மக்களவைத் தேர்தல்: இதுவரை193 வேட்பு மனுக்கள் தாக்கல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 193 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிமுக, திமுக சார்பில் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
மக்களவைத் தேர்தல்: இதுவரை193 வேட்பு மனுக்கள் தாக்கல்


மக்களவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 193 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிமுக, திமுக சார்பில் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-இல் தொடங்கியது. வெள்ளிக்கிழமை (மார்ச் 22) நிலவரப்படி 39 தொகுதிகளிலும் 193 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், தென் சென்னை தொகுதியில் ஜெ.ஜெயவர்த்தன் (அதிமுக), மத்திய சென்னையில் சாம்பால் (பாமக), வடசென்னையில் அழகாபுரம் மோகன்ராஜ் (தேமுதிக), வேலூரில் ஏ.சி.சண்முகம் (அதிமுக), ஆரணியில் ஏழுமலை (அதிமுக), விழுப்புரத்தில் வடிவேல் ராவணன் (பாமக), கள்ளக்குறிச்சியில் சுதீஷ் (தேமுதிக), சேலத்தில் எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக), திருப்பூரில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக), மதுரையில் சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்), தேனியில் ரவீந்திரநாத் (அதிமுக), கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் முக்கிய பிரமுகர்கள் ஆவர். 
இதேபோன்று, கடலூர், சிதம்பரம், திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் போட்டியிட அளிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 161 ஆண்களும், 32 பெண்களும் உள்ளனர். இந்த மனுக்களில் மாற்று வேட்பாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட வேட்பு மனுக்களும் அடங்கும்.
பேரவை இடைத் தேர்தல்: தமிழகத்தில் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட இதுவரை 71 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 9 மனுக்களும், பெரியகுளத்தில் 7 மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன. மிகக்குறைவாக பாப்பிரெட்டிபட்டி, மானாமதுரை, பரமக்குடி ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com