அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

இந்தியாவில் 81 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 லட்சத்தைத் தாண்டியது. 

அமெரிக்காவில் ஒரேநாளில் 91,295 பேருக்கு கரோனா தொற்று; 1,024 பேர் பலி

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 91,295 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் புதிதாக 48,648 பேருக்கு கரோனா; 563 போ் பலி

இந்தியாவில் புதிதாக 48,648 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 723 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,885 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 2,608 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் புதிதாக 2,608 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

கடந்த 200 நாள்களாக கரோனா பாதிக்கப்படாத நாடு

 ஒரு சில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகள் கரோனா தொற்றுப் பரவலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னமும் மீளமுடியாமல் தவித்து வருகின்றன. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் கடந்த 200 நாள்களாக ஒருவருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. விரிவான செய்திக்கு..

'முகக்கவசத்தையே கரோனா தடுப்பூசியாகக் கருதலாம்': சத்யேந்தர் ஜெயின்

 முகக்கவசத்தையே கரோனா தடுப்பூசியாக தில்லி மக்கள் கருத வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு... 

சென்னையில் கரோனா சிகிச்சையில் 7,628 பேர்

 சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 7,628 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 4% ஆகும். விரிவான செய்திக்கு..

ரஷியாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு; 18,283 பேருக்குத் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவில் புதிதாக 18,283 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதுவே சமீபத்தில் அதிகபட்ச ஒருநாள் கரோனா பாதிப்பாகும். விரிவான செய்திக்கு..

இந்தியாவில் புதிதாக 49,881 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 80 லட்சத்தைத் தாண்டியது

இந்தியாவில் இன்று மேலும் 49,881 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் 756 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,896 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 2,652 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் புதிதாக 2,652 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாகக் குறைந்தது

 சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8,096 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 4% ஆகும். விரிவான செய்திக்கு..

கரோனா நோயாளியைக் காக்க உயிரைப் பணயம் வைத்த குஜராத் மருத்துவா்!

 கரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிர நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குஜராத்தைச் சோ்ந்த மருத்துவா் ஒருவருக்கு 34 நாள்கள் எக்மோ சிகிச்சையளித்து சென்னை மருத்துவா்கள் மறுவாழ்வளித்துள்ளனா். தற்போது அவா் பூரண குணமடைந்துள்ளாா். விரிவான செய்திக்கு..

‘கரோனா எதிா்ப்பாற்றல் சில மாதங்களுக்கே நீடிக்கும்’

 கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு உடலில் அந்த நோய்க்கு எதிராகத் தோன்றும் தடுப்பு ஆற்றல் சில மாதங்களுக்கே நீடிக்கும் என்று அண்மையில் பிரிட்டன் விஞ்ஞானிககள் மேற்கொண்ட ஓா் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..

நாட்டில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா; 508 பேர் பலி

 நாட்டில் புதன்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 508 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,828 பேருக்கு கரோனா

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,828 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

நாட்டில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா; 488 பேர் பலி

புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நரத்தில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 488 பேர் பலியாகியுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79,46,429 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 1,19,502 ஆக உள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 6,25,857 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்து சிகிச்சையின் பயனாக 63,842 பேர் குணமடைந்துள்ளனர். எனவே, நாடு முழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 72,01,070 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போது 1 கோடி கரோனா நோயாளிகள்

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.37 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3.21 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 11 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,37,76,587 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,21,79,748 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 11,64,515 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது 1,04,32,324 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 79,051 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

தாராவியில் புதிதாக 11 பேருக்கு கரோனா

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் புதிதாக 4,853 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 4,853 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சீனாவிலிருந்து வரும் தூசிக் காற்றில் கரோனா வைரஸ்: வடகொரியா எச்சரிக்கை

 சீனாவிலிருந்து வரும் தூசுக் காற்றில் கரோனா வைரஸ் கிருமிகளும் கலந்து வரும் என்பதால் மக்கள் இயன்ற வரை எச்சரிக்கையுடன் தங்கள் இருப்பிடங்களிலேயே இருக்க வேண்டும் என வடகொரியா அரசு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஜனவரியில் கரோனா தடுப்பூசி: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் நம்பிக்கை

 கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மக்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி

 நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்தார். பிகார் மாநில மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. கரோனா தொற்று சூழலை பாஜக அரசியலுக்கு பயன்படுத்துகிறதென எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் பிரதாப் சாரங்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.  விரிவான செய்திக்கு..

சென்னையில் மேலும் 695 பேருக்கு கரோனா தொற்று: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 1,827 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 2,522 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 2,522 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com