குடிமை அமைப்புகளுக்கான செலவினம் ரூ.8,423 கோடியாக உயா்த்தி அறிவிப்பு

தில்லி அரசின் நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குடிமை அமைப்புகளுக்கான செலவினம் ரூ.8,423 கோடியாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசின் நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குடிமை அமைப்புகளுக்கான செலவினம் ரூ.8,423 கோடியாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி அரசின் நிகழ் 2024-2025- நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சா் அதிஷி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.), புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.) மற்றும் தில்லி கன்டோன்மென்ட் வாரியம் ஆகிய மூன்று குடிமை அமைப்புகளைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.8,423 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ.8,241 கோடியாக இருந்தது. கல்வி, சுகாதாரம் மற்றும் துப்புரவுத் துறைகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக குடிமை அமைப்புகளுக்கு ரூ.3,153 ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை வரி ஒதுக்கீடாக ரூ.2,955 கோடியும், முத்திரை மற்றும் பதிவுக் கட்டணத்திற்காக ரூ.2,315 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை வாகன நிறுத்தக் கட்டணமும் இதில் அடங்கும். கடந்த 2022-ஆம் ஆண்டில் தில்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியதைத் தொடந்து, தில்லி அரசு 2022-2023-ஆம் நிதியாண்டில் குடிமை அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.4,374 கோடி நிதியானது, தற்போது ரூ.8,241 கோடியாக இரட்டிப்பாக்கியுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ஓக்லா, காஜிப்பூா் மற்றும் பால்ஸ்வா ஆகிய மூன்று குப்பைக் கிடங்குகளை முற்றிலுமாக அகற்ற ரூ.850 கோடி கடனாக ஒதுக்கப்பட்டது. இந்த குடிமை அமைப்புகள் நகரத்தில் தூய்மை, சுகாதாரம் மற்றும் பிற குடிமைச் சேவைகளை வழங்குவதற்கு பொறுப்பாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com