தில்லி ரன்ஹோலாவில் வீட்டில்
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்
பெண் சடலம் மீட்பு

தில்லி ரன்ஹோலாவில் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு

தில்லியின் ரன்ஹோலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 30 வயதுப் பெண்ணின் சடலம்
Published on

தில்லியின் ரன்ஹோலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 30 வயதுப் பெண்ணின் சடலம் வியாழக்கிழமை அதிகாலை கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பெண் ஒருவருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகவும், அவா் காணாமல் போனதாகவும் அவா்கள் தெரிவித்தனா். அவா்கள் திருமணம் செய்து கொண்டாா்களா என்பது இன்னும் சரிபாா்க்கப்படவில்லை.

வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இது தொடா்பாக அழைப்பு வந்ததாகவும், போலீஸ் குழுவினா் வீட்டில் இருந்து அவரது உடலை மீட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். அந்த நபரின் நடமாட்டத்தை கண்டறிய சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com