தேர்தல் நடத்தை விதிகள் அமல்: இனி அரசியல் கட்சிகள் என்னவெல்லாம் செய்ய முடியாது?

இந்தியாவில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்: இனி அரசியல் கட்சிகள் என்னவெல்லாம் செய்ய முடியாது?


இந்தியாவில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் இனி அரசியல் கட்சிகள் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதைப் பார்க்கலாம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் மத்திய, மாநில அரசுகளைக் கண்காணிக்கும் அதிகாரம் தற்போது தேர்தல் ஆணையத்துக்கு வரும். அதில்லாமல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்.

தேர்தல் நடத்தை விதி என்பது பொது நடத்தை, கூட்டங்கள், ஊர்வலம் அல்லது பேரணி, வாக்குப்பதிவு நடைபெறும் நாள், வாக்குச் சாவடிகள், தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியில் இருக்கும் கட்சி மற்றும் தேர்தல் அறிக்கைகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும்.

தேர்தல் பொது நடத்தை என்பது, வேட்பாளர்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்களின் கொள்கை மற்றும் திட்டங்கள் குறித்து விமரிசிக்கலாமே தவிர இனி ஜாதி, மதம் ரீதியாக விமரிசிக்கக் கூடாது.

பொய்யான விஷயங்களைக் கூறுவதோ வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதோ கூடாது.

கூட்டங்கள் என்றால், அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தும் போது காவல்துறையினரிடம் முன் அனுமதி பெற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

கொடும்பாவி எரிப்பது போன்றவை செய்யக் கூடாது. ஒரே இடத்தில் இருவேறு கட்சிகளின் கூட்டம் நடக்கக் கூடாது.

வாக்குப்பதிவின் போது அரசியல் கட்சியினர் அவரவர் சின்னம் பொறித்த பேட்ஜ்களை அணிந்திருக்க வேண்டும்.

வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடத்துக்கு 100 மீட்டர் தூரத்துக்குள் வாக்காளர்களிடம் கட்சிகள் பிரசாரம் செய்யவேக் கூடாது போன்றவை உடனடியாக அமலுக்கு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com