மதுரையில் வேட்பாளரின் மனைவி பெயர் வாக்குப்பதிவு பட்டியலில் இருந்து நீக்கம்

திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லப் பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, கல்லிக்குட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடைபெறுகிறது.
மதுரையில் வேட்பாளரின் மனைவி பெயர் வாக்குப்பதிவு பட்டியலில் இருந்து நீக்கம்

திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, செல்லப் பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, கல்லிக்குட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடைபெறுகிறது.

1,093 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 220  பதற்றமானவயாக கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறும் 2,123 பதவிகளுக்கு மொத்தமம் 5,71,072 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில் ஏற்கனவே 538 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எனவே 1,585 பதவிகளுக்கு 4,652 பேர் போட்டியிடுகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 8.12 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி ஊராட்சி உள்ளாட்சி தேர்தலில் 5-ஆவது வார்டில் பலர் தங்களுக்கு வாக்கு இல்லையென மாவட்ட ஆட்சியர் வினயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விளாச்சேரியில் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாண்டி என்பவரின் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட பலரின் பெயர் இரவோடு இரவாக நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com