குமரி மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் குருந்தங்கோடு மேல்புறம், திருவட்டாரு, தக்கலை, இராஜாக்காமங்கலம், ஆகிய 5 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கடந்த 27ஆம் தேதி முதல்கட்ட வாக்குபதிவு நடைபெற்
குமரி மாவட்டத்தில் 4  ஊராட்சி ஒன்றியங்களில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் குருந்தங்கோடு மேல்புறம், திருவட்டாரு, தக்கலை, இராஜாக்காமங்கலம், ஆகிய 5 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கடந்த 27ஆம் தேதி முதல்கட்ட வாக்குபதிவு நடைபெற்றது.

இப்பகுதிகளில் 65.93 சதவீத வாக்குகள் பதிவாகின. இதைத்தொடர்ந்து 2ஆம் கட்டமாக அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், முன்சிறை, தோவாலை ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இன்று 2ஆம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த 2 ஆம் கட்டத் தேர்தலில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 298 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 388 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் அகஸ்வரம், கிள்ளியூர், முன்சிறை, தேவாளை ஆகிய 4 ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com