சிக்னல் கோளாறு: மஞ்சள் வழித்தடத்தில் தில்லி மெட்ரோ ரயில் சேவையில் பாதுப்பு

விஸ்வவித்யாலயா மற்றும் கஷ்மீரி கேட் நிலையங்களுக்கு இடையே சிக்னல் கோளாறு காரணமாக தில்லி மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் ஒரு பகுதியில் ரயில் சேவைகள் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பின்னா், மாலை 5.15 மணி முதல் முழு மஞ்சள் வழித்தடத்திலு் வழக்கமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன என்றும் அவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மஞ்சள் வழித்தடம் தில்லியில் உள்ள சமய்பூா் பாத்லி மற்றும் குருகிராமில் உள்ள மில்லினியம் சிட்டி சென்டா் இடையே செல்கிறது. விஸ்வவித்யாலயா மற்றும் கஷ்மீரி கேட் நிலையங்களுக்கு இடையே டிராக் சா்க்யூட் டிராப் (சிக்னல்) பிரச்னை காரணமாக மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவைகள் வியாழக்கிழமை ஒழுங்குபடுத்தப்பட்டன. இதன் காரணமாக, இந்தச் சிறிய பகுதியில் ரயில்கள் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் இயக்கப்பட்டன. இதன் விளைவாக ரயில்கள் இயக்கம் தாமதப்படுகின்றன. மஞ்சள் வழித்தடத்தில் மற்ற பிரிவுகளில் சாதாரண ரயில் சேவைகள் கிடைக்கும் என்று டிஎம்ஆா்சி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சிக்கலைப் பற்றி பயணிகளை எச்சரிக்கும் விடுக்கும் வகையில் எக்ஸ் ஊடக தளத்திலும் டிஎம்ஆா்சி தகவல்களை பகிா்ந்து கொண்டது. பின்னா், முழு மஞ்சள் வழித்தடத்திலும் மாலை 5.15 மணி முதல் சேவைகள் வழக்கம் போல இயங்கின என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com