Enable Javscript for better performance
கள்ள ஓட்டு சர்ச்சை: மதுரை அருகே வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    கள்ள ஓட்டு சர்ச்சை: மதுரை அருகே வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்

    By லெனின் பாலு  |   Published on : 30th December 2019 10:54 AM  |   அ+அ அ-   |    |  

    vote_id

    கோப்புப் படம்

     

    மதுரையில் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லப் பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, கல்லிக்குட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்நிலையில், சேடப்பட்டி ஒன்றியம் அய்யம்பட்டி ஊராட்சியில்  வாக்குச் சீட்டில் தேர்தல் அதிகாரிகள் வைத்த சீல் ஒரு பக்கத்திலிருந்து தெரிந்தால், கள்ள ஓட்டு போடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. எனவே அங்கு வாக்குப்பதிவு தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து, புதிய வாக்குச் சீட்டுகள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai