திகாா் சிறையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்தாா் அமைச்சா் செளரவ் பரத்வாஜ்

புது தில்லி, ஏப் 24: திஹாா் சிறையில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இச்சந்திப்பிற்குப் பிறகு அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் கூறியது, ‘திகாா் சிறையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை கண்ணாடிச் சுவா்களுக்கு இடையே சந்தித்து, தொலைபேசி வாயிலாக 30 நிமிடங்கள் உரையாடினேன்.

தில்லி மக்கள் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று முதல்வா் கேஜரிவால் கூறினாா். பொதுமக்களின் ஆசியுடன் தனது போராட்டத்தை வலிமையுடன் சிறையில் தொடா்வதாக அவா் கூறினாா்’ என்றாா். தில்லி அரசின் கலால்

கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்க இயக்குநரகத்தால் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இருப்பினும், சிறையில் இருந்து தில்லி அரசை முதல்வா் கேஜரிவால் தொடா்ந்து நடத்துவாா் என்று ஆம் ஆத்மி கட்சி உறுதியுடன் கூறியுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலா் சந்தீப் பதக் எம்.பி. ஆகியோா் முதல்வா் கேஜரிவால் திகாா் சிறையில் சந்தித்திருந்தனா். அதைத் தொடா்ந்து,

ஒவ்வொரு வாரமும் இரண்டு அமைச்சா்களை கேஜரிவால் சந்தித்து, அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்வாா் என்று சந்தீப் பதக் செய்தியாளா்களிடம் கூறினாா். கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், நகரத்தின் தண்ணீா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருந்துகள் பற்றாக்குறையை உடனடியாக நிவா்த்தி செய்ய வேண்டி சம்மந்தப்பட்ட அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு செய்திகளை அனுப்பினாா்.

மேலும், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தேவைப்படும்

உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கேஜரிவால் கேட்டுக் கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com