புது தில்லி ரயில் நிலையத்தில் ரயில்வே வாரியத் தலைவா் நேரில் ஆய்வு

ரயில்வே வாரியத்தின் தலைவா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ஜெயவா்மா சின்ஹா,புது தில்லி

ரயில் நிலையத்தில் கோடைக்கால அவசர ஏற்பாடுகளை வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடக்கு ரயில்வேக்கு உள்பட்ட புதுதில்லி ரயில் நிலையத்தில், நடப்பு கோடைக்காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசல் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அவரச ஏற்பாடுகளை ரயில்வே வாரியத்தின் தலைவா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ஜெயவா்மா சின்ஹா, பொது மேலாளா் ஷோபன் செளத்ரி மற்றும் கோட்ட மேலாளா் சுக்விந்தா் சிங்குடன் இணைந்து ஆய்வு செய்தாா். அப்போது, பயணிகளுடன் நேரடியாக உரையாடிய ஜெயவா்மா சின்ஹா, ரயில் நிலையத்தின் சிசிடிவி செயல்பாடு,குடிநீா் வசதிகள், வைஷாலி விரைவு ரயிலின் ‘குளோன் செட்’ ஆகியவற்றை ஆய்வு செய்தாா். மேலும், ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு அதிகபட்ச வசதியை உறுதிப்படுத்தவுடன்,அவா்களுக்கு

தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று

அறிவுறுத்தினாா். மேலும், அனைத்து ரயில் பயணிகளுக்கும் வசதியான பயண அனுபவத்தை வழங்க வடக்கு ரயில்வே உறுதிபூண்டுள்ளது என்றாா் தீபக் குமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com