Enable Javscript for better performance
18-ஆவது முறையாக படையெடுக்கும் முதியவர்: சின்னப்பொன்னு வாத்தியார்- Dinamani

சுடச்சுட

    

    18-ஆவது முறையாக படையெடுக்கும் முதியவர்: சின்னப்பொன்னு வாத்தியார்

    By DIN  |   Published on : 28th March 2019 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chinaponnu

    ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள சின்னப்பொன்னு வாத்தியார் என்ற 78 வயது முதியவர் , தொடர்ந்து தோற்றாலும் 18-ஆவது முறையாகத் தேர்தலில் இந்த முறையும் போட்டியிடுகிறார்.   
    ஈரோடு மாவட்டம், நசியனூரைச் சேர்ந்தவர் சின்னபொன்னு வாத்தியார். அகில இந்திய அம்பேத்கர் மக்கள் சக்தி இயக்கத்தின் தேசியத் தலைவராக உள்ளார். இவர் இதுவரை சட்டப் பேரவைத் தேர்தலில் 7 முறையும், மக்களவைத் தேர்தலில் 10 முறையும் போட்டியிட்டுள்ளார்.
    தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து சின்னப்பொன்னு வாத்தியார் கூறியதாவது:
    தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சிறந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது லட்சியம். ஏழைகளுக்கானத் திட்டங்கள், உரியவர்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும். அதோடு, தேர்தல் குறித்த விழிப்புணர்வு  மக்களிடையே ஏற்பட வேண்டும். தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். அதற்காகவே ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களில் மொத்தம் 17 முறை போட்டியிட்டுள்ளேன். இப்போது 18-ஆவது முறையாக இங்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன் என்றார் சின்னப்பொன்னு வாத்தியார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai