அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

மகாராஷ்டிரத்தில் புதிதாக 19,218 பேருக்கு கரோனா; 378 பேர் பலி

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலில், இன்று 19,218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,63,062 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகம், ஆந்திரம் கரோனா நிலவரம்

ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் கரோனா பாதித்தோர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,776 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,280 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் புதிதாக 2,479 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 2,479 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 992 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,984 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் இன்று 5,976 பேருக்கு கரோனா தொற்று உறுதி; மேலும் 76 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,976 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.4, வெள்ளிக் கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 76 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..
 

கரோனா பாதித்தவரகளில் 2% பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில்

 நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 40 லட்சத்தை நெருங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 30 லட்சம் பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

சென்னையில் குணமடைந்தோர் விகிதம் 89% ஆக உயர்வு

 சென்னையில் கரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 89% ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 12,059 பேர் (9%) சிகிச்சை பெற்று வருகிறார்கள். விரிவான செய்திக்கு..

தெலங்கானாவில் புதிதாக 2,817 பேருக்கு கரோனா: மேலும் 10 பேர் பலி

 தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,817 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும்  10 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 38 லட்சத்தை தாண்டியது

 இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை புதன்கிழமை 38 லட்சத்தை கடந்தது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, நாட்டில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான நேரத்தில் புதிதாக 83,883 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,53,407-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், வியாழக்கிழமை காலை வரை கரோனா பாதிப்பிலிருந்து 68,584 பேர் குணமடைந்ததை அடுத்து  குணமடைந்தோா் எண்ணிக்கை  29,70,493 -ஆக உயா்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 76.98 சதவீதம் ஆகும். கரோனாவுக்கு புதிதாக 1,043 போ் பலியானதையடுத்து, மொத்தமாக அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 67,376-ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 1.76 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் 8,15,538 போ் (21.26 சதவீதம்) சிகிச்சையில் உள்ளனா்.

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் தான் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,02,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே நாட்டிலேயே அதிகபட்ச பாதிப்பாகும்.  

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்ட தகவல்படி, கடந்த 2-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 4,55,09,380 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 11,72,179 பரிசோதனைகள் புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.

பாதிப்பு: 38,53,407
பலி: 67,376
குணமடைந்தோர்:  29,70,493
சிகிச்சை பெற்று வருவோர்: 8,15,538 

சென்னையில் 968 பேர்; பிற மாவட்டங்களில் 4,924 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,924 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 5,892 பேருக்கு கரோனா; மேலும் 92 பேர் பலி

 தமிழகத்தில் புதிதாக 5,892 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.3, வியாழக் கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 92 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் புதிதாக 4,995 பேருக்கு கரோனா தொற்று உறுதி; மேலும் 114 பேர் பலி

ரஷியாவில் புதிதாக 4,995 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 114 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

 

கரோனா: பாகிஸ்தானில் 8,761 பேர் சிகிச்சையில் உள்ளனர்

பாகிஸ்தானில் புதிதாக 424 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,97,014 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com