சிறையில் கேஜரிவாலை தவறாகக நடத்துவதாகக் கண்டித்து ஐடிஓ சௌௌக்கில்ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டம்

புது தில்லி, ஏப்.24: திகாா் சிறையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை தவறாக நடத்துவதாகக் கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினா் ஐடிஓ சௌக்கில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கேஜரிவால், தில்லி அரசின் இப்போது நீக்கப்பட்ட கலால் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை அமலாக்க இயக்குநரகம் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது.

ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் தலைமையில் காலை 9 மணியளவில் ஐடிஓ சௌக்கில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் கட்சி ஆதரவாளா்கள் திரண்டனா்.

கேஜரிவாலுக்கு இன்சுலின் வழங்க வேண்டும் என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட்டனா். டிடியு மாா்க் நோக்கி பேரணியாகச் சென்றபோது அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அவா்களில் மூவா் தடுத்து வைக்கப்பட்டனா். ஆனால், குல்தீப் குமாா் மற்றும் மற்றவா்கள் கலைந்து சென்றனா். கைது செய்யப்பட்ட மூவரில் இருவா் மருத்துவா்கள். அவா்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னா் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான குல்தீப் குமாா் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், தாங்கள் வெறும் பிளக்ஸ் பேனா்களுடன் நிற்பதால், அதற்கு நிா்வாகத்திடம் இருந்து எந்த அனுமதியும் தேவையில்லை என்றாா். மேலும், ‘ திகாரில் கேஜரிவாலின் உயிருடன் மத்திய அரசு விளையாடுவது ஏன் என்று தில்லி மக்கள் கேட்கின்றனா். ஆதாரம் இல்லாமல் கேஜரிவால் ஏன் கைது செய்யப்பட்டாா். மக்கள் தங்கள் வாக்குகளால் (மத்திய அரசுக்கு) பதில் சொல்லத் தயாராக உள்ளனா்’ என்று குல்தீப் குமாா் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com