கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது. 
கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?


கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது. 

17-ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் இரண்டாவது கட்ட தேர்தலாக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்கிழமை) நிறைவடைந்தது.

இதில், தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் போட்டியிடுகிறார். 

வசந்தகுமார்:

இதில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த சொத்து பட்டியலின்படி 2017-18 நிதியாண்டில் அவரது வருமானம் ரூ. 28 கோடி ஆக உள்ளது. அவரது மொத்த சொத்துகள் ரூ. 412 கோடி. அசையும் சொத்து ரூ. 230 கோடி மற்றும் அசையா சொத்து ரூ.182 கோடி ஆகும். அவருடைய மனைவி பெயரில் உள்ள மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 5 கோடி ஆகும்.     

பொன்.ராதாகிருஷ்ணன்:

பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வருமானம் 2017-18 நிதியாண்டில் ரூ. 7 லட்சமாக உள்ளது. இதுவே 2016-17 நிதியாண்டில் அவரது வருமானம் 14 லட்சமாக இருந்துள்ளது. அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 7.49 கோடி ஆகும். அசையும் சொத்து மதிப்பு ரூ. 50 லட்சம். அசையா சொத்து மதிப்பு ரூ. 6.99 கோடி ஆகும். 

எபினேசர்:

மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்த தொகுதியில் எபினேசர் போட்டியிடுகிறார். 2017-18 நிதியாண்டில் இவருடைய வருமானம் ரூ. 5.31 லட்சம் ஆகும். இவரது அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 2 கோடி ஆகும். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 36 லட்சமாகும். 

இதன்மூலம், கன்னியாகுமரி தொகுதியில் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

2014 மக்களவைத் தேர்தல் விவரம்: 

கடந்த 2014 மக்களவைத் தேர்தலிலும், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தான் போட்டியிட்டனர். கடந்த தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்றிய போதும் கன்னியாகுமரி மற்றும் தருமபுரி தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் தான் வெற்றி பெற்றார்.

அந்த தேர்தலில் அவர் ரூ. 3.72 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வசந்தகுமார் 2.44 லட்சம் வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் 1.76 லட்சம் வாக்குகளும், திமுக வேட்பாளர் 1.17 வாக்குகளும் பெற்று முறையே 3 மற்றும் 4-ஆவது இடங்களை பிடித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com