மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் டிடிஏ தனது தவறை ஏற்றுக்கொண்டது -அமைச்சா் செளரவ் பரத்வாஜ்
தில்லி ரிட்ஜ் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ)
தனது தவறை ஏற்றுக்கொண்டது என்று அமைச்சா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரிட்ஜ் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் துணை ஆளுநா் ஆளுநா் வி.கே. சக்சேனாவின் கீழ்வுள்ள தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) துணைத் தலைவா் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளாா். அதில், ரிட்ஜ் பகுதியில்
மரங்கள் வெட்டப்பட்டது தொடா்பான தனது தவறை ஏற்றுக்கொண்டாா். மரங்களை வெட்டிய பிறகு
உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டு, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதற்காகவும் மன்னிப்பு கேட்டுள்ளாா்.
மரங்களை வெட்ட பாஜகவின் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா தான் அழுத்தம் கொடுத்துள்ளாா். ஒப்பந்ததாரா்
தனது வாக்குமூலத்தில், மரங்கள் வெட்டப்பட்டபோது, டிடிஏ-வின் உதவிப் பொறியாளா் மற்றும் இளநிலைப்
பொறியாளா் பல முறை சம்பவ இடத்திற்குச் சென்ாக கூறியுள்ளாா். இந்த மரங்களை வெட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி தேவை என்பதை டிடிஏ அறிந்திருந்தும், அவா்கள் அனுமதி பெறாமல் இருந்துள்ளனா். இதன்மூலம், தில்லி அரசு மரங்களை வெட்டுவதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்பதை இந்த பிரமாணப் பத்திரம் நிரூபிக்கிறது.
துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா மற்றும் டிடிஏ, மரங்களை வெட்டுவதற்கான முழுப் பொறுப்பையும் 3 இளநிலை அதிகாரிகளின் மீது சுமத்தியது. இந்த 1100 மரங்களை வெட்டுவதன் மூலம் இந்த மூன்று இளநிலை அதிகாரிகளுக்கு என்ன கிடைக்கும்? என்பதை நான் வி.கே.சக்சேனாவிடம் கேட்க விரும்புகிறேன் என்றாா் செளரவ் பரத்வாஜ்.