பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா : செய்திகள் உடனுக்குடன்.
பரவும் கரோனா : செய்திகள் உடனுக்குடன்.

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

உலக அளவில் கரோனா பாதிப்பு 2.59 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,59,00,741 கோடியாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்புகள் 8,61,251 ஆக அதிகரித்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: 
 
புதன்கிழமை காலை நிலவரப்படி, தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,59,00,741 கோடியாகவும், உயிரிழப்பு  8,61,251 ஆக உயர்ந்துள்ளது.  உலக அளவில் அதிகம் கரோனா தொற்று பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 62,57,571 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,496,913 போ் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்புக்கு 25,71,758 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 15,079 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 1,88,900 பேர் உயிரிழந்துள்ளனர்.    
 
கரோனா தொற்று பாதிப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 39,50,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,22,596 உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பை பொறுத்தவரை, இந்தியா 37,66,108 பாதிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் தொற்று பலி 1.88 லட்சத்தைக் கடந்தது

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 1 லட்சத்து 88 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது. 
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
 
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,979 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,57,571-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 1,164 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,88,900 ஆக உயர்ந்துள்ளது. 
 
நாட்டிலேயே அதிகபட்சமாக கலிஃபோா்னியா மாகாணத்தில் 7,16,649 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, 13,165 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெக்ஸாஸில் 6,47,688 பேரும், புளோரிடாவில் 6,31,040 பேருக்கும் அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றைத் தவிர நியூயாா்க்கில் 4,67,448 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 37,69,524-ஆக அதிகரிப்பு

 
புது தில்லி: நாட்டில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 78,357 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 37,69,524-ஆக அதிகரித்தது. 
 
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இதுவரை  29,019,09 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்த பாதிப்பில் இது 76.94 சதவீதமாகும். புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1045 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 66,333 ஆக அதிகரித்துவிட்டது. 
 
இப்போதைய நிலையில் நாடு முழுவதும் 8,01,282 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சமாக இருந்த கரோனா பாதிப்பு, ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சத்தைக் கடந்தது. இப்போது 37,69,524 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,965 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

​சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,965 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 76.98 சதவிகிதமாக உயர்வு!

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 76.98 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மோகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு இதுவரை 158 காவலர்கள் பலி

மகாராஷ்டிர காவல்துறையில் இதுவரை 15,591 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 158 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,990 பேருக்கு கரோனா: மேலும் 98 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,990 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் 4.80 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு

 கரோனா தொற்றுப் பரவலில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 4.80 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதித்திருக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு..

கரோனா: ஐந்து மாநிலங்களில் மட்டும் 65% உயிரிழப்பு

 நாட்டில் ஒரு நாளில் கரோனா பாதித்து பலியானோரின் எண்ணிக்கையில் ஐந்து மாநிலங்களில் மட்டும் 65% மரணங்கள் நிகழ்ந்திருப்பதை மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

அனைவருமே முகக்கவசம் அணிந்தால்.. மருத்துவர் சொல்லும் ரகசியம்

 ஒருவேளை அனைவருமே முகக்கவசம் அணிந்தால், நாடு முழுவதும் 90% பொது முடக்கம் அமல்படுத்துவதால் அடையும் இலக்கை பெற முடியும் என்று மருத்துவர் டி. நாகேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

சென்னை: கரோனா சிகிச்சையில் 13,107 பேர்

 சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 1,20,820 பேர் (88%) குணமடைந்துள்ளனர். 13,107 பேர் அதாவது 10% பேர் சிகிச்சையில் உள்ளனர். விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தைத் தாண்டியது!

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியது. விரிவான செய்திக்கு..

 
 

உலகளவில் கரோனா பாதிப்பு 2.56 கோடியை எட்டியது

 உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.56 கோடியை எட்டியது.  இதுவரை கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 8.54 லட்சமாக உள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் இன்று 69,921 பேருக்கு கரோனா பாதிப்பு 

 இந்தியாவில் இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 69,921 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 37 லட்சத்தை நெருங்குகிறது. விரிவான செய்திக்கு..

கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரத்தில் மட்டும் 43% கரோனா நோயாளிகள்

 இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பில் கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களில் மட்டும் 43% கரோனா நோயாளிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

அரசு தளா்வுகளை அறிவித்தாலும் விழிப்புணா்வோடு இருங்கள்: அமைச்சா் கே.சி.வீரமணி

 தமிழக மக்களின் சிரமங்களைக் கருத்தில்கொண்டு, அதிக அளவு தளா்வுகளை அரசு அறிவித்துள்ளபோதிலும் கரோனா தொற்று பாதுகாப்பு விஷயத்தில் அனைவரும் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும் என மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா். விரிவான செய்திக்கு..

கரோனா நெருக்கடியால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 23.9% பின்னடைவு

 கரோனா நோய்த்தொற்று காரணமாக அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க அறிவிப்புகளால் இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் 23.9 சதவீத பின்னடைவை சந்தித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை ராணுவ தியாகிகளுக்கு இணையாக கருத வேண்டும்: இந்திய மருத்துவ சங்கம்

 கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களை ராணுவ தியாகிகளுக்கு இணையாக கருதுவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

பிற மாவட்டங்களில் 4,844; சென்னையில் 1,084: மாவட்டவாரியாக கரோனா நிலவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,844 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,928 பேருக்கு தொற்று; மேலும் 96 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,928 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.1, செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 96 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com