Enable Javscript for better performance
அந்த முதல் தேர்தல்: பி.கே.பங்காருசாமி நாயுடு- Dinamani

சுடச்சுட

    
    bangarusamy

    வேட்பாளரிடம் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை உள்ளதா? அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியுமா? அரசிடம் தொகுதிக்குத் தேவையானத் திட்டங்களைப் பெற்றுத் தருவாரா? என்பதை மட்டுமே  அன்றைய மக்கள் எதிர்பார்த்தனர். இன்றைக்கு உள்ளதுபோல, இலவசங்களையோ, பணத்தையோ  எதிர்பார்க்கவில்லை. 
    வாக்கு கேட்டு வரும் வேட்பாளருடன் அப்பகுதியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரும் வருவர். இவ்வாறு வருபவர்களுக்கு  அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் உப்புமா, சாப்பாடு, டீ, காபி, மோர், பலகாரங்களை வழங்கி உபசரிப்பார்கள். வேட்பாளர்கள் ஒரு கிராமத்துக்கு வந்து  விட்டு, எதுவும் சாப்பிடாமல் சென்றால் அது அக்கிராமத்துக்கு அவமரியாதை செய்ததைப்போல கருதுவார்கள்.
    மேலும்  பிரசாரத்தில் ஈடுபடும் கட்சியினருக்கு, வேட்பாளரோ அல்லது கட்சித் தலைமையோ எந்தவிதமான பண  உதவியும் அளிக்காது. ஆனால், இன்றைக்கு தகுதியுடையவர்கள் போட்டியிட முடியாத அளவுக்கு தேர்தலில் பணம் செலவு செய்ய வேண்டியதுள்ளது. வசதிபடைத்தவர்கள் மட்டுமே, வார்டு கவுன்சிலர் முதல் எம்.எல்.ஏ., எம்.பி., தேர்தல் வரை போட்டியிட முடியும் என்கிற நிலை உருவாகி இருப்பது வேதனை அளிக்கிறது.
    -பி.கே.பங்காருசாமி நாயுடு (88), 
    வணிகர், கடை வீதி, பல்லடம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai