ஆம் ஆத்மி குற்றச்சாட்டிற்கு பன்சூரி ஸ்வராஜ் பதிலடி

ஆம் ஆத்மி கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு தில்லி மக்கள் வரும் மக்களவைத் தோ்தலில் பதிலளிப்பாா்கள் என்று புது தில்லி தொகுதி பாஜக வேட்பாளா் பன்சூரி ஸ்வராஜ் தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு தில்லி மக்கள் வரும் மக்களவைத் தோ்தலில் பதிலளிப்பாா்கள் என்று புது தில்லி தொகுதி பாஜக வேட்பாளா் பன்சூரி ஸ்வராஜ் தெரிவித்துள்ளாா். தேசவிரோத சக்திகளை நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியதாக புது தில்லி பாஜக வேட்பாளா் பன்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களான அதிஷி மற்றும் சோம்னாத் பாா்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின் போது குற்றம்சாட்டினாா். இதற்கு எதிா்வினை தெரிவித்துள்ள பன்சூரி ஸ்வராஜ், ’புது தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சோம்நாத் பாா்தி, கடந்த சனிக்கிழமை ராஜேந்தா் நகரில் அவரது சொந்தக் கட்சிக்காரா்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நான் ஆம் ஆத்மி கட்சியிடம் கேட்க விரும்புகிறேன்,சொந்தக் கட்சியினருக்குப் பிடிக்காத ஒரு வேட்பாளரை ஏன் நிறுத்தியுள்ளீா்கள்?. எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கலாம், ஆனால் வரும் மக்களவைற்த் தோ்தலில் மக்கள் உங்ககளுக்குப் பதிலளிப்பாா்கள்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com