சுடச்சுட

  
  fruit

  தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த காய்கனி சிற்பக்கலைஞர் ஒருவர், வரும் மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குகளை, பதிவு செய்ய வேண்டும் என்று தர்ப்பூசணி பழத்தில் செய்த சிற்பம் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
   மக்களவைச் தேர்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இதை அறிந்த கூடலூரைச் சேர்ந்த காய்கனி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன், தரிபூசணி பழத்தில் தேர்தல் ஆணையத்தின் சின்னம் மற்றும் விழிப்புணர்வு வாசகத்தை செதுக்கி பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளார். இந்த தர்ப்பூசணி சிற்பம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai