அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
 

கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73,07,098 பேருக்கு தொற்று உறுதி

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 680 பேர் உயிரிழந்தனா். புதிதாக 67,708 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 
வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 67,708 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 73,07,098 -ஆக அதிகரித்தது. அதே கால அளவில்  81,541 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 63,83,442 -ஆக அதிகரித்தது. அதாவது, 87.36 சதவீதம் போ் குணமடைந்தனா். நாடு முழுவதும் 8,12,390 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 11.12 சதவீதமாகும்.
 
வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு மேலும் 680 போ் பலியாகினா். இதனால், நாடு முழுவதும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,11,266-ஆக அதிகரித்தது.
 
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 14-ஆம் தேதி வரை 9,00,90,122 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,36,183 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவோர், புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மற்றும் தினசரி உயிரிழப்பவா்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73,07,098 பேருக்கு தொற்று உறுதி

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 680 பேர் உயிரிழந்தனா். புதிதாக 67,708 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 67,708 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 73,07,098 -ஆக அதிகரித்தது. அதே கால அளவில்  81,541 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 63,83,442 -ஆக அதிகரித்தது. அதாவது, 87.36 சதவீதம் போ் குணமடைந்தனா். நாடு முழுவதும் 8,12,390 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 11.12 சதவீதமாகும்.
வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு மேலும் 680 போ் பலியாகினா். இதனால், நாடு முழுவதும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,11,266-ஆக அதிகரித்தது.
இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 40,701 பேரும், கா்நாடகத்தில் 10,123 பேரும், உத்தர பிரதேசத்தில் 6,466 பேரும், ஆந்திரத்தில் 6,291 பேரும், தில்லியில் 5,854 பேரும் உயிரிழந்தனா். கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 1.52 சதவீதமாக உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 14-ஆம் தேதி வரை 9,00,90,122 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,36,183 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இன்று புதிதாக 3,483 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் இன்று புதிதாக 3,483 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

 

கேரளத்தில் மேலும் 7,789 பேருக்கு கரோனா

 கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 7,789 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் மேலும் 10,226 பேருக்கு கரோனா; 337 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 10,226 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

சென்னையில் 1,148 பேருக்கு கரோனா : மாவட்டம் வாரியாக

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 3,262 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 4,410 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,410 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 13,488 ஆகக் குறைந்தது

 சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,488 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இது 13,704 ஆக இருந்தது. விரிவான செய்திக்கு..

மகிழ்ச்சியான செய்தி: நாட்டில் கரோனா இரட்டிப்பாகும் காலம் உயர்வு

 கரோனா தொற்று பரவல் நீடிக்கும் நிலையில், மகிழ்ச்சியான வகையில் நாட்டில் கரோனா இரட்டிப்பாகும் காலம் 70.4 நாள்களாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

தில்லியில் மேலும் 3,324 பேருக்கு கரோனா

 தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,324 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் மேலும் 10,552 பேருக்கு கரோனா

 மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 10,552 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 4,462 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 4,462 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 47 சதவீதம் பேர் 60 வயதுக்கும் குறைவானவர்கள்

நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவர்களில் 47 சதவீதம் பேர் 60 வயதுக்கும் குறைவானவர்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

ரஷியாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 14 ஆயிரத்தைத் தாண்டியது

ரஷியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 14,231 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, மொத்த பாதிப்பு 13,40,409 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 239 பேர் உள்பட இதுவரை 23,205 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் தற்போதுவரை 10,39,705 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
மேலும், இன்றைய நிலவரப்படி 2,77,499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று பாதித்தோரில் தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலை தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 24 மணி நேரத்தில் 730 போ் பலி; பாதிப்பு 72,39,390 ஆக உயர்வு

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 730-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். புதிதாக 63,509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 730 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,10,586 ஆக அதிகரித்தது. உயிரிழப்போர் சதவீதம் 1.53 ஆக குறைந்துள்ளது. 
புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக, 63,509 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 72,39,390 -ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 74,632 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 63,01,928-அதிகரித்தது. அதாவது, 87.05 சதவீதம் போ் குணமடைந்தனா்.
நாடு முழுவதும் 8,26,876 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 11.42 சதவீதமாகும். ஆறாவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 9 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்

நாட்டில் இதுவரை 9 கோடியே 90 ஆயிரத்து 122 கரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: ஒரு வாரத்தில் 7 ஆயிரம் பேருக்கு தொற்று

சென்னையில் கடந்த செப்டம்பா் மாதம் கரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7,767 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையும் 13 ஆயிரமாக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா:கேரளத்தில் 3 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

 கேரளத்தில் மேலும் 5,930 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் 83 நாள்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு 4,879- ஆக குறைந்தது

 தமிழகத்தில் 83 நாள்களுக்குப் பிறகு 5 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் 4,879 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தில் 4,622, கர்நாடகத்தில் 8,191 பேருக்கு கரோனா

 ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திக்கு..

சென்னையில் 1,164 பேருக்கு கரோனா : மாவட்டம் வாரியாக

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 3,502 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 4,666 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,666 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

கரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 62 லட்சமாக உயர்வு

 நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 55,342 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 71,75,881 ஆக உயர்ந்தது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 13,756 பேர் கரோனா சிகிச்சையில்; அம்பத்தூரில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

 சென்னையில் கடந்த செப்டம்பா் மாதம் கரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி 13,756 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com