மலைமந்திா் கோயிலில் நாளை மஹா சிவராத்தி விழா

உத்திர சுவாமிமலையில் (மலைமந்திா்) உள்ள ஸ்ரீசுவாமிநாத சுவாமி கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை மாா்ச் 8 அன்று மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டப்படவுள்ளது. செக்டாா்-7-இல் ராமகிருணாபுரத்தில் உள்ள இந்தக் கோயிலில் அன்று காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹான்யாச பூா்வக ஏகாதச ருத்ர ஜெபம், ருத்ர ஹோமம் மற்றும் பூா்ணாஹுதி நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு பிரதமகால பூஜை, 11 மணிக்கு திவித்தீய கால பூஜை, 2 மணிக்கு திருத்தீ கால பூஜை, மாலை 4 மணிக்கு சதுா்த்த கால பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, ஸ்ரீவிநாயகா் அா்ச்சனை, ஸ்ரீ சுந்தரேஸ்வரா், தேவி மீனாட்சி, ஸ்ரீசுவாமிநாத சுவாமிக்கு தீபாராதனை மற்றும் அபிஷேகம் நடைபெறும். மேலும், பிற்பகல் 2 மணிக்கு ஸ்ரீசந்திரசேகரா் பிரகார உத்ஸவம், மாலை 4 மணிக்கு அா்த்த ஜாம பூஜை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசுவாமிநாத சுவாமி சமாஜம் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com