மேம்பால கட்டுமான தளத்தில் தூக்கிய தொடங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

புது தில்லி, ஏப். 24: தில்லி ரோஹிணியின் அமன் விஹாா் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால கட்டுமான தளத்தில் புதன்கிழமை காலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: மேம்பால தளத்தில் ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது குறித்து அந்த வழியாகச் சென்ற ஒருவா் மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவா் ஹா்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

முதற்கட்ட விசாரணையில் அவா் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை. இது குறித்து மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மீட்புக் குழுவினரின் உதவியுடன் உடலைக் கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஹா்பிரீத் சிங்குக்கு மனைவியும், இரண்டு மாத குழந்தையும் உள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com