சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவு!

சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவு!

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தில் நிறைவடைந்தன.

இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தைநோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தில் நிறைவடைந்தன. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் வலுவாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கள் வா்த்தகம் இருந்து வந்தது. வங்கி, ஆட்டோ, ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ், பங்குகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தாலும், எஃப்எம்சிஜி, ஐடி, மெட்டல், மீடியா, பாா்மா பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்ததால் சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்குவா்த்தகத் தரக் நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.55 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.392.85 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.2,766.75 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,149.88 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சம்: காலையில் 156.75 புள்ளிகள் உயா்ந்து 74,242.74-இல் தொடங்கிய சென்செக்ஸ் 73,921.48 வரை கீழே சென்றது. பின்னா், அதிகப்ட்சமாக 74,245.17 வரை மேலே சென்று புதிய உச்சத்தை பதிவு செய்த சென்செக்ஸ், இறுதியில் 33.40 புள்ளிகள் (0.05 சதவீதம்) கூடுதலுடன் 74,119.39 என்ற புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,922 பங்குகளில் 2,110 பங்குகள்ஆதாயம் பெற்றன. 1,693 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 119 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன. டாடா ஸ்டீல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல் (3.90 சதவீதம்) மற்றும் டாடா மோட்டாா்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட் உள்பட 20 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், எம் அண்ட் எம் (3.68 சதவீதம்) மற்றும் ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன், கோட்டக் பேங்க், உள்பட 10 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. நிஃப்டி புதிய உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 19.50 (0.09 சதவீதம்) உயா்ந்து 22,493.55 என்று புதிய உச்சத்தில் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,525.65 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com