வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பரபரப்பு

அதிமுக மற்றும் திமுக சார்பில் வேட்பாளர்கள் வாக்கு சாவடிக்குள் வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வதை கண்டித்து வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பரபரப்பு

அதிமுக மற்றும் திமுக சார்பில் வேட்பாளர்கள் வாக்கு சாவடிக்குள் வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வதை கண்டித்து வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இதில் போட்டியிடும் திமுகவைச் சேர்ந்த சில வேட்பாளர்கள் வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

மதுரை ஒத்தக்கடை ஊராட்சியை சேர்ந்த அதிமுக வின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன் என்பவர் திடீரென வாக்கு மையத்தை பூட்டினார். இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு செய்தியாளரிடம் பேசிய கிருஷ்ணன், திமுகவைச் சேர்ந்த சிலர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் அத்துமீறி பிரசாரம் செய்து வருகின்றனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகையால், ஜனநாயகத்தை காப்பாற்ற வாக்கு மையத்துக்கு பூட்டு போடுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார்.

பிறகு உள்ளே வந்த போலீஸார், வாக்குச் சாவடிக்குள் இருந்த அனைத்து கட்சியின் வேட்பாளர்களையும் உடனடியாக வெளியேற்றினர். 

அப்பகுதி வாக்குச்சாவடிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்த மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது,

விதிகளை மீறி வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்கு சேகரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிகபட்சமாக வாக்குச் சாவடிக்குள் விதிகளை மீறி வாக்கு சேகரிப்பது புகார்கள் எழுந்துள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com