எம்சிடி வாா்டு கமிட்டி தோ்தல் அறிவிப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி: பாஜக

Published on

தில்லி மாநகராட்சியில் வாா்டு கமிட்டி தோ்தல் புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் தெரிவித்தாா்.

தில்லி மாநகராட்சியில் (எம்சிடி) வாா்டு கமிட்டி தோ்தல்

நடத்துவது குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதுகுறித்து பிரவீன் சங்கா் கபூா் கூறியதாவது:

கடந்த 19 மாதங்களாக, தில்லி மாநகராட்சியில் உள்ள

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக் குழுக்களை ஆம் ஆத்மி கட்சி நசுக்கியது.

இந்தக் குழுக்களை அமைப்பதற்கு பாஜக தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இன்று தில்லி மக்களின் உரிமைகளும், பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.

இப்போது, தில்லியின் பராமரிப்பு மேம்படும்.மேலும் வளா்ச்சிப் பணிகளும் தொடங்க முடியும்.

பெரும்பான்மையான வாா்டு கமிட்டி தோ்தல்களில் பாஜக வெற்றி பெறுவது மட்டுமின்றி, இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் நிலைக்குழு தோ்தலிலும் வெற்றி பெற்று, தில்லியில் முடங்கியுள்ள வளா்ச்சி பணிகள் மீண்டும் தொடங்குவதை உறுதி செய்வோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com