572 -ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடு அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை மொத்தம் 17,25,275 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 100,572 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதித்தோரில் 4,79,969 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,51,767 பலி 4,337 -ஆக உயர்வு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,51,767- ஆக புதன்கிழமை அதிகரித்தது. பலியானவா்கள் எண்ணிக்கை 4,337-ஆக உயா்ந்தது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 170 போ் உயிரிழந்தனா். 6,387 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை 64,426 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். 83,004  போ் சிகிச்சையில் உள்ளனா் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று (புதன்கிழமை) மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 817 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 817 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 792 பேருக்கு கரோனா; பலி 300ஐ தாண்டியது

 தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 792 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கையில் காசில்லை.. குழந்தையை விற்க முயன்ற புலம்பெயர் தொழிலாளர் தம்பதி கைது

 இரண்டு மாத காலத்துக்கும் மேலாக வேலை இல்லாமல், உணவுக்குக் கூட காசில்லாமல் தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களான தம்பதி தங்களது இரண்டு மாதக் குழந்தையை விற்க முயன்றக் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..

ஊரடங்கை மீறி ஆயிரம் பேர் பங்கேற்ற திருமணம்: மணமகன் மீது வழக்கு

 மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்புர் மாவட்டத்தில் கிராம வருவாய் துறை அலுவலரின் திருமணத்தில், ஊரடங்கு உத்தரவையும் மீறி சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றதால், மணமகன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரிவான செய்திக்கு..

விற்பனையாளர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் அமேசான் நிறுவனம்!

அமேசான் நிறுவனம் அதன் கீழ் இயங்கும் விற்பனையாளர்களுக்கு இலவச சுகாதார காப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

அலையன்ஸ் ஏர் விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கரோனா; 41 பேர் தனிமைப்படுத்தல்

அலையன்ஸ் ஏர் விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சிங்கப்பூரில் இன்று 500க்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு

 சிங்கப்பூரில் புதிதாக 533 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனை நிறுத்தி வைப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்

கரோனா நோயாளிகளுக்கு பயன்படும் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை உலக சுகாதார நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. விரிவான செய்திக்கு..

5 ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

மே 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விரிவான செய்திக்கு..

ஒடிசாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,500 ஐத் தாண்டியது!

ஒடிசாவில் புதிதாக 79 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,500 ஐத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 532 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 532 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,380ஆக உயர்வு

 கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தவு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையிலும் நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியது. விரிவான செய்திக்கு..

கரோனா பரிசோதனைக்காக 1.50 லட்சம் பிசிஆா் கருவிகள் தமிழகம் வருகை

 கரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன.  விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் 1 லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி

அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தாராவியில் புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று

தாராவியில் புதிதாக 38 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

24 மணி நேரத்தில் புதிதாக 20 சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு

 கடந்த 24 மணி நேரத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 18 பேர் தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பணியாற்றியவர்கள் ஆவர். விரிவான செய்திக்கு..

கேரளத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று

 கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு.. 

கரோனாவால் உயிரிழந்தோருக்கு இரங்கல்: ஸ்பெயினில் 10 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

கரோனா வைரஸால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஸ்பெயினில் 10 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ராஜஸ்தானில் மேலும் 176 பேருக்கு தொற்று உறுதி

ராஜஸ்தானில் மேலும் 176 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளம்: முகக்கவசம், சமூக இடைவெளியுடன் தேர்வெழுதிய மாணாக்கர்

 திருவனந்தபுரம்: முகக் கவசம், சமூக இடைவெளியுடன் கேரள மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்று நடைபெற்ற பொதுத் தேர்வை 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். விரிவான செய்திக்கு..

பாகிஸ்தான்  பாதிப்பு எண்ணிக்கை  58 ஆயிரமாக உயர்வு; பலி 1,202 ஆனது

 பாகிஸ்தானில் கரோனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 58,278-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்து பலியானோரின் எண்ணிக்கை 1,202 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா தொற்றில்லா மாநிலமாக இருந்த நாகாலாந்தில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு

நாகாலாந்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. விரிவான செய்திக்கு..

கர்நாடகத்தில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று; மொத்த பாதிப்பு 2,282 ஆக உயர்வு

கர்நாடகத்தில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தில்லியில் மேலும் 412 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்குகிறது!

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 412 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு

இமாச்சலில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு? - அமைச்சர் மறுப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு என்பது தவறான தகவல் என அம்மாநில அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார். விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com